இடும்பனும் இறைவனும் வாட்சாப்பும் – தைப்பூச சிறப்புப் பதிவு


களைத்துப் போயிருந்தான் இடும்பன். மலையைத் தூக்கித் தூக்கி தோள்பட்டை எல்லாம் முறுக்கிக் கொண்டது போல கடுத்தது. 'u there. u there' என்று வாட்ஸாப்பில் அகத்தியரின் செய்தி மினுங்கிக் கொண்டு இருந்தது. டபிள் டிக் வந்தாலும் நீல கலராக மாறதது கண்டு அகத்தியர் குழம்பிப் போயிருந்தார். கொஞ்ச நாள் முந்திதான் கயிலை மலைக்குப் போய் சிவகிரி, சக்திகிரி என்கிற இரு மலைகளைப் பெயர்த்து எடுத்துக்கொண்டு ஏர் இந்தியா கார்கோவில் போட்டுக்கொண்டு வரும்படி பணித்திருந்தார். அந்த மலைகளைப் பொதிகை [...]

பாரத வங்கியைக் கொள்ளை அடிக்கும் திட்டம்


இரவு. நள்ளிரவு. வங்கியின் பெட்டக அறையின் காரிருள் எங்களின் முகங்களைப் பார்க்க விடவில்லை. அந்த இருளில் வங்கி பூட்டிய பிறகு நாங்கள் அங்கு இருக்க வேண்டிய அவசியம் என்ன? "எங்கடா ஓட்டையப் போட்டு வரீங்க" "ஆட்டையப் போடத்தான்!" எங்கள் பொருமையை ரொம்ப சோதிக்காமல் தெய்வாதீனமாக  பெட்டகம் திறந்து கொண்டது. நாங்கள் மூன்று பேர். கல்லூரி தோழர்கள். களவு வீரனை மனதில் வைத்துக்கொண்டு முடிந்த மட்டும் பணக் கட்டுகளை எடுத்து பைக்குள் போட்டுக்கொண்டு கிளம்பிவிட்டோம். வங்கிக் கட்டடத்தை விட்டு [...]

2014 இவ்வாறாக உதித்தது


31ஆம் தேதி அலுவலகம் ஐந்து நட்சத்திர விடுதியில் வழங்கிய மதிய உணவு. ஐந்து நட்சத்திர விடுதிகளின் விருந்துகளைப் பற்றி ஒரு பதிவே போடலாம். அது அப்புறமா.. சாப்பிடும் முன்பு நான் என்னது சூப்புல மாட்டுக்கறி போட்டாங்களா நட்சத்திர செஃப் வந்து அதெல்லாம் இல்லை என்று அறிவித்தவுடன் நான் கிடைத்த சப்பாத்தியைச் சாப்பிட்டு முடிக்கும் முன்பே கை கழுவும் கோப்பை வந்தவுடன் நான் ஒரு வழியாக சாப்பிட்டு முடித்து போட்டோக்கள் எடுக்கும்போது இரவில் ஆட்டம் போட கூட்டம் கூட்டமாய் [...]