எல்ல ரயில் பயணம்


வணக்கம், நேற்று நுவரெலியா பயணம் தந்த களைப்பின் காரணமாக நன்கு உறங்கிவிட்டேன். இன்றைய நாள் இனிய நாள். நாங்கள் தங்கிய விடுதி ஒரு சிறிய உருளைக்கிழங்கு தோட்டத்தின் அருகில் அமைந்துள்ளது. விவசாயத் தோட்டத்தை அழித்து கட்டப்பட்டது. வெளியிலிருந்தது பெரிதளவில் வசீகரமான இல்லை. அங்கு சாப்பாடு மிகவும் நன்றாக இருந்தது. சமையல் அறையில் ஒன்று அல்லது இரண்டு பணியாளர்கள் மட்டும் இருந்தனர். அதில் ஒருவர் தமிழர். அவரைப் பார்க்க எங்களுக்கு மிக பரிதாபமாக இருந்தது. ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பின் [...]