ருசிக்குப் பிச்சை எடுக்கிறவனும் ஒற்றை நாணயமும்


நேற்று இரவு உணவை முடித்துவிட்டு, நூலகம் சென்று ஓசிபேப்பர் படித்துவிட்டுத் திரும்பிய போது, ஒரு சீனப் பையன் (சிங்கப்பூரன்) இடை மறித்தான். வயது 15, 16 இருக்கலாம் Do you have any change(சில்லரை)? என்றான் நான் சில பல கேள்விகளைக் கேட்டேன். அங்மோகியோ செல்லவேண்டும் என்றும், பேருந்திற்குப் பைசா இல்லை என்றான். கையில் ஏற்கனவே 20 காசுகள் வைத்திருந்தான். நம்பிக்கை சுத்தமாக இல்லை என்றாலும் சிங்கப்பூரன் பொய்சொல்ல மாட்டான் என்கிற நம்பிக்கையின் காரணமாக 1 வெள்ளியைக் [...]

துக்ளக் 42வது ஆண்டு விழா கண்ணோட்டம்


பொங்கலோ பொங்கல் நரேந்திர மோடியும் அத்வானியும் துக்ளக் ஆண்டுவிழாவிற்கு வருகிறார்கள் என்றதும் அவசியம் செல்லவேண்டும் என்கிற ஆவல் வந்தது. காங்கிரசு தற்சமயம் நடத்தும் கொள்ளையடிப்பு அரசியலும் தமிழர் விரோத அரசியலும் அயற்சி அடையச் செய்யும் இடத்தில் - எதிர் வருகிற பாராளுமன்ற தேர்தலின் கூட்டணி தொடர்பானதாக இருக்கும் என்கிற அங்கு வந்திருந்த அனைவருக்கும் இருந்த எதிர்பார்ப்பு எனக்கும் இருந்தது. அது தவிற அரசியல் கூட்டத்திற்குப் போய் நிறைய நாட்களும் ஆகிவிட்டது. மாலை 6-30 மணிக்குத் துவங்கும் என்று [...]