சினிமாவுக்குப் போன சித்தாளு – ஜெயகாந்தன்


1972ல் முதல்பதிப்பு வந்துள்ளது. அதற்கு முன்னரே கண்ணதாசன் இதழில் தொடராக வந்துள்ளது இந்த 'சினிமாவுக்குப் போன சித்தாளு'. அரசியல் ரீதியான ஒரு நூலாகவோ, சினிமா என்கிற மாயை வெள்ளந்தி உழைப்பாளிகளைச் சுரண்டும் நூலாகவோ பல விமர்சனங்கள் இந்த நூலுக்கு இருக்கிறது. ஆம் இது சினிமா நினைப்பால் வாழ்வை அழித்துக்கொள்ளக்கூடாது என்று எழுதப்பட்டிருக்கும் ஒரு curtain raiser ஆக இருந்திருக்கலாம். அல்லது அப்போதைய சினிமா சூழல் கருதி சக பெண்களையும் அவர்தம் குடும்பங்களையும் காக்கும் ஒரு நாவலாக எழுதியிருக்கலாம். [...]