கோடை கால பயணமும் விமான அரசியலும்


கடந்த கோடைகாலப் பயணத்தின் இனிய நினைவுகளைச் சுமந்தவாறே இந்த வருட தாய்நாட்டுப் பயணம் தொடங்கியது. வெறுமனே பயணக்கதையைச் சொல்வதால் உங்களுக்கு என்ன ஆகப்போகிறது. எனவே நான் அறிந்த இன்னொரு செய்தியையும் உங்கள் காதில் போட்டு வைக்கிறேன். 2014க்கான எனது பயணத்தைப் பதியவே இல்லை. சரி போகட்டும். 2013க்கான பயண ஒளிப்படங்கள் இங்கு உள்ளன அழகிய பள்ளி வருடா வருடம் இந்தப் பயணம்தான் மனதை கார்ப்பரேட் உலகில் இருந்து மனிதர் உலகிற்கு மாற்றிவிடுகிறது. சற்றேனும் தளிர் இலைகள் வந்தால்தானே [...]

தேர்தல் திருவிழாக் காட்சிகள்


எங்க பாத்தாலும் வந்தேறிகள். How to control them? How to control them. எங்க பாத்தாலும் இண்டியன்ஸ். அரசாங்க வேலையில இண்டியன்ஸ். பேக்டரில இண்டியன்ஸ்.. இன்றைக்கு டாக்சி ஓட்டுநராக வந்த சீன தாத்தா அங்கலாய்த்தார். அவரிடம் போய் கோவிச்சு என்ன ஆகப்போகுது. சரி பேச்சுக் கொடுக்கையில் அவர் உணர்ச்சியோடு நிறைய பேசினார். சமயத்தில் ஓடும் வண்டியின் ஸ்டேரிங்கில் இருந்து கையை எடுத்திடுவாரோ என்று நினைக்கும் அளவிற்கு இந்தியா இந்தியா என்று நிறையப் பேசினார். இன்னைக்கி உங்க [...]