கனகாம்பரத்தை மறந்திட்டீங்களா?


எனக்கு இந்த சென்னை போன்ற மெட்ரோ நகர் மக்களைப் பற்றித்தெரியாது. ஆனால் சிற்றூர்கள் தொடங்கி நகரங்கள் வரை, வீடு என்று இருந்தால் தோட்டம் என்ற ஒன்று இருக்கும். தோட்டம் ஒரு பரந்து விரிந்த இடத்திலோ அல்லது ஒரு பெயிண்ட் டப்பாவிலோ இருக்கும். அவரவர் ஆர்வத்தைப் பொறுத்தது. சிறு வயதில் பட்ரோஸ் மீது எனக்கு ஒரு பெரிய காதலே உண்டு. அதன் கவர்ச்சி ததும்பும் ரோஸ் நிற பூவின் அழகிற்கு எதைக் கொடுத்தாலும் இணையாகாது என்கிற திமிர் பிடித்த [...]