சொல்வளர்காடு|ஜெயமோகன்


தருமன் விழிகளில் சினத்துடன் “விளையாட்டு வேண்டாம்” என்றார். “இவன் ஏன் வெறுமனே பார்த்திருந்தான் என்று சொல்கிறேன். இவன் துணைவி உண்ட பழம் நஞ்சு. ஆனால் அதை அவள் அமுதென நினைத்தாள். அதை இவன் சொல்லப்போனால் இவனை தன் எதிரி என எண்ணுவாள். ஆகவே தாளாத்துயருடன் தனிமையில் அதை நோக்கியிருந்தான்.” தருமன் “வீண்சொல் தேவையில்லை” என்றபடி திரும்ப “கேளுங்கள், அரசே! அல்லது உண்மையிலேயே அது அமுதகனியாக இருக்குமோ? அழிவின்மையை தான் மட்டுமே அடையவேண்டுமென நினைத்து அவள் மட்டும் உண்டாளோ?” [...]

விஷ்ணுபுரம்


முந்தைய நூலனுபவத்திற்குப் பிறகு பனிமனிதன் நாவலை எடுக்கத்தான் விருப்பம். ஆனால் நூலகத்தில் விஷ்ணுபுரம் மிகச் சில புத்தகங்களே இருந்தன. அதில் ஒன்று வாசகர் எடுக்கத் தயாராய் இருந்ததை அறிந்ததும் மனம் பரபரப்படைந்தது. ஆனால் மனதில் ஓர் அச்சம். விஷ்ணுபுரத்திலிருந்து மீண்டு வர முடியுமா என்று. ஒரு நூலை வாங்கிப் படிக்காமல் விட்டால் கூட பரவாயில்லை, பாதியில் நிறுத்துவது என்பது வீடு கட்டுவதைப் பாதியில் நிறுத்துவது போன்றது. அது தரும் குற்ற உணர்வு அதிகம். விஷ்ணுபுரம் ஆசிரியர்: ஜெயமோகன் [...]