மாறா


நளாயினி சரித்திரத்தைச் சொன்னால் கூட நல்ல மசாலா சேர்த்துச் சொல்லும் எம் தமிழ் திரைப்பட உலகில் மாறா போன்ற முயற்சிகள், எந்திரத்திற்கு எண்ணெய் போடுவது போல. எப்போவாவதுதான் நிகழ்வது. அதற்காக முதலில் பாராட்டுக்கள். வழிதெரியாமல் வித்தவுட்டில் வரும் சிறுவன் மாறா. அவனை ஏற்றுக்கொண்டு வாழ்வு தரும் போஸ்ட் மாஸ்டர் வெள்ளையன். அந்த வெள்ளையனுக்கு ஒரு கைகூடாத இளமைக்கால காதல். அக்காதலியை நினைத்தவாறே காலத்தைக் கடத்தும் வெள்ளையன். அவள் நினைவு மங்கிவிடக்கூடாதென்று, அவளுக்கு எழுதிய அந்த பட்டுவாடா செய்யப்படாத [...]