வெண்முரசு கன்னித் தெய்வங்கள் – 1


வெண்முரசு காட்டும் பெண்கள் வலிமையோடு நடமாடுகின்றனர். பல பெண்கள் பிறந்துள்ளனர். சிறுமியாக கன்னியாக இல்லாளாக மூதாட்டியாக இது வரை வாழ்ந்துள்ளனர். கன்னிமை காலத்து நிகழ்வுகளை அழகுற சொல்லும் சில இடங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு. கன்னிமை காலத்தைக் காத்து நிற்கும் தெய்வங்கள் மற்றும் தேவதைகளை வெண்முரசு காட்டும் ஒவ்வொரு தருணமும் இனம்புரியா ஒரு மன எழுச்சிக்கு ஆளாவது தவிர்க்க முடியாது போகிறது. அது தரும் அமானுட உணர்விலா, தினசரி பார்த்து வணங்கிய கன்னி தெய்வங்கள் [...]

வெண்முரசு முதற்கனல் உறவுகள் வரைபடம்


வெண்முரசு நாவல் வளர்ந்து வரும் வேகத்திற்கு அதனை இருமுறை படித்தால் இருபங்கு இனிமை கிடைக்கும்!! தவிற புரியாத இடங்கள், நபர்கள் பற்றிய தெளிவு பெறவும் உதவும். பொதுவாக காலை வீட்டிலிருந்து அலுவலகம் செல்லும் வழியில் அவசரமாகவும், பிறகு ஒரு முறை மெதுவாகவும் படிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். இரண்டாவது முறை படிப்பதோடு அதைப் படமாகவும் வரைந்துவிட்டால் ஒரு தெளிவு கிடைக்கிறது. முதற்கனல் நாவலுக்கான முழு மைண்ட் மேப் முடித்து வலையேற்றியிருக்கிறேன். இந்தப் படத்திற்கே மென்பொருள் திணறிவிட்டது. தொடர்ந்து ஒரே [...]