பொங்கலுக்கு ஒரு நல்ல அறிவிப்பு வந்துள்ளது. நேற்று இரவு வலைப்பதிவு திரட்டியில் சொல்வன் : எழுத்தை ஒலியாக்கும் செல்லினத்தின் சிறப்புக்கூறு என்றொரு பதிவு கண் சிமிட்டியது. முரசு அஞ்சல் நிறுவனத்திடமிருந்து தமிழை வாக்கியங்களைப் படிக்கும் ஒரு செயலி (Text To Speech) வெளிவந்துள்ளது. மகிழ்ச்சி. தமிழ் மடலாடல் குழுங்களில் இது போன்ற செயல் திட்டங்கள் சொல்லப்பட்டு வந்தன. ஏற்கனவே இருக்கும் செல்லினம் செயலி சொல்வன் என்றொரு இன்னுமொரு வசதி ஏற்பாடு செய்துள்ளனர். கீழே திரைக்காட்சி பார்க்கவும். உரையைக் [...]