“கர்ணா, சிரசினை குறிவைத்து அந்த அஸ்திரம் நீ தொடுக்காதே. குறி தவறிவிடும்...” அதற்குக் கர்ணன் சொல்வான்: “மத்ரேசா உனது கூற்றின் பொருள் எனக்குப் புரிகிறது. ஆனால் லட்சியம் குறிவைத்து தொடுத்திட்ட சரம் தனை மாற்றி தொடுப்பது தர்ம நீதிக்கு உகந்ததல்ல. தொடுத்த அம்பினை கர்ணன் திருப்பி வைப்பதில்லை என்பதை நீ அறியவும்...” “அர்ஜுனா செத்தாய் நீ...” என உரக்கக் கூவியவாறு கர்ணன் நாகாஸ்திரத்தை இழுத்து விடலானான். இனி நான் உறங்கட்டும் ஆசிரியர் - பி. கெ. பாலகிருஷ்ணன் [...]
Tag: மொழிபெயர்ப்பு இலக்கியம்
புஷ்பாஞ்சலி | யத்தனபூடி சுலோசனாராணி
"யாரிடமாவது வெறுமே பெற்றுக் கொண்டால்தான் தவறு. திருடினால் குற்றம். அநியாயமாக சம்பாதித்தால் பாவம். பணம் சம்பாதிப்பதற்காக நம் குணத்தை இழந்தால்தான் நாம் வெட்கப் படணுமே தவிர உழைத்துப் பிழைப்பதால் நாம் யாருக்குமே தலை வணங்கத் தேவையில்லை என்பாள் எங்க அக்கா" -வாசு புஷ்பாஞ்சலி - திருமதி யத்தனபூடி சுலோசனாராணி மொழிமாற்றம் – கௌரி கிருபானந்தன் (தெலுங்கு Vijeta - విజేత) பதிப்பு வானவில் புத்தகாலயம் – முதல்பதிப்பு செப் 2015 NLB முன்பதிவு – Puṣpāñcali / [...]
ஆலாஹாவின் பெண் மக்கள் | சாரா ஜோசஃப்
“கஞ்சி அண்டா என்ன ஓடியா போயிடும்? வெறி புடிச்ச மூதேவி” என்றாள் மார்த்தா டீச்சர். “பசி வெறி, இதுங்க ஜென்ப சுபாவம்!” அம்மிணியம்மா டீச்சர் சொன்னாள். பின்னர் அவர்களிருவரும் குரோதத்துடன் ஆன்னியை வெறித்தார்கள். “கையை சுத்தமா கழுவிக்க மார்த்தா, கோக்காஞ்சறவுலேர்ந்து வர்ற பிசாசுகள்” அம்மிணியம்மா டீச்சர் உபதேசித்தாள். ஆலாஹாவின் பெண் மக்கள் - சாரா ஜோசஃப் தமிழ் மொழி மாற்றம் - நிர்மால்யா (மூலம் - மலையாளம் - ആലാഹയുടെ പെണ്മക്കള്) பதிப்பு - சாகித்திய அகாதெமி, [...]
சொப்பனசுந்தரி – யத்தனபூடி சுலோசனாராணி
"அவமானம்! அது என்ன அவமானம்? அவமானம்!" "அவமானம்! இந்தக் கால இளைஞர்கள் யோசிக்கும் விதமே கோணலா இருக்கு. அவமானம்கிற கத்தியை எடுத்துக்கிட்டு உங்களை நீங்களே கொலை செய்துக்கறீங்க. என்ன அவமானம்? பரீட்சையில பெயிலாயிட்டா அவமானம்! வேலை கிடைக்காவிட்டா அவமானம்! கல்யாணம் ஆகலைன்னா அவமானம்! நண்பர்கள் கேலி செய்தா அவமானம்! கணவன் தள்ளி வைச்சா அவமானம்! மை காட்!" அவன் உள்ளங்கையை கோபத்துடன் மடக்கிக் கொண்டான் -ஹரிகிருஷ்ணா சொப்பன சுந்தரி - யத்தனபூடி சுலோசனா ராணி மொழிமாற்றம் - [...]
ஆரோக்கிய-நிகேதனம் – தாராசங்கர் பந்த்யோபாத்யாய
ஒரு நாள் இந்தப் பக்கம் வந்து பாருமே, என்ன புதுமுறைகள் எல்லாம் கையாள்கிறோம் என்பதையெல்லாம். உம் கண்ணாலேயே பார்க்கலாம். எத்தனை விந்தை விந்தையான கேஸ்கள் வருகின்றன சிகிச்சை பெற! அந்த ட்ரீட்மெண்ட்டின் ஹிஸ்டரியை மெடிகல் ஜர்னலில் படித்துப் பாருங்கள். உங்கள் அரை வேக்காட்டுச் சிகிச்சை முறையெல்லாம் இந்தக் காலத்துக்கு ஏற்றவை அல்ல. என்னவோ வைத்தியம் பண்ணுகிறீர்கள்! இப்போது விஞ்ஞான ரீதியில் சிகிச்சை நடக்கிறது. நோயாளிகள் லகுவில் குணமடைகின்றனர். நீங்கள் நடத்தும் மருத்துவமுறையே பயங்கரமானது. கண்டிக்கப்படவேண்டியது-வேறு நாடாக இருந்தால் [...]