விடுமுறையும் பிரிவுணர்வும்


ரொம்ப சீரியஸ் பதிவு என்று நினைத்து வந்தீர்களானால் சாரீ. சரி, கோடானுகோடி வாசகப் பெருமக்களே! (ம்ம்... சரி மேல) காலையில் எழுவது, விரைவுப் பறவை (early bird:))யாக பணியைத் தொடங்குவதென்பது புத்துணர்ச்சியைத் தரக்கூடியது. ஆனால் அதற்கு விரைவில் எழ வேண்டுமே. காலையில் 6 மணிக்கு எழுந்தாலே, 'இன்னும் கொஞ்ச நேரம் தூங்கினா என்ன'ங்கிற நினைப்பு வரத்தானே செய்யும். அந்த சமயத்தில் பக்கத்து தொடக்கப்பள்ளியிலிருந்து கியா மியாவென எழும் வாண்டுகளின் சத்தம் வேறு மாதிரி என் காதில் விழும். [...]