நாவல்

விஸ்வசேனர் – அஞ்சலிக் குறிப்பு


அவரது உள்ளம் அங்கில்லை என்பதை உணர்ந்த ஏவலன் “நீர் எடுத்து வைத்திருக்கிறேன்” என்றான். “ஆம்” என்றபடி அவர் எழுந்தார். “விஸ்வசேனனிடம் எனக்கான புதிய மரவுரியை எடுத்து வைக்கச் சொல்” என்றபடி நீர்க்கொப்பரையை நோக்கி சென்றார். ஏவலன் மறுமொழி சொல்லாமையை உணர்ந்து திரும்பி நோக்கிய கணம் அவருக்கு நிகழ்ந்தவை புரிந்து இரு கைகளும் தொடை நோக்கி விழ, தாடை தொய்ந்து வாய் திறக்க அசைவிழந்து நின்றார். ஏவலன் தலைகுனிந்தான். “ஆம்” என்று சொன்னபடி அவர் திரும்பி குடுவையிலிருந்த நீரை… Continue reading விஸ்வசேனர் – அஞ்சலிக் குறிப்பு

Advertisements
நாவல்

ஸ்வேதன் – அஞ்சலி குறிப்பு


குருக்‌ஷேத்திரப் போரின் முதல் நாளில் குலாட இளவரசர் ஸ்வேதன் வீர மரணம் அடைந்தார். விராடருக்கு குலாட அரசியில் மகனாகப் பிறந்த மூத்தவர். அர்ஜுனரை மனதில் ஆசிரியராக வரித்தவர். தன் இளவல் சங்கனின் வற்புருத்தலை ஏற்று படைகளுடன் பாண்டவர்களுக்கு ஆதரவளித்து படைமுகம் கண்டவர். தன் குலாட குடிக்கு உகந்த புகழ் வாங்கித்தர நினைத்தவர். முதல் நாள் போரின் முப்புரி சூழ்கையில் ஒரு புரிக்குத் தலைமை தாங்கி நடத்தியவர். வில் திறனால் உபகௌரவர்கள், பூரி சிரவஸை செறுத்து நின்றவர். படு… Continue reading ஸ்வேதன் – அஞ்சலி குறிப்பு

நாவல்

உத்தரன் – அஞ்சலி குறிப்பு


குருக்‌ஷேத்திரப் போரின் முதல் நாளில் விராட இளவரசர் உத்தரர் வீர மரணம் அடைந்தார். மத்ஸ்ய விராட இளவரசனான இவர் கீசகனால் கைப்பாவை என வளர்க்கப்பட்டார். வீரம் குன்றி பிறராலும் ஏளனமாகப் பார்க்கப்பட்டார். அஞ்ஞாத வாசத்தில் கீசக வதத்திற்குப் பிறகு இவரது வாழ்வு அர்த்தமுள்ளதாகியது. விராட புரிக்கு ‘செயல் மன்னரா’க (நன்றி திமுக) திறம்பட செயல்பட்டு வந்தார். அர்ஜூனனே தேரோட்ட கர்ண துரியோதனர்களை விராடபுரிக் களத்தில் வென்று விழுப்புண் பெற்றவர். தன் படை ஆதரவை பாண்டவர்களுக்கு அளித்து முதல்… Continue reading உத்தரன் – அஞ்சலி குறிப்பு

நாவல்

அரவான் – அஞ்சலிக் குறிப்பு


குருக்‌ஷேத்திரப் போரின் முதல் நாளில் நாகர் குல இளவரசர் அரவான் வீர மரணம் அடைந்தார். அழகர், இளையவர், நாகர் குல உலூபிக்கு அர்ஜுனருக்குப் பிறந்தவர். தந்தையைத் துணைக்க தாயால் போர்முகம் காண அனுப்பப் பட்டவர். அர்ஜுனன் அனுமதி மறுத்தாலும் தாயின் சொற்படி களம் கண்டவர். தன் குல வழக்கப்படி ஆணிலி ரோகினியை மணந்தவர். பாண்டவர் வெற்றிக்கென தற்பலி அடைந்தவர். அவருடைய வேண்டுதலின் படி, அவரைடைய உடல் எரியூட்டப்படும். தலை குருக்‌ஷேத்ர களத்தில் வைக்கப்படும். பாண்டவர் வெற்றி காண… Continue reading அரவான் – அஞ்சலிக் குறிப்பு