முதலாவிண் | ஜெயமோகன்


பின்பு குருக்ஷேத்ரப் போர் முடிந்தபின் அக்களத்திற்கு சென்றேன். அங்கே என் இளையோன் வடக்குநோக்கி படுத்திருந்தான். அவன் அருகே அனைவரும் துயில்கொண்டிருந்தனர். நான் அவனருகே சென்று காலடியில் நின்றேன். அவன் விழித்து என்னை பார்த்தான். ‘இளையோனே, நான்தான்’ என்றேன். அவன் வாழ்த்து சொன்னான். ‘இளையோனே, அன்று நீ வியாசவனத்திற்கு வந்தநாளில் தொடங்கியது இது, அல்லவா?’ என்றேன். ‘ஆம், உங்கள் கவிதையை முன்னரே கேட்டுவிட்டேன். குஹ்யசிரேயஸ் என் நெஞ்சைக் கிழித்து உண்டது’ என்றான்.கிருஷ்ண துவைபாயனர் வியாசருக்கும் பீஷ்மருக்கும் நடந்த உரையாடல்.முதலாவிண் [...]

கல்பொரு சிறுநுரை | ஜெயமோகன்


“அஞ்சுவதற்கு என்ன உள்ளது இங்கே? மறம் ஓங்கி அறம் அழிகையில் நான் நிகழ்ந்துகொண்டே இருப்பேன் என்று பரம்பொருள் மானுடனுக்கு ஒரு சொல்லளித்திருக்கிறது அல்லவா?”-பகுதி எட்டு : சொல்லும் இசையும் – 6 நண்பர்களே, வெண்முரசு வரிசையின் 25ஆவது நாவல் கல்பொருசிறுநுரை இன்னொரு வேள்வி. அவியாகிக்கொண்டே இருக்கின்றனர் இதுகாறும் உளவிய கதை மாந்தர்கள். சீன வைரஸ் தாக்கத்தால் வீட்டிலிருந்து பணிபுரியத் தொடங்கியதில் இருந்து வெண்முரசு வாசிப்புக்குப் பெறும் தடை விழுந்துவிட்டது. காலையும் மாலையும் பயணநேர வாசிப்பு காணாமல் போய்விட்டது. [...]

களிற்றியானை நிறை | ஜெயமோகன்


எந்த அமைப்பை உருவாக்கினாலும் முதலில் இடர்கள் எழுந்து வரும். முறையீடுகள் பெருகும். அவை நன்று. அந்த இடர்களுக்கு நாம் அளிக்கும் செல்வழிகள், தீர்வுகள் வழியாகத்தான் இவ்வமைப்புக்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான நெறிகள் உருவாகி வருகின்றன. #வெண்முரசு #கயாநி நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 71பகுதி ஏழு : பெருசங்கம் – 3 களிற்றியானை நிறை ஆசிரியர் : ஜெயமோகன் இணையத்தில் படிக்க : நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 1 தென்னகத்தில் ஆதன் [...]

தீயின் எடை | ஜெயமோகன்


பானுமதி “அங்கே பாண்டவ மைந்தர்கள் நோயுற்று படுத்திருந்தனர். அவர்கள் எண்மரையும் கொன்று அனலூட்டிவிட்டார் அஸ்வத்தாமன். பாஞ்சாலர்களாகிய சிகண்டியும் திருஷ்டத்யும்னனும் கொல்லப்பட்டார்கள்” என்றாள். காந்தாரி “தெய்வங்களே, என் குடியின் மைந்தரை முற்றழித்துவிட்டீர்களே! தெய்வங்களே” என்று கூவி அழுதாள். இரு கைகளையும் விரித்து “என் மைந்தர்களே! என் மைந்தர்களே!” என வீறிட்டாள். தீயின் எடை - 56 தீயின் எடை | ஜெயமோகன் இணையத்தில் வாசிக்க -நூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 1 ஒரு பெரும் மைல்கல்லைத் தாண்டியிருக்கிறது [...]

இருட்கனி | ஜெயமோகன்


அஸ்தினபுரியின் அரசியை நான் அன்னை எனச் சொன்னால் ராதேயன் அல்லாமல் ஆகிவிடுவேன் அல்லவா? நான் ராதையின் மைந்தன். வாழ்நாள் முழுமைக்கும் அவ்வாறே. மறைந்தபின் என் கொடிவழிக்கும் அவரே பேரன்னை. அவரை துறந்து நான் அடையும் அரசும் குடியும் உறவும் புகழும் ஏதுமில்லை. தெய்வங்களும் இல்லை இருட்கனி – 8 இருட்கனி (வெண்முரசு) ஆசிரியர் : ஜெயமோகன் இணையத்தில் வாசிக்க: இருட்கனி - 1 வெண்முரசு நாவல் வரிசையின் 21ஆவது நாவல் இருட்கனி. குருக்‌ஷேத்திரப் போரைப் பற்றிய நாவல் [...]