இந்தியப் பார்வையில் செவ்வாய்


எங்கூட்டு மச்சானும் கச்சேரிக்கிப் போகப்போறான்..... Mars Orbiter Missionக்கு சமீபத்தில் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதனை இன்றைய 66வது சுதந்திர தின விழாவில் பிரதமர் அறிவித்திருக்கிறார். ஏனைய நாடுகளின் சாகசத்தைப் பார்த்து ஏங்கிப் போயிருந்த நமக்கு சந்திரயான் செயல்திட்டம் நமக்கு ஆர்வத்தை அளித்தது. இந்த செயல்திட்டம் உலக வல்லரசாக நம்மை நாம் அறிவித்துக்கொள்ள மத்திய அரசாங்கத்திற்கு உதவினாலும் இயற்பியல் மாணவர்களுக்கு அது பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்பதில் வியப்பில்லை. 60களில் தொடங்கி நம் நாட்டிற்குப் பெறுமை தரும் [...]