அய்யா ஊட்ல இல்ல – தாய்வான் தேர்தல் சிறப்புப் பதிவு 4


ஸாங் இங்-வென் இடம் பதவியைப் பறிகொடுத்த தற்போதைய ஜனாதிபதி மா யிங்-ஜியுவைப் பற்றி ருசிகரமான தகவல் உலா வருகிறது. திங்கள் கிழமை காலை குளிருக்கு ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு பிரதமர் மாவோ ச்சி-குவோ இல்லத்திற்குப் போய் தேவுடு காத்துள்ளார் மா யிங். 5 நிமிடம் வெளியே நின்றும் பிரதமர் வரவில்லை. பிரதமரின் மனைவிதான் வந்துள்ளார். 'அய்யாவுக்கு ஒடம்பு சொகமில்லை' என்று சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. 'இந்தாப்பா.. நீ போயிட்டு அப்புறமா வா' என்பது மாதிரி உள்ளே விடாமல் துரத்திவிட்டதாகக் [...]