ரே – யமஹாவின் ஸ்கூட்டர் அறிமுகம்


இந்தியாவில் யமஹா சற்று அழுத்தம் திருத்தமாக சில மாறுதல்களை ஏற்படுத்துகிறது. ஸ்கூட்டர் வழக்கொழிந்துவிட்டது என்று நினைக்கையில் பஜாஜ் சன்னி ரோடுகளில் வலம் வர பிறகு டிவிஎஸ் ஸ்கூட்டி - ஹோண்டா ஆக்டிவா என்று விரிந்த ஸ்கூட்டர் மார்க்கெட் வெகு விரைவில் இளம் வயதினரை - குறிப்பாக கல்லூரி மற்றும் அலுவலகம் விரையும் இளம் பெண்களை வளைத்துக் கொண்டது. தற்சமயம் ஹோண்டா, டிவிஎஸ், ஹீரோ, மஹிந்திரா, என்று கடும் போட்டி நிலவுகிறது. 44ஆயிரத்திலிருந்து ஆரம்பிக்கும் ஸ்கூட்டர்கள் பலதரப்பட்ட மாடல்களில் [...]