ருசிக்குப் பிச்சை எடுக்கிறவனும் ஒற்றை நாணயமும்


நேற்று இரவு உணவை முடித்துவிட்டு, நூலகம் சென்று ஓசிபேப்பர் படித்துவிட்டுத் திரும்பிய போது, ஒரு சீனப் பையன் (சிங்கப்பூரன்) இடை மறித்தான். வயது 15, 16 இருக்கலாம்

Do you have any change(சில்லரை)? என்றான்

one-dollar

நான் சில பல கேள்விகளைக் கேட்டேன். அங்மோகியோ செல்லவேண்டும் என்றும், பேருந்திற்குப் பைசா இல்லை என்றான். கையில் ஏற்கனவே 20 காசுகள் வைத்திருந்தான். நம்பிக்கை சுத்தமாக இல்லை என்றாலும் சிங்கப்பூரன் பொய்சொல்ல மாட்டான் என்கிற நம்பிக்கையின் காரணமாக 1 வெள்ளியைக் கொடுத்துவிட்டு நகர்ந்தேன். நன்றி கூட சொல்லாமல் வாங்கிக்கொண்டான்.

நான் சில தூரம் சென்றிருப்பேன். ஒரு சீனப் பெண்மணி வழி மறித்தார். என்னடா இன்னைக்கி வழியெங்கும் மறிச்சிட்டு இருக்கானுகளே. இந்தப் பசங்களுக்கு என்னாச்சு? நம்பளப் பார்த்தா எப்படித் தெரியிது?

அவரே தொடங்கினார்.

“அவன் உன்னாண்ட என்ன கேட்டான்?”

“காசு கேட்டான்”

“எவ்வளோ கொடுத்தே”

“1 டாலர்.”

“அவன் என்கிட்டயும் கேட்டான். 2 டாலர் கொடுத்தேன். அங்மோகியோ போறதுக்கு அந்த பைசா போதும். அங்க பார். நீ போனப்புறம் இன்னொருத்தன்கிட்ட வாங்கிட்டான்.”

“……..”

“வரியா. நாம போய் அவன்கிட்ட போய் கேக்கலாம்.”

“சரி வாங்க”

“போய் கேட்டா நம்பள ஏதும் செய்வானோ.”

“சே.சே… வாங்க போலாம்” (கருப்பன் குசும்புக் காரன். நம்பள அப்டி எல்லாம் மாட்டி விட்றமாட்டான்)

ஒரு கையில் கைபேசி, மறுகையில் சிகரெட். அவனது தற்போதைய வடிவம், எங்கள் முன் அவன் நின்றிருந்த அலட்சிய தோரணை, ‘அட’ என்று எங்களை வியப்பில் ஆழ்த்தியது வியப்பில்லையே.

new-coin

சீனப் பெண்மணியே துவங்கினார்.

“நான் உன்னாண்ட காசு கொடுத்தேனே. நீ ஏன் எல்லார்கிட்டயும் காசு வாங்கற”

அவன் “……”

நான். “அங்மோகியோ போறதுக்கு எங்களுக்குத் தெரிஞ்சு 3 பேர்கிட்ட காசு வாங்கியிருக்க. இப்ப உன்கிட்ட இருக்கற காசை வெச்சி சிங்கப்பூர் எல்லைக்கே போயிடலாம். காசு இல்லேங்கிற. போனுக்குக் காசும், சிகரெட்டுக்கு காசும் எங்க இருந்து வந்தது?”

அவன் “……”

“யா.. உன்கிட்ட கொடுத்த காச நான் வேற யாருக்காவது கொடுத்திருக்கலாம். திசு பேப்பர் விக்கற வயதானவங்க. கண் தெரியாதவர்கள் எத்தணையோ பேர் இருக்காங்க. அவங்களுக்குக் கொடுத்திருக்கலாம். நாங்க கஷ்டப் பட்டு சம்பாதிக்கற காச நீ சிகரெட் பிடிக்கக் கொடுக்கனுமா?” – இது சீனப் பெண்மணி

அவன் “……”

“உன்கிட்ட காசு கொடுக்க நாங்க விரும்பல. நாங்க கொடுத்த காசைத் திருப்பிக்கொடு.” இது நான்.

திருவாயைத் திறந்தார் சிங்கப்பூரன். “உங்க கிட்ட கொடுக்க காசு ஏதும் இல்லை.”

“தோ பாரு. நான் வெளிநாட்டுக்காரன். குடும்பம் குட்டிய விட்டு இங்க வந்து உழைக்கிற நாங்க சிங்கப்பூரர்களைப் பற்றிப் பெருமையா பேசிட்டு இருக்கோம். த்தக்காளி உன்னப் பார்த்தா ரெம்ப வெக்கமா இருக்குடே.” (ஏமாந்தவன் ஒருத்தன் கிடைச்சிருக்கான்ல)

“யா….” என்று வழிமொழிந்தார் சீனப் பெண்மணி. ஒரு கணம் சீனா விலகும் திரையில் நூலாசிரியர் சீனப் பிச்சைக்காரியை எதிர் கொள்ளும் காட்சி மனதில் வந்தது.

பிறகு போலிசில் ரிப்போர்டு செய்வோம் என்றி மிரட்டத் தொடங்கினோம். பிறகுதான் அழுத்தக்காரன் வாய்திறந்தான். பெற்றோர் செலவுக்குக் காசு தருவதில்லை என்றும், சாப்பாடு போடுவதில்லை என்றும் சமாளிக்கத் நொடங்கினான். எந்தப் பெற்றோரும் அப்படிச் செய்யமாட்டார்கள். அப்படிச் செய்தால் உன் பெற்றோரிடம் நாங்கள் பேசுகிறோம். அவர்களை உள்ள தூக்கிப் போடலாம் என்றதும்தான் மன்னிப்புக் கேட்டான். ‘பெற்றோருக்குத் தெரிய வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன்’ என்று முடிந்தது. அதற்கு மேல் போலிசில்தான் ரிபோட் செய்யனும்.

“இனிமேல் இப்படி செய்யாதே” – தாய்மையுடன் சீனப் பேண்.

At least in front of us! -நான்

2 thoughts on “ருசிக்குப் பிச்சை எடுக்கிறவனும் ஒற்றை நாணயமும்

 1. இங்கும் இந்த கௌரவப் பிச்சைக்கு பல காரணங்கள் காட்டுவார்கள்.
  இந்த பஸ், ரெயினுக்கு காசில்லையென்பது ஒரு ரகம். இதை இங்கே ஆபிரிக்கர்கள் ரை கட்டி கோட் போட்டுக் கேட்பார்கள்.
  ஒரு நாள் காலை வேலைக்குச் செல்லும் போது, ஒருவர் கேட்டார், கொடுத்தேன்.
  எப்போதும் இவர்கள் 50 சதம் குறைகிறது அதைத் தாருங்கள் என , 100 பேரிடம் வாங்கிவிடுவார்கள்.
  மாலை வேலையால் திரும்பும் போதும் அதே ஆள் என்னிடம் கேட்டார். நான் அவரைக் கேட்டேன். “நீ காலையில் இருந்து இன்னும் வீடு போகவில்லையா?”
  அந்தக் கூட்டத்துக்குள் அவர் எப்படி அந்த நிலையத்தை விட்டு மாயமாக மறைந்தாரோ? தெரியவில்லை.
  எல்லா இடத்திலும் இந்தத் தொல்லையுண்டு.
  உங்களிடம் அந்தப் பையன் சிகரெட்டுக்கு பிச்சையெடுத்தான், இணையத்தில்
  பின்நவீனத்துவ எழுத்தாளர் எனப் தன்னைப் பீத்தும் சாருநிவேதிதா, ரெமி மார்ட்டீன் குடிக்கவும், தாய்லாந்துக்கு செக்ஸ் ரூர் போக பிச்சை எடுக்குதே , இவரை என்ன என்பது…..

  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜோகன் பாரீஸ்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s