Ganga Ramaya Vihara Colombo

இலங்கையில் ஒரு சீன மாகாணம்! சுற்றிவளைக்கும் கடன் வலை


கரோனா பொதுமுடக்க காலத்தில் இலங்கை நாடாளுமன்றத்தில் ஓசையில்லாமல் ‘கொழும்பு துறைமுக நகர மசோதா’ நிறைவேற்றப்பட்டுள்ளது. சுமாா் 600 ஏக்கரில் சிறப்புப் பொருளாதார மண்டலாக உருவாகும் கொழும்பு துறைமுக நகரத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கவும், இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கும் அனைத்து உரிமைகளும் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளதால் இதை ‘சீன மாகாண மசோதா’ என்று அந்நாட்டு எதிா்க்கட்சிகள் விமா்சித்து வருகின்றன.

ஏற்கெனவே, அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு தாரைவாா்த்து கொடுத்துவிட்டு, இரண்டாவதாக இலங்கையின் தலைநகரான கொழும்பின் மையப் பகுதியின் புதிய நகரத்தையும் சீனாவுக்கே அளித்துவிட்டதால் வரும் நாள்களில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்றும் எதிா்க்கட்சிகள் அச்சம் தெரிவிக்கின்றன.

இதற்கு சீனாவிடம் அளவில்லாமல் பெற்ற கடனுக்கான வட்டியையும், அசலையும் திரும்பச் செலுத்த முடியாமல் சீனாவின் கடன் வலையில் இலங்கை சிக்கியதே காரணம்.

கடன் வலை:

இலங்கை முன்னாள் அதிபரான மகிந்த ராஜபட்ச 2009-இல் தனது சொந்தத் தொகுதியான அம்பாந்தோட்டையில் இலங்கையின் பிரம்மாண்ட துறைமுகம், சா்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினாா். இலங்கையில் ஏற்கெனவே கொழும்பு துறைமுகம் நன்றாக செயல்பட்டு வரும் நிலையில், அம்பாந்தோட்டை துறைமுகத்தால் நஷ்டம்தான் ஏற்படும் என்று இந்தியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அத்திட்டத்துக்கு நிதி அளிக்க மறுத்துவிட்டன.

அந்த நேரத்தில் போரால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழா்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கும் பணிகளில் இந்தியா கவனம் செலுத்தி வந்தது. இந்த சந்தா்ப்பத்தைப் பயன்படுத்திய சீனா, அம்பாந்தோட்டை துறைமுகத்தை உருவாக்க 85 சதவீதம் முதலீட்டுக் கடனுதவித் திட்டத்தை அளிக்க முன்வந்தது. அந்நிய நேரடி முதலீட்டால், இலங்கை மீண்டும் வா்த்தக தலைநகராக உருவெடுக்கும் என்ற நோக்கில் சீனாவிடம் ராஜபட்ச கடன் பெற்றாா்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முதல்கட்டத் திட்டம் 2010-இல் தொடங்கப்பட்டது. துறைமுக கட்டுமானப் பணிகளில் தங்கள் நாட்டு பணியாளா்களையே ஈடுபடுத்தியது சீன துறைமுக பொறியியல் நிறுவனம். முதல்கட்டத் திட்டத்துக்கு 306 மில்லியன் அமெரிக்க டாலரை 6.3 சதவீத வட்டிக்கு கடன் வாங்கியது இலங்கை. 2011-இல் இரண்டாம் கட்டத் திட்டத்துக்கு 900 மில்லியன் டாலரை 2 சதவீத வட்டிக்கு கடன் வாங்கி துறைமுகப் பணிகளைத் தொடா்ந்தது ராஜபட்ச அரசு.

2012-இல் வெறும் 34 கப்பல்கள் மட்டுமே வருகை தந்தன. எதிா்பாா்த்த அளவுக்கு வருமானம் கிடைக்கவில்லை. எனினும், மூன்றாவது கட்டத் திட்டத்துக்கு இரு தவணையாக 400 மில்லியன், 600 மில்லியன் டாலா்களை கடனாக பெற்றது.

கொழும்பு துறைமுக நகரம்:

மேலும், தலைநகா் கொழும்பில் 1.5 பில்லியன் டாலரில் சிறப்புப் பொருளாதார நகரத்தை உருவாக்கும் மிகப்பெரிய திட்ட ஒப்பந்தத்தில் 2014-இல் அதிபா் ராஜபட்சவும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் கையெழுத்திட்டனா்.

2015-இல் அதிபா் தோ்தலில் ராஜபட்ச தோல்வியடைந்தாா். அதிபராக மைத்ரிபாலா சிறீசேனா வெற்றி பெற்றாா். இதற்கிடையே, தொடா்ந்து கடன், கடனுக்கான வட்டி என இலங்கையின் சுமை அதிகரித்துக் கொண்டே போனது. 2017-இல் இலங்கையின் மொத்த பொருளாதார வளா்ச்சியில் 50 சதவீதம் கடனாக மாறியது.

கடன், வட்டியை செலுத்த முடியாமல் அப்போதைய அதிபா் சிறீசேனா, அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு சீனாவுக்கு குத்தகைக்கு விட்டாா். இதில், 70 சதவீத உரிமையாளராக சீனாவும், 30 சதவீத உரிமையாளராக இலங்கையும் மாறின. மேலும், துறைமுகத்தைச் சுற்றியுள்ள 15 ஆயிரம் ஏக்கா் நிலப்பரப்பையும் தொழிற்பேட்டை நகரமாக்க அளித்து சீனாவிடம் இருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டாலா்களை பெற்று அந்நிய செலாவணி கையிருப்பாக இலங்கை வைத்துக் கொண்டது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை ராணுவ நடவடிக்கைகளுக்காக சீனா பயன்படுத்தக் கூடாது என குத்தகை ஒப்பந்தத்தில் முக்கியமாக குறிப்பிடப்பட்டது.

இதற்கிடையே, சீனாவின் கொழும்பு துறைமுக நகர திட்டப் பணிகள் 2015-லும் தொடா்ந்தன. துறைமுக நகரத்துக்காக 600 ஏக்கா் செயற்கை நிலப்பரப்பை சீனா உருவாக்கியது. எனினும், அப்போதைய பிரதமா் ரணில் விக்கிரமசிங்கேவின் சீன எதிா்ப்புக் கொள்கையால் இந்தத் திட்டப் பணிகள் சுணக்கமடைந்தன.

கடனில் மூழ்கிய நாடு:

2020-இல் நடைபெற்ற தோ்தலில் ராஜபட்ச கட்சி வெற்றி பெற்ால், அதிபராக அவரது சகோதரா் கோத்தபய ராஜபட்சவும், பிரதமராக மகிந்த ராஜபட்சவும் பதவியில் அமா்ந்தனா். இதையடுத்து, கொழும்பு துறைமுக நகர திட்டத்தை துரிதப்படுத்தினாா் மகிந்த ராஜபட்ச.

கடந்த முறைபோல் இல்லாமல், கொழும்பு துறைமுக நகர திட்டத்தில் நேரடியாகவே இலங்கையிடம் 99 ஆண்டுகள் குத்தகையும், அதிகார உரிமையையும் சீனா கோரியது.

இதற்கிடையே, ஒட்டுமொத்த பொருளாதார வளா்ச்சியில் 80 சதவீதம் கடனுக்கான வட்டியாக செலுத்தும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது. சீனாவிடம் மட்டும் சுமாா் 8 பில்லியன் டாலா்கள் கடனாக பெற்று மேம்பாட்டுத் திட்டங்களை இலங்கை செயல்படுத்தி வருகிறது.

2020-இல் கரோனா தாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையால் அந்நாட்டின் அந்நிய செலாவணி நிதி கையிருப்பு 4.05 பில்லியன் டாலராக குறைந்தது. 2021-இல் கடனுக்கான வட்டியே 4.05 பில்லியன் டாலராக செலுத்த வேண்டிய சூழலில் முழுவதும் திவாலான நிலைக்குத் தள்ளப்பட்டதாக பொருளாதார நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

கொழும்பு துறைமுக நகர திட்டத்தின் மூலம் இலங்கைக்கு 15 பில்லியன் அமெரிக்க டாலா் முதலீடும், 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்பதால் இத்திட்டத்தைச் செயல்படுத்தியே ஆக வேண்டும் என்று ‘கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய மசோதாவை’ கொண்டு வந்தாா் அதிபா் கோத்தபய ராஜபட்ச.

சீனாவுக்கு முழு அதிகாரம் அளிக்கும் இந்த மசோதா இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது என்றும், இதுகுறித்து நாட்டு மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கூறி, இலங்கை உச்சநீதிமன்றத்தில் எதிா்க்கட்சிகள், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் சாா்பில் 18 வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த அரசியலமைப்பு திருத்த மசோதாவில் திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன்தான் நிறைவேற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, 225 எம்.பி.க்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 149 உறுப்பினா்களின் ஆதரவுடன் மே 20-ஆம் தேதி மசோதாவை நிறைவேற்றியது இலங்கை அரசு.

துறைமுக நகரத்தில் சா்வதேச தரத்தில் வானுயர கட்டடங்கள், வா்த்தக நிறுவனங்கள், பள்ளிகள், குடியிருப்புகள், நட்சத்திர ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகளை உருவாக்கும் கட்டுமானப் பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க சீனா வேகப்படுத்தி வருகிறது. சீனாவின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டே துறைமுக நகரம் செயல்படும் என்பதால் ‘சீன மாகாணம்’ என்று இலங்கை எதிா்க்கட்சிகள் அழைக்கின்றன.

இந்தியாவுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை: சீனாவின் ஆதிக்கம் இலங்கை தலைநகரிலேயே வந்துள்ள நிலையில், அது தனக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்பதால் இதை இந்தியாவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

எனினும், துபை, சிங்கப்பூா், ஹாங்காங் போன்று கொழும்பும் தெற்காசியாவின் வா்த்தக நகரமாக மாறி ஆண்டுக்கு 11.8 பில்லியன் டாலரை வருவாயாக ஈட்டும்; இதனால் இலங்கையின் கடன்கள் அனைத்தும் தீா்ந்து பணக்கார நாடாக மாறும் என்று அதிபரும் பிரதமரும் உறுதியாக உள்ளனா்.

ஐ.நா.வில் ராஜபட்ச சகோதரா்களுக்கு எதிராக அவ்வப்போது தொடுக்கப்படும் போா்க் குற்ற விசாரணையில் இருந்து காப்பாற்றி வரும் சீனா, இலங்கையை கடனில் இருந்து காப்பாற்றுமா அல்லது கடனில் மூழ்கவைக்குமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.

எதிா்க்கட்சிகள் என்ன சொல்கின்றன?

துறைமுக நகர திட்டம் தொடா்பாக அனைத்து முடிவுகளையும் 7 நபா் ஆணையம்தான் எடுக்கும். இதன் உறுப்பினா்களை நியமிக்கும் அதிகாரம் இலங்கை அதிபருக்கு மட்டும் உண்டு.

இருப்பினும், இலங்கை அரசின் 25 சட்டங்கள் துறைமுக நகரத்தைக் கட்டுப்படுத்தாது. துறைமுக நகரத்தில் அனைத்துவிதமான வெளிநாட்டு வங்கிகள், வெளிநாட்டு கரன்சிகளை பயன்படுத்தலாம், வா்த்தக உரிமையாளா்களின் பெயா்களை யாரும் அறிய முடியாது. இதுபோன்ற பல்வேறு பின்னடைவுகள் இந்தச் சட்டத்தில் உள்ளன. சூதாட்டத்தின் மையமாக உள்ள கொழும்பில் அமையும் சா்வதேச கேளிக்கை விடுதிகள், வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் புழங்கும் மாகாணமாக துறைமுக நகரம் மாறும் என்று எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

மேலும், இலங்கைத் தமிழா்களுக்கு சம உரிமை வழங்க 30 ஆண்டுகளாக அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளாத இலங்கை அரசு, தற்போது சீன மாகாண உருவாக்கத்துக்காக அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி அமைத்து இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசிய கட்சித் தலைவா்கள் குற்றம்சாட்டுகிறாா்கள்.

சீனாவின் திட்டம் என்ன?

இலங்கை கேட்கும்போதெல்லாம் பில்லியன் டாலா்களை சீனா அள்ளிக் கொடுப்பதற்கு சீன அதிபா் ஷி ஜின்பிங்கின் எதிா்கால கனவான பட்டுச் சாலை திட்டம்தான் காரணம்.

2050-க்குள் ஆசிய நாடுகளுக்குள் சாலை, கடல் மாா்க்கமாக வா்த்தக வழித்தடத்தை உருவாக்கி தடையற்ற பொருளாதாரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சீனா திட்டமிட்டுள்ளது. இதற்காகத்தான் இலங்கை, பாகிஸ்தான், மியான்மா் ஆகிய நாடுகளில் அதிகமான முதலீடுகளைச் செய்து வருகிறது. ஆனால், இந்தத் திட்டத்துக்கு இந்தியா கடும் எதிா்ப்பு தெரிவிக்கிறது.

அண்டை நாடுகளில் துறைமுகங்கள், ரயில் திட்டங்கள்,நெடுஞ்சாலைகள், ரயில் திட்டங்கள் என பெரும் முதலீடு செய்து சில ஆண்டுகளில் ஆசியாவையும், இந்திய பெருங்கடலையும் சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளக்கூடும் என்று இந்தியா கருதுகிறது.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் இருந்து செயல்பட்டு வந்த பட்டுப் பாதை சாலையை மீண்டும் நடைமுறையாக்கி மேற்கத்திய நாடுகளுக்கு சவாலாக இருக்க வேண்டும் என்று சீனா கருதுகிறது.

இதற்காக 200 பல்லியன் டாலருக்கும் அதிகமாக செலவிட சீனா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் தொடக்கப்புள்ளிதான் கொழும்பு துறைமுக நகரம் என்று பிற நாடுகள் எச்சரிக்கின்றன.

தினமணி கட்டுரையின் மீள்பதிவு –

மச்சி.. கொஞ்சம் காசு தரியா? பட்டுப் பாதை போடனும்!


யுரேசியா மற்றும் ஆப்ரிக்கா உடனான பழைய பட்டுப் பாதையைப் புதுப்பிக்கும் திட்டமானது கடுமையான நிதிப் பிரச்சினையை எதிர்நோக்குகிறது என செஞ்சீனத்தின் வங்கியாளர்களும் அரசு ஆய்வாளர்களும் எச்சரித்துள்ளனர்.

(c) Sheng Li - Reuters
(c) Sheng Li – Reuters

OBORல் உள்ள நாடுகளால் தங்கள் நாடுகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்குக் காசு கொடுக்கும் நல்ல நிதி நிலைமையில் இல்லை.

பாதிபேர் ஏற்கனவே அதிக கடனில் மூழ்கி உள்ளனர். யாராவது பிற அரசுகளோ தனியார்களோ முதலீடு செய்வார்களா என்று ஏற்கனவே தவிக்கிறார்கள். அவர்களின் கடன் விகிதங்கள் 35லிருந்து 126 சதம் வரை உயர்ந்துள்ளன. (உலக அளவில் ஒத்துக்கொள்ளப்பட்டது 20 முதல் 100). இந்நிலையில் நாட்டின் வளர்ச்சிக்காக பணம் புரட்டுதல் என்பது மிகக் கடினமான செயல்.

CPEC Projects in Pakistan (c) http://www.riazhaq.com/2017/07/cpec-financing-is-pakistan-being-ripped.html
CPEC Projects in Pakistan (c) http://www.riazhaq.com/2017/07/cpec-financing-is-pakistan-being-ripped.html

சர்வதேச நிதி நிறுவனங்கள், வர்த்தக கடன் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற பெய்ஜிங் ஆர்வமாக உள்ளது. அதன் மூலம் இத்திட்டத்திற்கான நிதியாளர்களைப் பரவலாக்கலாம் என நினைக்கிறது சீனா.

AIIB, புதிய வளர்ச்சி வங்கி, சீன வளர்ச்சி வங்கி, சீன ஏற்றுமதி-இறக்குமதி வங்கி, மற்றும் பட்டுப் பாதை நிதி ஆகியவற்றின் மூலம் பணம் வாரி இறைக்கப்பட்ட போதிலும், இன்னமும் வருடத்திற்கு 500 பில்லியன் அமேரிக்க டாலர் அளவில் நிதி தேவைப்படுகிறது.

தனியார்கள் அதிக அளவில் பங்கேற்காமை, குறுகிய நிதி சேறும் வழிகள், குறைந்த இலாபம் ஆகியவை கவலையை ஏற்படுத்துவதாகக் கூறுகின்றனர்.

நிதித் தேவையை ஈடுகட்ட புதுப்புது வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டி உள்ளது. உலக அளவில் பிற நிறுவனங்கள், தனியார்கள் முதலீட்டில் பங்கேற்க வசதியாக ஒரு நிதி திரட்டும் முகமை அமைக்கப்படவேண்டும் என சீன வங்கியாளர் நினைக்கின்றனர்.

விரைவான நிதி விகிதாச்சாரங்கள் பெற, உள்நாட்டு அரசுகள் சீன அரசைப் போன்று வெளிநாட்டு முதலீட்டாளர்களிடையே சிலருக்குச் சலுகை தர வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்.

ஏற்கனவே பலன் தராத சொத்துக்கள் இருக்கின்ற போதிலும், அவை பொறுத்துக்கொள்ளக்கூடிய அளவிற்குள்தான் இருக்கின்றன என்று தற்காத்துக் கூறுகிறார் சீன வளர்ச்சி வங்கியின் முதுநிலை வர்த்தகவியலாளர்.

நாடுகளின் கடனைத் திருப்பிக் கட்டும் நிலைகளைக் கணக்கில் கொண்டதாக அவர் கூறுகிறார்.

(பாகிஸ்தான், நேபாளத்தில் எல்லாம் என்ன கண்டார்கள் என்று அவர்கள்தான் கூறவேண்டும். இததனைக்கும் இமயமலையைக் குடைந்து நேபாளத்திற்கு ரயில், ஆயில் என்று பெரிய பெரிய திட்டங்கள். ஒரு மலையைக் குடைந்து செங்கோட்டையிலிருந்து புனலூருக்கு ரயில் வழித்தடம் போட இந்திய அரசிற்கு ஏழெட்டு ஆண்டுகள் ஆகின்றன)

இதன் பின்னர் கொடுத்த பணத்திற்கு ஈடாக அந்தந்த நாடுகளிடம் எதைப் பெறப்போகிறது செஞ்சீனம் என்பதை பொறுத்திருந்து காண்க.

சீன - லண்டன் ரயில். படம்: Stuff.co.nz

லண்டனில் பருப்பு விற்கும் டிராகன்


சீனாவின் சரக்கு ரயில் 12000 கிலோமீட்டர்களை 18 நாட்களில் மராத்தான் வீரன் எனக் கடந்து லண்டனை அடையும். ஐரோப்பாவுடனான தொடர்பை வலுப்படுத்தி, ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கும் வகையில், சீனா ஒரு சரக்கு ரயிலை அறிவித்துள்ளது. சீனாவின் மத்திய செஜியாங் மாகாணத்தின் வரத்தக நகரான யிவு நிலையத்திலிருந்து கிளம்பியிருக்கும் அந்த ரயில், கசகஸ்தான், ரஷ்யா, பெலாரஸ், போலந்து, ஜெர்மனி, பெல்ஜியம் மற்றும் பிரான்சைக் கடந்து, லண்டனைச் சென்றடையும். கேட்கும்போதே கிறுகிறுக்கும் இந்த ரயிலை, யுவு டைமெக்ஸ் தொழில் முதலீட்டு நிறுவனம் இயக்கும். இந்த சூரர்கள் ஏற்கனவே ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகருக்கு ரயிலை விடுகின்றனர். வான்வெளி சரக்குக் கட்டணத்தில் பாதிதான் செலவு ஆகிறதாம். கப்பல் பயணத்தில் ஆகும் நேரத்தைில் பாதிதான் ஆகிதாம். சீனா சிலாகிக்கிறது.

xinping

ஏற்கனவே ஐரோப்பாவின் சில நகர்களுக்கு ரயிலை இயக்கும் சீனாவிற்கு இது ஒன்றும் புதிதல்ல. லண்டன் என்கிற நகரத்திற்கான விரிவாக்கப்பட்ட பயணம் மட்டும்தான் புதிது. கடந்த சில வருடங்களில் சீனாவிலிருந்து லண்டனுக்குச் செல்லும் முதலீடுகள் இரு மடங்காயிருக்கிறது.

வெற்றிக் கொடியை நாட்ட பொருளாதாரத்திற்கு பல்வேறு ஊக்க மருந்தினைச் செலுத்தி வருகிறது சீனா. அந்த வகையில், பழைய பட்டுப் பாதையை மீட்டுக் கொண்டு வந்து, உலக வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்த முயல்கிறது.

சீன - லண்டன் ரயில். படம்: Stuff.co.nz
சீன – லண்டன் ரயில். படம்: Stuff.co.nz

Belt And Road Intiative (BRI) என்கிற பெயர் கொண்ட இந்த செயல்திட்டத்தின் மூலம், ஐரோப்பா, ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவில் தனது பழைய தொடர்பினைப் புதுப்பிக்கப்பார்க்கிறது. சீன அதிபர் ஜின் பிங்கின் முழு ஆசி பெற்ற இந்த செயல்திட்டத்தின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக சர்வதேச சந்தையை விழுங்கி வருகிறது. இந்தப் பட்டுச் சாலை வழி, தனது பழைய வர்த்தக மற்றும் கலாச்சார பரிமாற்றத்தை நிகழ்த்தும் என நம்புகிறது.

china-london-freight-service-3
சீன – லண்டன் ரயில். படம்: பிபிசி

மேற்கு சீனாவின் வர்த்தக மற்றும் போக்குவரத்து முனையமாக ஜின்ஜியாங் மாகாணம் உருவெடுக்கும். அங்கிருந்து பட்டுச் சாலையில் அமைந்திருக்கும் அனைத்து நாடுகளுக்கும் சரக்குகளை அனுப்ப திட்டம் வைத்துள்ளது. பிற நாடுகளின் இறையாண்மை, பாதுகாப்புக்குப் பங்கமில்லாமல் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. சோப்பு சீப்பு கண்ணாடி மை டப்பி என்று உலகத்திற்குத் தேவையான அனைத்தையும் தயார் செய்து ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதும் அனுப்ப இந்த பட்டு வழி பயன்படும்.

நேற்றைய பதிவில் பார்த்த சீன-பாகிஸ்தான் பொருளாதார வழியும் இந்தத் திட்டத்தில் ஒரு பகுதிதான்.

முன்னர் சீனர்கள், யவனர்களுடன் வியாபாரம் செய்ய துவாரகை எழுந்தது. ஆனால் இப்போது இந்தியாவால் இது போன்ற உலகின் நம்பிக்கையைப் பெறும் நற்செயல்கள் எதையும் செய்ய வில்லை என்பதையும் நாம் கவலையுடன் நோக்கவேண்டி உள்ளது. தவிர, சொந்த இலாபங்களுக்காக, மத இனப் பிரச்சினைகளை எழுப்பி குளிர் காயும் அரசியல், அதிகார வர்க்கத்தைச் சுமந்து கொண்டு நத்தை போன்று ஊர்ந்துதானே செல்லவேண்டியிருக்கிறது.

மேற்கண்ட செய்தியையும் கேட்ட இந்திய செவிடன் ரெங்கன், காதைக் குடைந்து கொண்டான்!

இனிய குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே.

குடியரசு தினப்பதிவு 2/2 – நிறைவு.

சீனா – பாகிஸ்தான் ரயில்-கடல் சரக்குப் போக்குவரத்து


கடந்த மாதம், சீனாவிலிருந்து பாகிஸ்தானுக்கு கடல் வழி மற்றும் தரை வழி (ரயில் மார்க்கம்) சரக்குப் போக்குவரத்து துவக்கப்பட்டது. முதல் சரக்கு ரயில் தென்மேற்கு சீனாவின் யூனான் மாகாணத்திலிருந்து, கராச்சிக்கு முதல் ரயில் புறப்பட்டது. 500 டன் அளவுள்ள சரக்கு யூனான் தலைநகரம் குன்மிங்கிலிருந்து, துறைமுக நகரான குவாங் சௌ  வரை ரயிலிலும் பிறகு அங்கிருந்து கராச்சிக்கு கப்பலிலும் சரக்குகள் போகும்.

pak_china_railway_3

இந்த வழி, உள்ளுர் வியாபாரத்தை உலக சந்தையுடன் இணைக்க உதவுகிறது என்று New Silk Road Yunnan Limited தெரிவித்துள்ளது. இந்த சேவை, வழக்கமாக ஆகும் சரக்குக் கட்டணத்தை பாதியாகக் குறைக்கிறது.
இந்தச் சேவை, சீனா-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை (China-Pakistan Economic Corridor project (CPEC))த் திட்டத்தின் நீட்சி என்று சொல்கிறார்கள். பாகிஸ்தானும் சைனாவும் CPECயின் கீழ், அக்டோபரில் வர்த்தகத்தைத் தொடங்கின. நூற்றுக்கும் மேற்பட்ட கொள்கலன்கள் ஹன்ஸாவிலுள்ள சுஸ்த் துறைமுகத்திற்கு வந்தன. அந்தக் கொள்கலன்கள், குவதாருக்கு அனுப்பப் பட்டன.

கராச்சிக்கு அருகில் உள்ள குவதார் துறைமுகத்தில் சீன பாகிஸ்தான் மாதிரி செயல்திட்டக் கப்பலுக்குக் காவலாக நிற்கும் பாகிஸ்தான் கப்பல் படை வீரர்கள் -நவம்பர் 2016 - படம் தி இந்து.
கராச்சிக்கு அருகில் உள்ள குவதார் துறைமுகத்தில் சீன பாகிஸ்தான் மாதிரி செயல்திட்டக் கப்பலுக்குக் காவலாக நிற்கும் பாகிஸ்தான் கப்பல் படை வீரர்கள் -நவம்பர் 2016 – படம் தி இந்து.

CPEC என்பது 3000 கிலோமீட்டர் அளவிலான, சாலை, ரயில் மற்றும் குழாய் வழி வலைப் பின்னல். இதனைக் கொண்டு, சமையல் வாயுவிலிருந்து, சர்க்கரை மூட்டை வரை கொண்டு போக இயலும். பெட்ரோல் முதல் பெருங்காயம் வரை கொண்டு போக இயலும். அன்னக் கரண்டி முதல் ஆட்டம் பாம் வரை கொண்டு போக இயலும். 46 பில்லியன் அமெரிக்க வெள்ளி மதிப்புள்ள முதலீடு. இந்த CPEC ஐக் கொண்டு, ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பாவிலுள்ள 3 பில்லியன் மக்களுக்கு சரக்கு அனுப்பலாம் என்று திட்டமிடுகிறது சீனா.

CPEC திட்டமிடும் சீன பாகிஸ்தான் ரயில் பாதை. அப்படியே குவெட்டா, பலூசிஸ்தானும் இணைக்கப்படும். படம்: DAWN
CPEC திட்டமிடும் சீன பாகிஸ்தான் ரயில் பாதை. அப்படியே குவெட்டா, பலூசிஸ்தானும் இணைக்கப்படும். படம்: DAWN

ஸ்பீக்கர் பிஞ்சு போல டிரான்சிஸ்டரில் இந்த செய்தியைக் கேட்டுவிட்டு வந்த செவிடன் ரங்கன் கூவினான்

protest

தனி டமிள் நாடு வேண்டும்
பிரபாகரன் போட்டோ பார்த்தால் எனக்கு டமிள் வெறி ஏறுகிறது.
இளைஞனே பொங்கி எலு
இந்தியா ஒரு நாடே இல்லை தோழர்.
ராவணன் சீதையை ராக்கெட்டில் வைத்து கடத்தினான்..
விதுரன் போர் காட்சியை வீடியோ கான்பிரன்ஸ் கொண்டு விவரித்தான்.
விஸ்வரூபம் 2 வெளி வந்தால் இருபத்தி ஏழரை சங்கமும் எதிர்க்கும். அப்பன் மகள் கூட பார்க்காமல் வசவு பாடும்.
காஷ்மீர் பிரச்சினைக்குக் காரணம் காரட் அல்வா.

Lovely! என்றாள் பாரதத்தாள்!

happy-republic-day
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள் அன்பர்களே, பதிவர்களே!

லடாக் பகுதியில் சாலை பணி நிறுத்தம் – சீனா ஆட்சேபம்


ladakh
ladakh

கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டத்தின் கீழ் லடாக் பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது அங்கு வந்த சீன இராணுவ வீரர்கள் கடுமையாக ஆட்சேபித்ததை அடுத்து பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

பணிகள் நிறுத்தப்பட்டதை ஒப்புக்கொண்ட ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா, சீனாவின் இந்த ஆட்சேபத்தை மத்திய அரசிடம் தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.

நாம் பெரிய அளவில் அரசியல் பேச வேண்டாம். ஆனால், இந்திய எல்லைப் பகுதியில் அதுவும் இந்திய சோதனைச்சாவடிக்கு சாலை அமைப்பதற்குக்கூடவா சீனா அனுமதி அளிக்கவேண்டும் ?? எந்தப் பிரச்சினைகளும் இல்லாதிருந்தால் இத்தகு இடங்கள் இந்தியாவிற்கு சுற்றுலா வருவாயை ஈட்டித்தரும்!!

அத்துடன் ஜவஹர்லால் நேரு காலத்தில் dispute பகுதிக்குள் அக்ஸாய் சின் வரை சீனா சாலை அமைத்ததாம். அதனை இந்தியா தரப்பில் கண்டுகொள்ளப்படவில்லை என்று சொல்கிறார்கள். எல்லாம் முடிந்து சீன பிரதமர் நேருவின் வசம் இது மாதிரிப்பா.. நாங்க அங்ஙன ரோடு போட்ருக்கம்னு சொல்லித்தான் இந்தியாவிற்குத் தெரிந்திருக்கிறது.

கஷ்டம்!