பூக்கதைகள் | ஜெ தேவிகா


“திட்டாதே அம்மா! மணிக்குட்டி வருத்தப்படுவாள். என்ன மணிக்குட்டி, இவன் பாவம், உன் தம்பியல்லவா பொறாமைப்படக்கூடாது..” மணிக்குட்டி விழித்துப் பார்ததாள். இது எவ்வளவு பெரிய துன்பம்! சின்னத்தம்பியை அம்மா தன்னுடனேயே வைத்துக்கொண்டு படுப்பதை சகித்துக் கொள்ள முடியாமல் அழுதபோது, “என்னடீ, நீ அக்கா அல்லவா, அழுவதற்கு உனக்கு வெட்கமாக இல்லை!..?” என்று அம்மா அதட்டினாள். சரி போகட்டும் யாருடனும் எதுவும் பேசவேண்டாம் என்று நினைத்தாள்.. “கவலையாக ஒரு மூலையில் இப்படி உட்கார்ந்து ஏன் தூங்கி விழுந்து கொண்டிருக்கிறாய்..?” என்று மீண்டும் புத்தி சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்!
-எனக்கொரு கதை சொல்

pookathaikal 2

பூக்கதைகள்
ஆசிரியர்: ஜெ தேவிகா (மலையாளம்)
தமிழாக்கம்: யூமா வாசுகி
பதிப்பு: புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை – நான்காம் பதிப்பு ஜுன் 2015.
NLB முன்பதிவு: Pūkkataikaḷ / Je. Tēvikā ; mol̲iyākkam, Yūmā Vācuki.
கன்னிமாரா முன்பதிவு: இல்லை

pookathaikal 1

இது ஒரு சிறுகதைத் தொகுப்பு. இதில் மொத்தமாக 4 சிறுகதைகள் உள்ளன.

முதல் சிறுகதை – எனக்கொரு கதை சொல்.

மணிக்குட்டிக்குத் தம்பிப் பாப்பா பிறந்ததால் தனிமையாக உணர்ந்தாள். அதை எல்லாம் மாற்ற செம்பருத்திப்பாட்டி கதை சொல்லி மாற்ற வந்தாள்.

pookathaikal 3

இந்தக் கதை என் வாழ்க்கையோடும் பொருந்தி வந்தது. ஏனென்றால் எனக்கும் ஒரு தம்பி இருக்கிறான். என் தாயும் தந்தையும் அவனைத் தான் எப்பொழுதும் பார்த்துக்கொள்கிறார்கள். என்னை அவர்கள் பார்த்துக் கொள்வது இல்லை. எனவே மணிக்குட்டி மாதிரி நானும் தனிமையாக உணர்கிறேன். தம்பி ஒரு சின்னப் பையன். சாப்பிடத் தெரியாது. எதுவும் தெரியாது. அதனால் என்னுடைய தாயும் தந்தையும் அவனைத்தான் கவனித்துக்கொள்ளவேண்டும்.

இரண்டாவது கதை – ஆகாயத்துப் பெண்ணும் பூலோகத்துப் பையனும்

இது செம்பருத்திப் பாட்டி மணிக்குட்டிக்குச் சொல்கிற கதை. இது ஒரு பேராசைப் படும் பெண்ணைப் பற்றியது. சூரியன் மாமா ஒரு வானவில்லை ஆகாயத்துப் பெண்ணுக்குப் பரிசாகத் தருவான். பூலோகத்துத் தம்பி அதை விளையாடக் கேட்பான். அவனை ஏமாற்றி விடுவாள். சூரியன் மாமா அவளுடைய மனதை மாற்ற ஒரு தந்திரம் செய்கிறான்.

rainbow

வானவில் எப்படி உருவாகிறது என்பதை அடிப்படையாகக் கொண்ட கதை இது.

மூன்றாவது கதை – மழை மேகமும், குறிஞ்சிப் பையனும்

இது செம்பருத்திப் பாட்டியின் தோழியான மழை மேகம் மணிக்குட்டிக்குச் சொல்கிற கதை. இது அக்காவிற்கும் தம்பிக்கும் உள்ள பாசத்தைப் பற்றிய கதை. அக்கா மழை மேகம். தம்பி குறிஞ்சிப்பூ. அம்மா நீலமலை. காற்று ஊதித் தள்ளிய தன் அக்காளைக் கூட்டி வர குறிஞ்சிப் பூ தம்பி எப்படி மீட்கிறான் என்று நான் படித்தேன்.

Strobilanths kunthiana குறிஞ்சி
Strobilanths kunthiana குறிஞ்சி

தமிழகத்தின் நீலகிரி மலையில் 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப்பூவை அடிப்படையாகக் கொண்ட கதை இது.

நான்காவது கதை – முத்தும் பவழமும்

இது செம்பருத்திப் பாட்டியின் இன்னொரு தோழியான பவழமல்லிப் பாட்டி மணிக்குட்டிக்குச் சொல்கிற கதை. சூரிய அக்காவும், சந்திர தம்பியும் எப்பொழுதும் சேர்ந்து இருக்க விரும்புவார்கள். ஆனால் சூரியனும் சந்திரனும் சேர்ந்து ஒரே நேரத்தில் வராது அல்லவா? இயற்கை தேவதை இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்த்து, அக்கா தம்பியை ஒன்றாக சேர்க்கிறாள் என்பதே கதை.

pavalamalli - (c) http://blog.nurserylive.com/2016/06/28/let-us-grow-d-kalp-vriksha-or-parijat-in-our-homes-and-gardening-in-india
pavalamalli – (c) http://blog.nurserylive.com/2016/06/28/let-us-grow-d-kalp-vriksha-or-parijat-in-our-homes-and-gardening-in-india

பூமியின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட கதை இது.

இந்தக் கதைகள் மணிக்குட்டியின் மனதை மாற்றியதா? அவள் தம்பிமீது பாசம் கொண்டாளா? என்பதை வாசித்துத் தெரிந்து கொள்க.

அன்புடன்
கண்ணன்.

kannan

குட்டித்தாத்தா | Natalie Norton


தினமும் குட்டித்தாத்தா குளித்து சுத்தமான உடை அணிவார். பிறகு அவர் தானே காலை உணவைச் சமைப்பார். உணவு மேசையில் உட்கார்ந்து தனியாகவே சாப்பிடுவார்.

யாராவது நண்பர்களுடன் சேர்ந்து காலை உணவு சாப்பிடுவதை தாத்தா மனதார விரும்பினார்.

a little old man natalie norton 2

குட்டித்தாத்தா
ஆசிரியர் : Natalie Norton
படங்கள் : Will Huntington
மொழி மாற்றம்: கொ.மா. கோ. இளங்கோ
பதிப்பு: Books for Children, Chennai, Sep 2015.

நூலக முன்பதிவு:
NLB: குட்டித்தாத்தா= A little old man
கன்னிமாரா: காணோம்!
மின்புத்தகம்: http://www.arvindguptatoys.com/arvindgupta/oldman.pdf

மிகவும் தொலைவில் இருந்த தீவில் ஒரு கிழவர் வாழ்ந்து வந்தார். அவருக்குத் துணைக்கு யாரும் இல்லை. அந்தத் தாத்தா தனிமையாக இருக்கும்போது மிகவும் கவலைப் பட்டார். அவருக்குப் பூனைகள் கிடைத்தன. அதற்குப் பிறகு அவர் வாழ்க்கையில் கவலைப் பட்டாரா என்பதுதான் கதை.

a little old man natalie norton 1

நான் தனிமையாக இருக்கும்போது நான் மிகவும் கவலைப் படுவேன். பேசுவதற்கு யாரும் இல்லை. எனக்கு நடந்ததை வைத்து நான் இந்தக் கதையைப் புரிந்து கொண்டேன். யாரும் இல்லை என்றால் என்னை மாதிரிதானே அவரும் நினைத்திருப்பார். கதையைப் படிக்கும்போது அவரைப் பார்த்தால் பாவமாக இருந்தது.

தாத்தாவும் பூனைகளும்தான் இந்தக் கதையின் கதாப் பாத்திரங்கள்.

னி ங்கிப் புத்தாண்டு வாழ்த்துக்ள் 2018

kannan

 

கடைசிப் பூ | James Thurber


ஒரு நாள் ஒரு பெண் கடைசியாக உயிர் பிழைத்த ஒரு பூவைப் பார்த்தாள். அவள் அன்றுதான் முதன் முதலாகப் பூவைப் பார்த்தாள். கடைசிப் பூ கூட வாடப் போகிறது என்று அவள் மற்றவர்களுக்குப் புரிய வைத்தாள்.

the last flower 2

James_Thurber_NYWTSகடைசிப் பூ
ஆசிரியர் – ஜேம்ஸ் தர்பெர்
மொழி மாற்றம் – கொ. மா. கோ. இளங்கோ
பதிப்பு – Books for Children, Jan 2016

நூலக முன்பதிவு

முதலாம் உலகப்போரின் போது நிறைய மக்கள் இறந்து போனார்கள். ஆண்கள், பெண்கள், மற்றும் குழந்தைகள் எல்லோருமட் விலங்குகளை விட மோசமான நிலையை அடைந்தார்கள். காரணம், கணவுத் தட்டுப்பாடும், அன்பு இல்லாததுமே. மொத்த பூமியும் அழிந்த பிறகு ஒரே ஒரே பூ மட்டும் உயிர் பிழைத்தது. அந்தக் கடைசிப் பூவைக் காப்பாற்றியது யார்?

the last flower 3

அந்த ஊர் மக்கள் எல்லாம் மிருகம் மாதிரி ஆனவுடன், ஒரு பெண் குழந்தை ஒரு காய்ந்து போகப்போகும் பூவைப் பார்த்துவிட்டு, ஐயோ பாவம் என்று எல்லா ஊர் மக்களிடமும் சொன்னது. அதை அவளால் காப்பாற்ற முடிந்ததா, இந்தக் கதையைப் படித்தால் தெரியும்.

the last flower 1

அன்புடன்
கண்ணன்.

kannan

 

அரோல்டும், ஊதாக்கலர் கிரேயானும் | Crockett Johnson


அது ஒரு கொடூரமாய் பயமுறுத்தும் டிராகன். மேலும் அது அரோல்டையும் பயமுறுத்தியது. அவன் சற்று பின்னோக்கி தள்ளி நகர்ந்து போனான்.
ஊதாக்கலர் கிரேயான் பிடித்திருந்த அவனது கை நடுங்க ஆரம்பித்தது.

Crockett_Johnson_(mid-1960s)

அரோல்டும், ஊதாக்கலர் கிரேயானும்
ஆசிரியர் : Crockett Johnson
மொழிமாற்றம்: கொ. மா. கோ. இளங்கோ
பதிப்பு: Books For Children, சென்னை – முதல் பதிப்பு ஜனவரி 2016
NLB முன்பதிவு | கன்னிமாரா முன்பதிவு (காணோம்!) | இணையத்தில் படிக்க

அரோல்ட் ஊதாக் கலர் கிரேயான வெச்சு என்ன பன்னான்னு உங்களுக்குத் தெரியுமா?

அது சாதாரண கிரேயான் இல்ல – மந்திர கிரேயான். ஏன்னா, அத வெச்சு அவன் ஒரு நகரத்தையே உருவாக்கிட்டான். ஆனா அதுல முழுக்க ஜன்னலா இருந்திச்சி.

அரோல்டு மட்டும்தான் இந்தக் கதையில முக்கியமான கதாப்பாத்திரம்.

Harold and the Purple Crayon 2

இது ரொம்ப குழந்தைத் தனமான கதை. எனக்கு இந்தக் கதையில கிளைமேக்ஸ் ரொம்ப பிடிச்சிச்சு.

கொ.மா.கோ இளங்கோ தமிழில் நன்றாக மொழிபெயர்த்து இருக்கார்.

Harold and the Purple Crayon

மந்திர விதைகள் | Mitsumasa Anno


மந்திரவாதி அந்தச் சிறுவனுக்கு 2 தங்க விதைகள் பரிசாகத் தந்தார். “இவை மந்திர விதைகள்” என்றார். “ஒரு விதையை வேக வைத்துச் சாப்பிடு. அதன் பிறகு ஒரு வருட காலம் உனக்குப் பசியெடுக்காது மற்றொரு விதையை நீ உன் தோட்டத்தில் மண் தோண்டி விதைத்துவிடு”

மந்திர விதைகள் (Magic Seeds)
ஆசிரியர்: Mitsumasa Anno
மொழி மாற்றம்: கொ. மா. கோ. இளங்கோ
பதிப்பு: Books for Children, சென்னை செப் 2015

Mitsumasa Anno
Mitsumasa Anno

ஜாக்கிற்கு எப்படித் தங்க விதைகள் கிடைத்தன?

இந்தக் கதையை பணக்காரனுக்குத் தங்கமழை கொட்டினால் எப்படி இருக்குமோ அப்படி வாசித்தேன். இந்தக் கதை சுமாராக இருந்தது. ஆனால் முதல் பக்கக் கதை எனக்குப் பிடித்திருந்தது. ஏனென்றால் ஜாக்கிற்கு அந்தத் தாத்தாவைத் தெரியாது. ஆனால் அந்தத் தாத்தா அவனுக்கு இரண்டு மந்திர விதைகளைக் கொடுத்தார்.

Magic Seed 2

முக்கியமான கதாப் பாத்திரங்கள்

Magic Seed 3

  • ஜாக்
  • தாத்தா

இந்தக் கதை வாசிக்கத் தொடங்கும் சிறு பிள்ளைகளுக்கானது. கொ. மா. கோ. இளங்கோவின் மொழி மாற்றம் எளிதாக இருந்தது. அவர் கடினமான சொற்கள் எதுவும் சேர்க்கவில்லை.

Magic Seed 1