என்னைப்பற்றி


வருக, கடைசி பெஞ்ச் வலைப் பதிவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி.
‘இது யார்’ என்று பார்க்க வருவதற்கு அசாத்திய பொறுமையும், அளவு கடந்த நல்லெண்ணமும் வேண்டும்.

maharaj-n

சமூக வலைப் பின்னல்கள் ஒரு நபரைப் பற்றிய அரட்டைச் சித்திரத்தையே தருகிறது. அவரவர் தனிப்பட்ட விருப்பங்களைக் காட்ட வலைப்பதிவே இன்றளவும் பயன்படுகிறது. அவரவர் ஆளுமைகளைக் காட்டுவதாய் உள்ளது என்பது இந்த சிறியவனின் கருத்து மட்டுமல்ல, பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தும் கூட. வெளிப்படுத்தும் அளவிற்கு ஆளுமை இன்னும் வராத காரணத்தால் (!) நான் வாசித்தவற்றையும், செய்த பயணங்கள் பற்றியும்….. ஆளே இல்லாவிட்டாலும், நான் இங்கே டீ ஆத்தியிருக்கிறேன்! இரு மொழிகளில் எழுதி வருகிறேன். எனது ‘ஆங்கில பீட்ரு’ பதிவுகள் Dwaraka என்கிற வலைத்தளத்தில் இருக்கின்றன.

அபாயம்: மக்களாட்சியும் தேர்தல்களும் எனக்கு ஆர்வம் அளிக்கக் கூடியவை. அது தொடர்பான நுனிப்புல் பதிவுகள் அவ்வப்போது வரும்!

இணையத்தில் பண்பான உரையாடல்களுக்கு கடைசி பெஞ்ச் குரல் கொடுக்கிறது.

A better internet is our choice really.
1. Be Kind and use it responsibly
2. Learn to unfollow/unfriend 😉

பாண்டியன், புதுக்கோட்டை
கடைசி பெஞ்ச் | Dwaraka

27 thoughts on “என்னைப்பற்றி

  1. வணக்கம். என் பெயர் பாலமுருகன், சென்னை. உங்களின் டூரிங் அனுபவங்களை பற்றி அறிந்துகொள்ள விருப்பம். தொடர்புகொள்ள முடியுமா?

    dheembala@gmail.com

    • அன்பின் பாலமுருகன். வணக்கம்.
      பதில் எழுத இயலவில்லை மன்னிக்கவும். தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. நான் யாகூவில் இருப்பேன். barathee[at]yahoo[dot]com
      நன்றி.

      —-
      2010/04/22 at 4:37 pm

      வணக்கம். என் பெயர் பாலமுருகன், சென்னை. உங்களின் டூரிங் அனுபவங்களை பற்றி அறிந்துகொள்ள விருப்பம். தொடர்புகொள்ள முடியுமா?

      dheembala@gmail.com

  2. எனக்கு ஒரு கார் வாங்க ஆசை (குறைந்த விலையில் )
    எந்த கார் நல்லா இருக்கும் நு கொஞ்சம் சொல்லுங்களேன். (பொதுவா எல்லோரும் ஒரு ஒரு காரிலும் எதாவது ஒரு ஸ்பெஷல் irukk சொல்லி குழபிடுறாங்க )

    • அன்பின் வினோ,
      தங்கள் டேஸ்ட் படி எடுங்கள். பட்ஜெட், பிராண்டுகள், தேவையான வசதி மற்றும் சொகுசு இவற்றைத் தேர்ந்தெடுத்து உங்களுக்கு என்ற ஒரு அளவு கோள் வைத்துக்கொண்டு சில கார்களைத் தேர்ந்தெடுங்கள். சற்று அலைச்சலாக இருக்கும். ஆனால் தெர்ந்தெடுத்த பின் ஒரு மகிழ்ச்சி இருக்கும். திருப்தி இல்லாமல் எந்த ஒரு காரையும் தெர்ந்தெடுக்காதீர். நான் இதுவரை எந்த காரையும் எடுத்ததில்லை!!! இது தான் பஞ்ச்!

  3. I dont understand a word in this. But i really appreciate your effort in putting this blog up in Tamil.. especially after having difficulties in finding a vernacular script site for my peers who can’t understand English. Kudos to you mate! Keep up the good work…

  4. இத்தனை மெனக்கெட்டு ஒருவர் வலையுலகத்தில் பதிபவரை இவ்வளவு தாமதமாக பார்ப்பதில் எனக்கு சற்று வருத்தம் .ஆனாலும் இப்போதாவது அது நிகழ்ந்து இருகிறதே .அருமையான பதிவுகள் .என் சொந்த( திண்டுக்கல் ) ஊரை பற்றி தேடும்போது உங்கள் பயணம் பற்றி அறிந்தேன் .தொடருங்கள் .தொடர ஆசைப்படுகிறோம் .

    • வாங்க. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

    • நன்றி திரு அழகப்பன் அவர்களே.
      தங்களது வலைப்பதிவு முகவரி என்னவோ.

  5. உங்களின் வலைப்பக்கத்தில் இன்றுதான் நுழைய நேர்ந்தது. புதுக்கோட்டையும் அதற்கொரு காரணம்! நானும் புதுக்கோட்டை மன்னர் கல்லூரி ப்ராடக்ட்தான். இப்போதிருப்பது புது டெல்லியில். ’புது’ இன்னும் போகவில்லை பார்த்தீர்களா- ஏனெனில், புதுக்கோட்டைக்காரர்கள் எப்போதும் புதுசானவர்கள்! நிறைய எழுதுங்கள்.

    எனது மென்கவிதைகளை இங்கே காணலாம்: http://aekaanthan.wordpress.com ஏகாந்தன்

    • வணக்கம்.
      தங்களின் செய்திக்கு நன்றி.
      தங்களை சமூக வலையில் எப்படித் தொடர்பு கொள்ளலாம்? facebook, twitter, gtalk??

  6. வணக்கம் பாண்டியன்.

    உங்களைபோலவே என் பிள்ளையும். இரண்டு சக்கர வாகனத்தில் ஊர் சுற்றுவது, பயணம் போவது அவனுக்குப் பிடித்த ஒன்று. எங்கே போனாலும், தனது இரண்டு சக்கர வாகனத்தை விதம்விதமாக போட்டோ எடுத்துப் போடுவான். சமீபத்தில் புல்லட் வாங்கியிருக்கிறான். இரண்டு, நான்கு சக்கர வாகனங்களின் மேல் சிறு வயதிலிருந்தே தீராத மோகம்.

    அவனையும் ப்ளாக் எழுதச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

    உங்களது எழுத்துக்களும் எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. பாராட்டுக்கள். உங்கள் கட்டுரைகளைத் தொகுத்து மின்னூல் போடுங்களேன்.

    வாழ்த்துக்கள்!

    • சில பதில்கள் எதிர்பாராதவை. அளவற்ற மகிழ்ச்சியை அளிப்பவை. அது போன்றதுதான் தங்களது பதில்களும்.

      புல்லட் ஆர்வம் மிக்க சகோதரர் இனிய நினைவுகளைப் பகிரச் சொல்லுங்கள். அவசியம் ஒளிப்படங்களையாவது சேகரித்து பகிரச்சொல்லுங்கள். என்றுமே அலுப்பு தட்டாதது நம் தாய்நாடு.

      தங்கள் வாழ்த்துக்களுக்கும் தொடர்ந்த ஊக்குவிப்பிற்கும் நன்றி.

  7. யாரிவர் இவ்வளவு சீக்கிரம் லைக்கிங் போட்டிருக்கிராரே பார்த்ததால் உங்களைத்
    தெரிந்து கொள்ள முடிந்தது. மிக்க ஸந்தோஷம். இன்னும் நிறைய உங்களைப் பற்றி படிக்க வேண்டும். நன்றாக எழுதுகிறீர்கள். அன்புடன்

    • வணக்கம் சார். நாம் சந்தித்துள்ளோம். வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் வலைப்பதிவு முகவரிக்கும் மிக்க நன்றி.

  8. அருமை. தமிழகத்தின் சிறப்புகள் குறித்து ஓர் ஆய்வுத் தொகுப்பு தயாரித்துக்கொண்டிருக்கிறேன். உங்கள் உறுதுணை தேவை. மின்னஞ்சல் பதியவும் அல்லது pisaasukuttyezhilan@gmail.com

  9. அருவருப்பான நாகரிகம் போன்ற மொழிபெயர்ப்பு குறுநாவல்களை இணையத்தில் வாசிக்க பெறலாமா?

    • தெரியலைங்க. அருவருப்பான விவகாரம் விலை குறைவானதுதான். இணையத்தில் சொன்னால் வீட்டிற்கே அனுப்பிவிடுகிறார்களே. அதற்கான காசும் சரியானவர்களுக்குப் போய் சேருமே. உரிமம் இல்லாத ஈபுக் தளங்களை ஊக்குவிப்பது எழுத்தாளர்களுக்கு நாம் செய்யும் கைமாறாக இருக்காது அல்லவா.

      வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

  10. அபாயம்: மக்களாட்சியும் தேர்தல்களும் எனக்கு ஆர்வம் அளிக்கக் கூடியவை.

    Hi Pandiyan, Happy to see this line. A lot of imaginations run in my mind about Democracy and how it could become far more closer to what it actually means and how easy it is to make that happen in this digital age and why we are not yet moving towards that, How we can bring this transformation, these are running in my mind ever since we stated enjoying the benefits of Mobile Apps and Customer Feedback Systems.

    Have you written anything exclusively about this ? i would like to explore that.

    Thanks
    Puviarasan Era

Leave a comment