Mercedes Benz B Class Tourer Vehicle இந்தியாவில் அறிமுகம்


Mercedes-Benz India கடந்த வாரம் தனது பி-கிளாஸ் ஸ்போர்ட்ஸ் டூரர் காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

ஸ்போர்ட்ஸ் டூரிங் என்பது உலகிற்குப் புதிதல்ல. மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவின் விற்பனை இயக்குநர் டெபஷிஸ் சொல்வது போல இந்தியாவிற்குமே புதிதல்ல. ராயல் என்பீல்டு தன் வாடிக்கையாளர்களுடன் இமயமலையை முற்றுகை இடுகிறது. www.xkmph.com www.bcmtouring.com போன்ற தளங்களில் பைக்கர்கள் வெளுத்து வாங்குகிறார்கள். கார்களில் ஊர் சுற்றும் வாலிபர்களும் இங்கு வந்து சலம்பாமல் இருப்பதில்லை. அவர்களைக் குறிவைத்துதான் இந்த புதிய கார் வெளியிடப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

மெர்சிடிஸ் பென்ஸ் - கிளாஸ் பி - ஸ்போர்ட்ஸ் டூரர் (c) Hindu
மெர்சிடிஸ் பென்ஸ் – கிளாஸ் பி – ஸ்போர்ட்ஸ் டூரர் (c) Hindu

இதன் மூலம் கார்களில் ஒரு தனிப் பிரிவினை இந்தியாவில் தொடங்கி உள்ளதாக கூறும் மெர்சிடிஸ் பென்ஸ் களத்தில் audi மற்றும் BMWவை எதிர்கொள்ள இருக்கிறது.

இந்தியன் என்கிற பார்வையில் இரு விசியங்கள் என் கண்ணைக் கவர்கின்றன.
– 22 லகரம் (B 180) மற்றும் 25 லகரம்(B 180 sport) என்ஸ்ஷோரூம் விலை
– 14 .8கிமீ மைலேஜ்
– பென்ஸ் வரிசையில் விலை குறைந்த கார்

மெர்சிடிஸ் பென்ஸ் கிளாஸ் பி ஸ்போர்ட்ஸ் டூரர் டெஸ்ட் டிரைவ் - http://www.zigwheels.com
மெர்சிடிஸ் பென்ஸ் கிளாஸ் பி ஸ்போர்ட்ஸ் டூரர் டெஸ்ட் டிரைவ் – http://www.zigwheels.com

அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்னரே 250 கார்களுக்கான முன்பதிவு முடிந்துவிட்டதாகவும் அவை ஜனவரி மாதத்திலிருந்து ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவிக்கின்றனர்

வெளிப்புறத்தோற்றம் - (c) http://www.zigwheels.com
வெளிப்புறத்தோற்றம் – (c) http://www.zigwheels.com

தற்சமயம் இந்த கார் ஒட்டுமொத்தமாக இறக்குமதி செய்யப்படுகிறது.

வெளிப்புறத்தோற்றம் - (c) http://www.zigwheels.com
வெளிப்புறத்தோற்றம் – (c) http://www.zigwheels.com

இப்ப பெட்ரோல் வண்டி மட்டும்தான். டீசல் கார் அடுத்த வருடத்தின் 3வது காலாண்டில் வருகிறதாம்.

டெபஷிஸ் கூறிய கதைகளில் ஒரு சில இடங்கள் என் கவனத்தைக் கவர்ந்தது.
1. ப்ரீமியம் வரிசையில் வரும் முதல் சிறிய கார் இது
2. இந்த ஒரு காரில்தான் 7 ஏர்பேக் உள்ளது.
3. அத்துடன் இல்லாமல் டிரைவரின் கால் அசைவை வைத்து அண்ணன் கோடாங்கி அடிக்கிறாரா என்று அவதானித்து அப்பா சாமி. இந்தா காப்பி குடிச்சிட்டு ஓட்டு. எங்கயாவது கொண்டு போய் என்னைத் தள்ளிடாதேன்னு சொல்லுமாம்.

உட்புறத்தோற்றம் - http://www.zigwheels.com
உட்புறத்தோற்றம் – http://www.zigwheels.com
உட்புறத்தோற்றம் - http://www.zigwheels.com
உட்புறத்தோற்றம் – http://www.zigwheels.com
உட்புறத்தோற்றம் - http://www.zigwheels.com
உட்புறத்தோற்றம் – http://www.zigwheels.com

20 – 30 வயதுள்ள டூரிங் ஆர்வமுடைய யுவன் யுவதிகளையே குறி வைப்பதால் டிவி பத்திரிகையை விட இணையத்தில் அதிகமாக விளம்பரப் படுத்துகிறார்கள். டிவிட்டரை பாலோ செய்தால் மழையாய் செய்தி குமிவது நிச்சயம்!

புதிய கார் மற்றுமல்ல ஒரு புதிய கார் பிரிவையே துவக்கி வைக்கிறோம்னு சொல்றாக.

Engine and performance
Cylinder arrangement/number
4/in-line
Displacement (cc)
1595
Rated output (kW [hp] at rpm)
90 [122] @ 5000
Rated torque (Nm at rpm)
200@ 1250-4000
Acceleration 0-100 km/h (s)
10.2
Top speed (km/h)
190
Fuel and consumption
Tank capacity/with reserve (l)
50/6.0
Chassis (standard) & wheels
Front tyres/wheels
225/45 R17
Rear tyres/wheels
225/45 R17
Dimensions and weights
Kerb weight/payload capacity (kg) [1]
1425
Perm. GVW (kg)
1950
Maximum roof load (kg)
Boot capacity (VDA) (I)
486-1545
Turning circle (m)

பேஜியோ வெஸ்பா LX125 ஸ்கூட்டர்


வெஸ்பா ஸ்கூட்டர் திரும்ப இந்திய ரோடுகளை ஆக்கிரமிக்க வருவதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஸ்கூட்டர் ரேஸ் வெகு பிரமாதமாக நடக்கிறது – நடக்க இருக்கிறது நம்ப ஊரில். ஏற்கனவே யமஹா ரே ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி ரேசில் கலந்து கொண்டுள்ளது. 18 முதல் 24 வயதுள்ள பெண்களை வளைத்துப்போட அந்த அழகு ஸ்கூட்டர் சதித்திட்டம் தீட்டி உள்ளது. பார்த்துக்கொண்டிருப்பாரா இந்தாலி பேஜியோ? அந்தக் காலத்திலேயே இந்திய ரோட்டின் பல்ஸ் பார்த்தவராயிற்றே. பெண்கள் மனம் கவரும் பல வண்டிகளை வெஸ்பா LX125 பெயரில் வெளியிட உள்ளனர். ஆரஞ்சு மற்றும் பிங்க் வர்ணத்தில் வர்ணத்திலும் இந்த ஸ்கூட்டர் வரப்போவதாக செய்திகள் உலா வருகிறது. வரும் தீபாவளிக்குள் தெரிந்துவிடும். காத்திருங்கள்.

2012-Piaggio-Vespa-LX125-Automatic-Scooter
2012-Piaggio-Vespa-LX125-Automatic-Scooter

ஹோண்டா, ஸுஸுகி, ஹீரோ நிறுவன ஸ்கூட்டர்கள் மாதிரி பெண்களுக்கான வண்டியாக இல்லாமல் இரு பாலினருக்கும் ஏற்றபடி வெஸ்பா ஸ்கூட்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் கொஞ்சம் இருக்கப்பட்டவர்கள் வாங்கும்படிதான் விலை இருக்கும் போல. மும்பை எக்ஸ் ஷோரூம் விலை 66ஆயிரம் ஆகிறது. ஆனாலும் இதன் உயர்தர ஸ்டைலான வடிவமைப்பு மற்றும் பிராண்டு இமேஜ் உடன் இந்திய ஸ்கூட்டர் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கலாம்.

2012-Piaggio-Vespa-LX125-in-pink
2012-Piaggio-Vespa-LX125-in-pink

வெஸ்பா LX125 ஸ்பெக்:
3 வால்வ்
125 சிசி 4 ஸ்ட்ரோக் CVT தானியங்கி டிரான்ஸ்மிஷன்
10 Bhp@10.6 Nm முறுக்குவிசை
மைலேஜ் – 60 கிமீ

News & Pictures (c) http://www.indiancarsbikes.in

ரே – யமஹாவின் ஸ்கூட்டர் அறிமுகம்


இந்தியாவில் யமஹா சற்று அழுத்தம் திருத்தமாக சில மாறுதல்களை ஏற்படுத்துகிறது. ஸ்கூட்டர் வழக்கொழிந்துவிட்டது என்று நினைக்கையில் பஜாஜ் சன்னி ரோடுகளில் வலம் வர பிறகு டிவிஎஸ் ஸ்கூட்டி – ஹோண்டா ஆக்டிவா என்று விரிந்த ஸ்கூட்டர் மார்க்கெட் வெகு விரைவில் இளம் வயதினரை – குறிப்பாக கல்லூரி மற்றும் அலுவலகம் விரையும் இளம் பெண்களை வளைத்துக் கொண்டது. தற்சமயம் ஹோண்டா, டிவிஎஸ், ஹீரோ, மஹிந்திரா, என்று கடும் போட்டி நிலவுகிறது.

44ஆயிரத்திலிருந்து ஆரம்பிக்கும் ஸ்கூட்டர்கள் பலதரப்பட்ட மாடல்களில் கிடைக்கின்றன. அதனை ஒட்டி யமஹா கடந்த ஆட்டோ எக்ஸ்போவில் ரே ஸ்கூட்டர் செய்தியை வெளியிட்டது. பைக்குகளுக்கு ஜான் ஆபிரகாம் உள்ளதைப் போல ஸ்கூட்டர்களுக்கு தீபிகா படுகோனை விளம்பரத் தூதராகவும் நியமித்தது.

சந்தையில் சலசலப்பை ஏற்படுத்திய இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இரு தினங்களுக்கு முன் ரே ஸ்கூட்டரை வெளியிட்டது யமஹா.

Yamaha Ray
Yamaha Ray

அதன் விபரங்கள் கீழே

Spec யமஹா ரே ஹோண்டா ஆக்டிவா
எஞ்சின் 113சிசி 109 சிசி
முறுக்குவிசை Torque 7.1PS at 7500rpm and 8.1Nm of torque 5.71KW (8bhp) @ 7500 RPM
மைலேஜ் 62.1கிமீ/லி 35கிமீ/லி
எடை 104 கிலோ 110 கிலோ
பிரேக் 130மிமீ டிரம் 130மிமீ டிரம்

12 விநாடிகளில் 60 கிமீ வேகத்தை அடையும் ரே ஸ்கூட்டரின் 60+ மைலேஜ் ஒரு வியாபார உத்தியாகும் என்பதில் ஐயமில்லை

ரே ஸ்கூட்டரை வாங்க வரபவர்களை பெண்களை வைத்தே வரவேற்கவும் தயாராகிறதாம்!

மற்றவற்றை விட குறைந்த எடை என்பதால் எளிதாகக் கையாள வாய்ப்பு உள்ளது

சீட்டின் உயரம், சைடு ஸ்டாண்டு, மையப்பகுதியின் டிசைன் ஆகியவை முழுக்க பெண்களை மனதில் வைத்தே வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிங்க், கருப்பு, நீலம், கத்திரப்பூ, சாம்பல் மற்றும் அரக்கு (burgundy) என்று 6 வர்ணத்தில் வர இருக்கிறது.

சென்னை விலைக்கு 54ஆயிரம் விலைக்கு வர உள்ளது. புக்கிங் ஆரம்பித்துள்ளது என்றாலும் வண்டி இந்த மாத இறுதியில் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Yamaha ray scooter Adv
Yamaha ray scooter Adv

Maruti 800 becomes a history – மாருதியின் சின்ன கார் அறிமுகம்


maruti 800
maruti 800

சின்னகார் சின்னகார் என்று 2009 பூரா ஒரே பேச்சு. இதை சின்ன கார் வருஷம்னு அறிவித்துவிடலாம் போல. இந்த முறை மாருதி. மாருதியின் 800 கார் சரித்திரமாகப் போகுது. இனிமே அந்த எஞ்சின் தயாரிக்க மாட்டாங்களாம். எல்லாம் BS4 படுத்தும் பாடு. 800 காரின் எஞ்சினை BS4க்காக மாற்ற அதிக பணம் மற்றும் நேரம் செலவாகும் என்கிற காரணத்தால் புது எஞ்சினுக்குப் போய்விட்டார்கள். அத்தோட புது குட்டி காரும்.

YE3 என்று நாமகரணமிடப்பட்ட இந்த கார் ஜனவரி ஆட்டோ எக்ஸ்போவிற்கு வருகிறது. மக்கள் கண்ணைக் கவர்ந்தது என்றால் மாருதியின் தயாரிப்புக் கூடம் பிசியாகிவிடும். BS4 கட்டுப்பாட்டுடன் அடுத்த வருடம் இந்தியாவின் 11 நகரங்களில் YE3 அறிமுகப்படுத்தப்படும் என்று மாருதியின் நிர்வாக இயக்குநர் ஷின்ஸோ நகன்ஷி தெரிவித்திருக்கிறார்.

Wagon R மாடலிலும் YR9 என்ற புதிய தலைமுறை கார்கள் வருவதாகச் சொல்கிறார்கள், அதும் புது எஞ்சினோட!

தீ பறக்கட்டும்! கார்பன் குறையட்டும்.

ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் சீன கூட்டு


General motors

ஜெனரல் மோட்டார்ஸ் சீனாவின் Shanghai Automotive Industry Corporation (SAIC)  உடன் இணைந்து இந்திய மற்றும் ஏற்றுமதி சந்தைக்கான கமெர்சியல் வாகனங்களை  வடிவமைக்கவும்  தயாரிக்கவும் உள்ளார்கள்.  இதன்மூலம் ஜெனரல் மோட்டாருக்கு மினி கமெர்சியல் வாகனங்களின் பரிச்சயம் கிடைக்கும், அத்தோடு அதன் வாகனங்கள் சீனாவிற்கும் அறிமுகமாகும்.

பெருகி வரும் தேவை. அத்தோடு அன்னியர் படையெடுப்பு.
ரோடு போட யாராவது வாங்கப்பா. அட்லீஸ்ட் இருக்கிற ரோடுக்கு பக்கத்தில ரெண்டு செடியாவது நட்டுவெச்சிட்டுப்போங்க!