நான் நாகேஷ் – நூல் அறிமுகம்


தமிழ் திரைப்பட வரலாறை நாகேஷ் விடுத்து எழுத இயலாது. உடல் மொழி, வாய்மொழி, கண் மொழி அனைத்திலும் நாகேஷ் தன் தனி முத்திரையைப் பதித்தவர். இயக்குநர் ஜாம்பவான்கள் ஸ்ரீதர், கே பாலச்சந்தரை வசீகரித்த கதாநாயகர். எனவே நகைச்சுவை நடிகர் என்கிற குறுகிய வட்டத்திற்குள் அவரை அடக்குவது அவருடைய ஆளுமையின் மீது நாம் நடத்தும் தாக்குதல் போன்றது. ஒரு நாளைக்கு இரண்டு மூன்று திரைப்பட கம்பெனிகளின் படப்பிடிப்புகளில் பங்கெடுக்கும் அளவிற்கு தொழிலில் கொடி கட்டிப் பறந்தவர். அதே திரைப்படத்துறையால் இறுதி காலத்தில் சரியாகப் பயன்படுத்தக்கொள்ளப் படாது விடப்பட்டவர். இந்திய அரசின் விருதுகளால் புறக்கணிக்கவும் பட்டவர்.

கிழக்கில் இருந்து ‘நான் நாகேஷ்’ நூலைப் பற்றி செய்திமடல் வந்திருந்தது. Prime Reading இலும் இருந்தது. மிக எளிய நடையில் இருந்ததால் விரைவிலேயே வாசிக்க முடிந்தது.

நாகேஷ் இளமையில் தன் அழகின் மீது அகந்தை கொண்டிருந்ததாகவும், பிற்பாடு ஏற்பட்ட அம்மை நோயினால் முகம் பொலிவு இழந்ததை அதற்கான தண்டனை என்றும் பதிவு செய்திருக்கிறார். பின்னாளில் அதன் காரணமாக பல்வேறு இடங்களிலும் உதாசீனப்படுத்தப்பட்டுள்ளார்.

தொழிற்சாலை, சூப்பர் மார்க்கெட், நாடக நிறுவனம், ரயில்வே என்று பல்வேறு இடத்திலும் வேலை செய்திருக்கிறார். இருவகையினரால் ஒரே வேலையில் இருக்க இயலாது. ஒன்று – எந்த வேலையும் தெரியாதவர். இன்னொன்று – ஒரே மாதிரி வேலையை தொடர்ந்து செய்வதில் ஆர்வம் இல்லாதவர். இதில் நாகேஷ் இரண்டாவது வகை. அதிலும் நடிப்பின் மீதான ஆர்வம் அவரைத் திரைத்துறைக்குள் தள்ளியிருக்கிறது.

முகச்சாயம் சாராயத்தை விட அதிக போதை தரும் விஷயம்

– நாகேஷ்

அவர் பலவிதமான அவமானங்களைச் சந்தித்திருக்கிறார். அதனால் காயப்பட்ட மனதை முகமூடியிட்டு மறைத்து, தனி தனி பாணி நடிப்பினால் அவற்றை வென்றிருக்கிறார்.

டி.எம்.எஸ். எப்போதும் தான் பாடப்போகும் நடிகரை தெரிந்து கொண்டு அவருக்கு ஏற்றபடி தன் குரலில் மாறுதல் செய்து கொண்டு பாடுவது அவர் வழக்கம். அதன்படி, இந்தப்பாடலை தான் யாருக்காக பாடுகிறேன் என்று கேட்டார். எம்.எஸ்.வி. “நாகேஷ்” என்றார். அவர் பெயரை கேட்டதும், டி.எம்.எஸ். கேலியாக சிரித்து, அவருக்கு பாடலா? அதை நான் பாடவா, அதுக்கு இவ்வளவு பெரிய செட்டபா, என்னடா இது சோதனை, எனக்கு ஏற்பட்ட வேதனை, என்று திருவிளையாடல் டி.எஸ். பாலையா பாணியில் சலித்துக் கொண்டார். ….
ஒரு நாள் கடற்கரையில் நான் வாக்கிங் போய்க் கொண்டிருந்தேன். அப்போது டி.எம்.சவுந்திரராஜனை சந்தித்தேன் என்னை பார்த்ததும் சொன்னார். ‘ஜெய்ச்சிடீங்களே அய்யா!, சர்வர் சுந்தரத்துல நான் பாடிய பாடல் எடுபடாது, தியேட்டர்ல ஆள் இருக்காது என்றேன். ஆனா, அந்த பாட்ட பார்க்கவே ஜனங்க வர்றாங்கன்னு கேள்விப்பட்டேன். ரொம்ப மகிழ்ச்சி அய்யா’ என்று வாழ்த்திவிட்டு சென்றார்.

ஏ.வி.எம்.குமரன், தினத்தந்தியில்

கல்கியில் ‘சிரித்து வாழவேண்டும்’ என்கிற தலைப்பில் வெளியான கட்டுரைகள் தொகுக்கப்பெற்று இந்நூலக உருப்பெற்றுள்ளதாம்.

ஏன் இதை வாசிக்க வேண்டும்?

  1. நாகேஷ் அதிகம் பேசாதவர். அதிக மீடியா வெளிச்சம் படாதவர். அவரை ஆவணப்படுத்தும் 58 தன்வரலாற்றுக் கட்டுரைகள் கொண்ட நூல் இது.
  2. வெகு எளிதான எழுத்து நடை
  3. பிற நடிகர்களைப் பற்றிய நாகேஷ் அவர்களின் பதிவு (இயக்குநர் ஸ்ரீதர், நடிகர் பாலாஜி, எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், எம்ஆர்ராதா, மனோரமா, கவிஞர் வாலி)

இன்னும் செய்திருக்கலாம்

இந்த நூல் எளிய வாசகருக்கு எழுதப்படுகிற கட்டுப்பாடுகள் கொண்டு எழுதப்பட்டுள்ளது போலத் தெரிகிறது. இந்திய விருதுகள் தமிழக கலைஞர்களை வந்து அடையாதது குறித்து நாகேஷ் கவலை கொண்டவர். குறிப்பாக சிவாஜிக்கு நல்லதொரு அங்கீகாரம் டெல்லியால் தரப்படாதது குறித்து இந்துவில் பதிவு செய்திருக்கிறார்.

கல்கியில் எழுதும்போது சரி. நூலாக பதிவு செய்யும்போது அதன் வாசகர்களுக்கு ஏற்ற வகையில் இன்னும் அவரது ஆளுமையை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்க வேண்டும்.

நாகேஷ் தற்சமயம் மண் நீங்கிவிட்டதால் இனியொரு முயற்சி நடக்கப்போவதில்லை. அந்த வகையில் ஒரு நல்ல முயற்சியைச் செய்துள்ள எஸ் சந்திரமௌலிக்கு நன்றிகளும் வணக்கங்களும்.

As far as I am concerned, actor Nagesh deserves any major award presented in Cinema. If he was born in France, America or Germany, I can guess the kind of recognition he would have received. Despite 12 years having passed since his death, the government continuing to ignore him is a disappointment

Kamal Hassan, The Hindu, September 28, 2021,

நான் நாகேஷ் (தன் வரலாறு)
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
எழுத்து : எஸ். சந்திர மவுலி
விலை: ரூ. 239 / Kindle Prime / Kindle Unlimited

விவேகானந்தர் | ரஞ்சனி நாராயணன்


பசித்தவனுக்கு மதம் தேவையில்லை; அவனது தேவை பசித்தபோது உணவு. அந்த உணவை பெற, அவர்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க, கல்வியைக் கொடுங்கள். அந்தக் கல்வி ஏட்டுச்சுரைக்காயாய் இல்லாமல் மதத்திலிருந்து அவனை விலகாமல், அவனை உருவாக்கும் கல்வியாக இருக்கட்டும்

விவேகானந்தர் – இந்திய மறுமலர்ச்சி நாயகன்
ஆசிரியர் – ரஞ்சனி நாராயணன்
பதிப்பு – கிழக்கு பதிப்பகம்
அமேசான் – Vivekanandar: Indhiya Marumalarchi Nayagan (Tamil) Kindle Edition

விவேகானந்தரைப் பற்றி, எளிய தமிழில் அறிமுகப் படுத்தும் நூல் இது. விவேகானந்தரின் அமெரிக்க உரைகளின் தொகுப்பை தமிழாக்கிக் கொடுத்துள்ள விதம் இந்நூலைச் சுவையுள்ளதாக்குகிறது.

சிறுவன் நரேனின் விளையாட்டுக் காலத்தில் தொடங்கும் நூல், கடவுளைத் தேடல், குருவிடம் சேர்தல், ஆன்மீக எழுச்சி, மேற்கு திசைப் பயணங்கள், அவரது அமெரிக்க உரை, ராமகிருஷ்ண மிஷன் உருவாக்கம் என்று பயணித்து, அவரது இறுதிக் காலத்தில் வந்து நிற்கும் 11 கட்டுரைகளைக் கொண்டுள்ளது.

மதம் என்பதைத் தாண்டி சமூகத்துக்காக நல்லவைகளை நினைத்து, அல்லவைகளை நீக்குவதை நிறைய இடங்களில் நினைவு கூர்கிறது இந்நூல். அது கல்வி, தத்துவம், இந்து மத சீரமைப்பு, பெண் முன்னெற்றம் என்று பல தளங்களில் நிகழ்கிறது.

விவேகானந்தர் மீதான பக்தி அல்லது சிஷ்ய நடையில் எழுதப்பட்டுள்ளது. இந்த நூல் யாருக்கானது? சிராருக்கானதா? உரைகளை விரிவாகத் தருவதால் பெரியவர்களுக்கானதா? எளிய தமிழில் அனைவரையும் சென்று சேரும் வகையில் உள்ள வாழ்க்கை வரலாற்று நூல்.

இதைப் படித்துவிட்டு, விவேகானந்தரை ஒரு இந்து துறவியாக மட்டும் நிலை நிறுத்த முயலும் கபட முயற்சிகளை புறம் தள்ளவேண்டும்.

அதே சமயத்தில் சமூக உய்வுக்கான விவேகானந்தரின் கருத்துக்களை நிறைவேற்றும் வகையில் அச் சமய அமைப்புக்களுக்கும், சமூகத்தினருக்கும் ஒரு பின்புலம் ஏற்படவில்லை. அவை கடுமையான நிதி நெருக்கடியில் கைவிடப்படுகின்றன, தாங்களாகவோ அல்லது பிறராலோ இடப் பெயர்ச்சிக்கு ஆளாகிவிட்டனர், சில மவுடீகத்தில் மூழ்கி இருக்கின்றன. பசியைப் போக்கி கல்விச் சேவையைத் தரும் சில அமைப்புக்களிடமிருந்து, விவேகானந்தரின் விருப்பங்கள் மீள்துவக்கப்படவேண்டும். அதற்கு சமூக ஆதரவு கிடைக்கவேண்டும்.

இன்னுமொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே!

பார்க்க –

வந்தார் விவேகானந்தர் – ரஞ்சனி நாராயணன்

Rajamelaiyur – புத்தக மதிப்புரை

குகன் – புத்தக மதிப்புரை

History Makers – Florence Nightingale – Sarah Ridley


Hi friends.

I’m Kannan. Im going to write about Florence Nightingale.

FLORENCE NIGHTINGALE
History makers

Author: Sarah Ridley
Publisher: Franklin Watts, London. 2009.
Subject: Non-fiction/Biography
Reserve @ NLB: Florence Nightingale– : and a new age of nursing / Sarah Ridley.

florencenightingale

This is an biography book about Florence Nightingale. She was a nurse. She born in 1820. She is 189 years elder than me. She got an employment at German hospital in London as a nurse .

Then British and France joined Turkey in a war against Russia. She traveled from London to Turkey to serve the soldiers wounded in the war. She served many soldiers and everyone thanked her. She was very sincere in her duty. Even when the doctors are slept, she will come with a small lamp in her hand to check the patients. British Times praised her as ‘The lady with the lamp’.

In a old age she continued to write books, letters and Reports. In 1874 Florence’s father died. In 1880 Florence’s mother died. In 1890 Florence’s sister died. In 1901 Queen Victoria died. Edward VII becomes the king. In 1910 Florence died.

I think she is a very good nurse.

Thank you.

ரிச்சர்ட் பிரான்ஸன் – என். சொக்கன்


விர்ஜின் ஏர்லைன்ஸ் நிறுவனரும் பல்தொழில் முனைவோருமான ரிச்சர்ட் பிரான்ஸன் பற்றிய  விறுவிறுப்பான கட்டுரைகளின் தொகுப்பு இந்த புத்தகம். திருச்சியில் பல்லவனில் எடுத்தால் செங்கல்பட்டு தாண்டும் முன் முடித்துவிடலாம். பக்கங்களின் எண்ணிக்கையும் அப்படி (200), உள்ளே உள்ள விருவிருப்பும் அப்படி.

ரிச்சர்ட் பிரான்ஸன் – என். சொக்கன்
சிக்ஸ்த் சென்ஸ், 2013
NLBயில் முன்பதிவு செய்ய – Riccarṭ pirān̲san̲ / En̲. Cokkan̲.
கன்னிமாரா முன்பதிவு செய்ய – காணோம்!
பிரிவு: புனைவல்லாதவை, வாழ்க்கை வரலாறு, மார்க்கெட்டிங்

image

உலகம் ஒரே மாதிரியான மனிதர்களால் ஆவதில்லை. படிக்காவதன் பெறும் புகழை படித்தவன் பெறுவதில்லை. சாதிப்பது என்பது மனிதர்களின் ஆளுமையைப் பொறுத்தது என்பதை பொட்டில் அடித்தது மாதிரி சொல்வதுதான் பிரான்ஸனின் வாழ்க்கையும், இந்த புத்தகமும்.

மிகச் சுவையாக சொல்லிச் சொல்கிறார் என் சொக்கன். அவரது எளிமையான மொழி நடை இந்த புத்தகத்திற்கு ஒரு பெரிய ப்ளஸ்.

இந்தப் புத்தகத்தை நினைத்தவுடன் எந்த கட்டுரை நினைவிற்கு வருகிறது என்று ஒரு கேள்வி கேட்டுப் பார்த்தேன். பிரிட்டிஷ் ஏர்வேஸ் வழக்குதான் நினைவிற்கு வருகிறது. ரத்தினச் சுருக்கமான சுவையான வழக்கு. வழக்கு போட்டு பணம் பார்க்கும் ஒரு ஊரில் அரசு எந்திர ஆதரவு பெற்ற பிரிட்டிஷ் ஏர்வேசுக்கு எதிராக வழக்கு போட்டு ஜெயிக்க காரணம் மட்டும் பொதாது. strategy என்பது எவ்வளவு முக்கியம்?

image

இன்னுமொரு சுவையான பதிவில் சந்திப்போம் நண்பர்களே!

வாழ்க பாரதம்

குஷ்வந்த் சிங் – வாழ்வெல்லாம் புன்னகை | என். சொக்கன்


குஷ்வந்த் சிங் யார்? ஏன் அவரைச் சுற்றி இத்தணை சர்ச்சைகள்? அவர் ஒரு ஹாஸ்ய எழுத்தாளரா? செக்ஸ் எழுத்தாளரா? மெய்யாலுமே அந்தாளு அப்படித்தானோ? அப்டி என்னதான் எழுதறாருன்னு அவர் புத்தகம் இந்தப் போடு போடுது..?

இந்த வினாக்களுக்கெல்லாம் பதில் சொல்வது மாதிரி தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்திருக்கும் curtain raiser இந்த நூல்.

குஷ்வந்த் சிங் இறந்ததற்கு இரங்கல் பதிவு போட்டிருந்தார் மதிப்பிற்குரிய பதிவர் ரஞ்சனி நாராயணன் அவர்கள் தன் பதிலுரைகளில் குஷ்வந்த் சிங்கின் Train to Pakistan நூலைப் பரிந்துரைத்திருந்தார். இந்த நூலை கிழக்கு பதிப்பகத்தார் தமிழில் வெளியிட்டிருந்தனர். நூலகத்தில் கிடைக்கிறதா என்று அலசிய போது, ம்ஹூம். ஆனால் இந்த நூல் சிக்கியது.

குஷ்வந்த் சிங் – வாழ்வெல்லாம் புன்னகை
ஆசிரியர் – என் சொக்கன்
பதிப்பு – கிழக்கு பதிப்பகம்
கன்னிமாரா – http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=339067
NLB – http://eservice.nlb.gov.sg/item_holding_s.aspx?bid=12758068

khushwant singh
குஷ்வந்த் சிங் – வாழ்வெல்லாம் புன்னகை

சிறிய நூல் என்றாலும், குஷ்வந்த் சிங் பற்றிய விரிவான பார்வையை இந்த புத்தகம் முன் வைக்கிறது. எழுத்துப் பணி, பத்திரிகை ஆசிரியர் பணி, அரசியல் பிரவேசம், நல்லது கெட்டதுகள் இன்னவற்றுடன் அவரது புகழ் பெற்ற படைப்புகள் ஒவ்வொன்றைப் பற்றியும் சுருக்கமான விமர்சனம் என்று சொல்ல மாட்டேன், ஒரு அறிமுகத்தைத் தருகிறது.

எல்லாம் கலந்து 15 கட்டுரைகள் உள்ளன.

எழுத வேண்டும் என்கிற விருப்பம் உள்ளவர்களும் வாசிக்க வேண்டிய நூல்.  குஷ்வந்த் சிங் தரும் டிப்ஸ் உள்ளே இருக்கிறது.

khushwant singh

ஜெய்ஹிந்த்
Posted from WordPress for Android