சுதந்திர தினம் 2020


அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள். வெள்ளையனை வீறு கொண்டு எழுந்த நம் சமூகம், பொதுவெளியில் கொடியினை ஏற்றியது. அதே சமூகம் சீன தீநுண்மியைச் சமாளிக்க இயலாது ஒடுங்கிக் கொண்டுள்ளது. இன்று facebook நேரலையில் கொடியேற்று விழாவினை வீட்டிலிருந்தே கண்டுகளிக்க வேண்டியதாயிற்று.

Picture (c) Facebook live of Indian Hi-comm, Singapore

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள். எதிர் வரும் நாட்கள் நம் நாட்டிற்கு தீநுண்மியை எதிர்த்துப் போராடும் வலிமையையும், சீன-பாக் தொல்லையைத் தகர்த்தெரியும் வழியினையும், நேர்படப் பேசும் அரசினை நாம் காணும் நன்நாளையும் தரட்டும்!

வாழ்க வளர்க பாரதம். ஜெய் ஹிந்த். வந்தே மாதரம்!

கோனி தீவு


நான்கு நாள் தொடர் விடுப்பு வருவதென்பது, காவிரியில் நீர் வருவது போன்று அரிது. அதிலும் இரண்டு நாட்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தால், நானே குடும்பத்திற்கு ஒரு சுமையாகிப் போய்விடுகிறேன். சிங்கை தேசீய நாள் மற்றும் பக்ரீத் விடுமுறையின் மூன்றாவது நாளை இழக்க விரும்பாமல், மக்களை எங்காவது அழைத்துக்கொண்டு போனால் என்ன என்று தோன்றியது.

உடன் பணிபுரிபுரியும் நண்பர் நெடு நாட்கள் முன்னரே கூறியிருந்தார். மனதில் ஓடிக்கொண்டிருந்தது. செல்லத்தான் நேரம் கூடிவிரவில்லை. இதை விட வேறு நன்னேரம் வருமா என்ன?

DSC01200

புங்கோல் செட்டில்மெண்ட் வரை மகிழுந்தில் சென்று விட்டு அங்கிருந்து மூன்று வாடகை சைக்கிள்களை அமர்த்திக்கொண்டு தீவினை ஒரு வலம் வர மூன்று மணி நேரம் பிடித்தது.  இன்றும் சற்று நேரம் இருந்துவிட்டு வர விருப்பத்தான். சைக்கிள் வாடகை நச்சு போன்றல்லவா ஏறிக்கொண்டிருக்கிறது!

உலகப்போர் நினைவுச் சின்னம் அருகில் உள்ளது. அங்கிருந்து ஒரு அரை கிலோமீட்டர்  சைக்கிளில் அழுத்தினால் தீவின் மேற்கு வாயில் வந்துவிடுகிறது.

நிறைய பட்டாம்பூச்சிகள் அலைவதாக சொல்கின்றனர். நாங்கள் பேருக்கு ஒன்றிரண்டைக் காண முடிந்தது. அதிலென்றுதான் மேலே உள்ளது. ‘படமா புடிக்கிற. இருடி..’ என்று போக்குக் காட்டியது. இது கடந்த ஐந்தாண்டுகளில் பெரிய வரட்சிக் காலம் என்று சொல்கிறார்கள். செடிகள் அனைத்தும் வதங்கிக் கிடக்கின்றன. சவுக்குத் தூசிகளும் வெப்பமும் காட்டுத் தீயினை அல்லவா கொண்டு வரும்.

DSC01203DSC01204DSC01205DSC01215

குளத்தாங்கரை போன்ற கடற்கரைப் பகுதி. பார்க்க அழகாக இருக்கிறது. மக்கள் அதிகம் வருவதில்லை என்பதால் மணல் பகுதி தீண்டப்படாமல் கிடக்கிறது. காலணியை கழற்றிவிட்டு நடை பயில ஏதும் தடை இல்லை!

வீடுகள் ஏதுமில்லா இந்தத் தீவினை இயற்கைக்கென்றே விட்டு வைத்துள்ள காலம் நீடிக்கும் என்று நம்புவோம்.

ஆனால் மணல் ஈ தொந்தரவு உள்ளதாகச் சொல்கிறார்கள். எனவே முழுக்கால் பேண்ட் அணிந்து செல்வது உத்தமம்.

தீவு முழுக்க தண்ணீரோ, மின்சாரமோ கிடையாது. எனவே தக்க ஏற்பாடுகளுடன் செல்லவேண்டும். அனைத்தையும் கட்டியே எடுத்துச் சென்றுவிட்டோம். கடற்கரையில் மதிய உணவை உண்டுவிட்டு, குப்பையை பையோடு எடுத்துவந்து தீவிற்கு வெளியில் போட்டுவிட்டார் சிந்து.

இத்தீவிலிருந்து ஜுரோங் ஏரியை இணைக்கும் 36 கிலோமீட்டர் சைக்கிள் பாதையில் பயணம் செய்ய ஆசை. ஆனால் கண்டிப்பாக வாடகை சைக்கிளில் அல்ல!!

கடுமையான வெயில். நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக அருந்திக்கொண்டு, சைக்கிளை மிதித்துக்கொண்டு வந்து சேர்ந்தோம். தாக்கம் கொஞ்சமாவது குறைய மழை வேண்டும். பெய் என்று சொல்லவோர் ஆளில்லை.

DSC01222

எப்படிப் போவது?

வழித்தடத்தில் நிறைய கட்டுமான வேலைகள் நடைபெறுகின்றன. எனவே நிறைய சாலைகள் மூடப்பட்டுள்ளன. எனவே மகிழுந்தில் செல்வது இப்போதைக்கு உத்தமம். திரும்பி வரும்பது புங்கோல் பாயிண்ட் இருந்து புங்கோலுக்கு பேருந்து உள்ளது.

கவனிக்க:

  • நீர் கொண்டு செல்க. பைப் தண்ணீர் எங்கும் இல்லை.
  • உணவு கொண்டு செல்க. குப்பையை எடுத்து வந்துவிடுங்கள்
  • உச்சி வெயிலுக்கு தொப்பி உகந்தது.
  • முழுக்கால் பேண்ட் (உடற்பயிற்சி ஆடை) உகந்தது

New Marine Cove – A Picnic


Good morning friends.

I am Kannan.

Happy Lunar New Year. This is the year of the Rooster. Lot of activities are going on to celebrate the Chinese New Year. I took part in this celebration.

There were slides, shooting guns and Shaking ship.
There were slides, shooting guns and Shaking ship.

My daddy's company gave us CNY cover with dollars
My daddy’s company gave us CNY cover with dollars

When we were walking, we enjoyed this Pongal lightings
When we were walking, we enjoyed this Pongal lightings

I am going to write about New Marine cove. We went to an excursion from our school on 20th January.

We enjoyed our Excursion. My partner is Mahish Raj.

All my classmates were happy to see different play items.

They were
1. slides
2. swings
3. games
4. bridge
5. trucking
6. ship and a medium size canteen.

I’m going draw what I played in my Excursion.

New Marine Cove, ECP, Singapore
New Marine Cove, ECP, Singapore

New Marine Cove, ECP, Singapore
New Marine Cove, ECP, Singapore

Underground slide and long rope bridge. Photo: Straits Times
Underground slide and long rope bridge. Photo: Straits Times

new-marine-cove-4
Rotating chairs in Childrens’ play ground

I had a good time in my excursion. I am interested to go there once again.

Happy Chinese New Year

Thank you.

கலா உத்சவம் – இந்திய இசை விழா [ஒலிப்பதிவு]


கலா உத்சவம் என்று இந்திய இசை விழாக்கள் ஒரு வாரமாக நடந்து வருகின்றன. நேற்று மாதி பானி இந்துஸ்தானி இசைக்குழுவின் கலப்பு இசை (fusion 🙂 ) நிகழ்வு எஸ்பிளனேட் கடலோர கலையரங்கில் நடந்தது. நல்லா இருக்கு என்றால் எதனால் நல்லா இருந்தது என்றோ, நல்லாவே இல்லை என்றால் எதனால் நல்லா இல்லை என்று சொல்லும் மதி இல்லாத காரணத்தால் அடங்களும் ஒலிப் பதிவும் மட்டும் இங்கே!

நிகழ்வு – 1 – இந்துஸ்தானி

நிகழ்வு – 2 – இந்துஸ்தானி கலப்பு

சமூக வலையில் இருந்து மேலும் சில….

ராஜேந்திர சோழன் 1000 – குடவாயில் பாலசுப்ரமணியன், பாலகுமாரன், தனவேல் ஒலி-ஒளிப்பதிவு


ராஜேந்திரசோழன் முடிசூடி 1000 ஆண்டுகள் நிறைவுற்றதை ஒட்டி கங்கை கொண்ட சோழபுரத்தில் விழா நடத்தினர். அந்த விழாவை ராஜேந்திரன் வென்ற நாடுகளிலெல்லாம் நடத்தவேண்டும் என்கிற விருப்பத்தில், சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ் மையத்தில் இன்று இந்த விழா நடந்தது.

எதேச்சையாக ஓவியர் மாருதி இன்றைக்கு சோழனின் கடற்படை ஓவியத்தை facebookல் பகிர்ந்திருந்தார். பழம் நழுவிப் பாலில் விழுந்து, அது நழுவி வாயில் விழுந்து….

தமிழகத்தில் இருந்து மூவர் வந்திருந்தனர்.

முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள் – இன்றைய விழாவில் ராஜேந்திர சோழனுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெற்றவர் என்று நான் உறுதியாகக் கூற இயலும். அவருடைய ஒளிப்பதிவு கீழே. ஒரு சிலையைப் பற்றியே அவரால் அரை மணிநேரம் பேச முடியும். அவரைப்போய் ஒட்டு மொத்த கங்கைகொண்ட சோழபுரத்தை அரைமணியில் சொல்லச்சொன்னால் எப்படி. கட கடவென ஓடியிருப்பார்.

நிறைவாக எழுத்தாளர் பாலகுமாரன் (பெரும்பாலும் தன்னுடைய உடையார் நாவல் பற்றியே பேசினார்). ஒலிப்பதிவு கீழே.

 

திரு தனவேல் ஐஏஎஸ் – ஒலிப்பதிவு கீழே. நன்றாகவே பேசினார்