சீனா – விலகும் திரை – III


சீனா – விலகும் திரை
ஆசிரியர்பல்லவி அய்யர்
தமிழில்ராமன் ராஜா
பரிந்துரைத்தவர்தமிழ் பயணி
பதிப்புகிழக்கு பதிப்பகம், 2009
பிரிவு – அரசியல்
ISBN 978-81-8493-164-8

china01

china02

china03

☻☻☻☻☻☻உயர் அழுத்த மொக்கைப் பதிவு – எச்சரிக்கை☻☻☻☻☻☻

பாகம் 1

பாகம் 2

இவை தவிற பின்வரும் பகுதிகள் புத்தகத்தில் சுவாரசியத்துடன் தொகுக்கப்பட்டுள்ளன

 • சார்ஸ் நோயின் தாக்கம் – அதை சீனா வழவழா கொழகொழாவென கையாண்ட முறை – அப்பவும் மீசையில மண் ஒட்டலை என்று பத்திரிகளின் துணையுடன் பீற்றிக் கொண்டமுறை
 • பிரதமர் வாஜ்பேயியின் பெய்ஜிங் வருகை
 • ஆட்சி மொழி
 • ஜாதி உட்பிரிவுகள்
 • ஹுடாங் புராதண வீடுகள் மற்றும் அவற்றின் அழிவுகள்
 • மாவோவின் சமூக மாற்றம் என்ற போர்வையில் நடந்த அரசு முத்திரை பதிக்கப்பட்ட குரூரங்கள்
 • இந்திய அரசாங்க மற்றும் தொழில்முனைவோர்களின் பிரதிநிதிகளின் வருகை
 • சர்வாதிகாரத்தைச் சிபாரிசு செய்யும் மும்பை மொத்த கொள்முதல் கடைகாரர்
 • 1980 வரை விற்பனை செய்வது குற்றம் என்ற மாவோவின் குதர்க்கம் – பிறகு விற்பனையை பிரதானமா வைத்து வளர்ந்த நவீன சீனம்.
 • சைபீரிய குளிர் சீனாமீது செய்யும் தாக்கம்
 • யிவு நகரின் மொத்த விற்பனைக் கடைகள்
 • மாற்றங்கள் கொண்டுவரும்ட அரசாங்க அறிவிப்புகள் அறிவிக்கப்படும் மற்றும் அமல்படுத்தப்படும் முறைகள்
 • இந்தியா- சீனா இடையே ரயில் மற்றும் சாலைப்போக்குவரத்து வளர்ச்சி ஒப்பீடு
 • காற்று மாசுபாடு
 • சீன கிராமங்களைப் பற்றிய காட்சிகள்
 • சீன பங்குச் சந்தைகள்
 • சீன அரசாங்கமும் ஆன்மீகமும்! மீள் மதிப்புப் பெற்ற கன்பூசியஸ்
 • கம்யூனிசப் போர்வையில் செழித்து வளர்ந்த முதலாளித்துவம் – இந்த விந்தை ஏற்படுத்திய ஏற்றத்தாழ்வுகள் – முற்றிய ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுத்திய சமூக சகிப்பிண்மை – சகிப்பிண்மை தந்த கலவரங்கள், போராட்டங்கள்
 • போலி மருந்து – கலப்பட உணவு – போலி டாக்டர்கள் – மலை போல் ஊழல்கள்
 • புத்த மட விசிட்
 • போதிதர்மா பற்றிய குறிப்புகள்
 • சீன முஸ்லிம்கள் – ஆண்-பெண் சமத்துவம். வேறு எந்த இடத்திலும் பெண் விடுதலை பற்றிப்பேசவில்லை. பேச வேண்டிய அவசியமும் இல்லை சீனாவில். ஆனால் உலகலாவிய இஸ்லாம் சமூகத்தைப் பற்றிப்பேசும்போதும் இந்திய சமூகத்தைப் பற்றிப்பேசும்போதும் கூடவே விவாதிக்கப்படவேண்டிய விசியமாகிறது
 • ஷாங்ரிலா (திபேத்திய கவுண்டி) விசிட் – திபெத்தியரிகளின் இந்திய வசீகரம் – பொம்மை மடாதிபதிகள்
 • டி 21 லாசா எக்ஸ்பிரஸ்- பெய்ஜிங்கிலிருந்து லாசா விற்கு நேரடி ரயில் பயணம்  – சிக்கல் மிகுந்த பாதையில் புதிதாகப்போடப்பட்ட ரயில் பாதையில் (4000 கிலோமீட்டர்)
 • இந்திய – சீன வேறுபாடுகள்
 • கினி எண்

சீன நிர்வாக அமைப்பு

“மக்களுக்கு ஓட்டுரிமை கிடையாது. அதற்குப் பதிலாக சட்டப்பூர்வமாக பல உரிமைகள் தரப்பட்டன. சில குறிப்பிட்ட பிரச்சினைகளுக்காக அரசாங்க அமைப்புகள் மீது பொது மக்கள் வழக்கு தொடரலாம். தனி மனிதர்களுக்கு சொத்துரிமை, மத சுதந்திரம் போன்ற உரிமைகள் தரப்பட்டன.

சட்டம் என்பது குடிகளைக் கட்டுப்படுத்த ஏற்பட்டது. அதே சமயம் அது அரசாங்கத்தின் சக்திகளுக்கு ஒரு செக் வைக்கவும் பயன்படும். தனி மனிதனின் உரிமைகளை சட்டத்தால் பாதுகாக்க முடியும். இதுதான் சீனத் தலைமை வளர்க்க விரும்பிய நிர்வாக மாதிரி.”

புத்தகம் தோற்றுவித்த யோசனைகள்

எந்த வாழ்க்கை முறை சிறந்தது? சீனாவா இந்தியாவா என்கிற கேள்விக்குத்தான் பின்வரும் கேள்விகளிக்கான பதில்தான் 350 பக்கங்களில் இந்தப் புத்தகம் சொல்கிறது. பிற பயணக்கட்டுரைகள் மற்றும் அனுபவக் கட்டுரைகள் அந்த தேசத்தை நமக்கு அறிமுகப்படுத்த உதவும்.

முற்சொன்ன கேள்விக்கான பதில் பெரும்பாலும் முரண்பாட்டு மூட்டைகளாகத்தான் இருக்கும். பொருளாதாரப் போட்டிக்குத் தோள் கொடுத்தால் மனித உரிமை லாரி அடியில் வைக்கப்பட்ட எலுமிச்சம்பழம் ஆகிவிடும். மனித உரிமையைத் தலைமேல் தூக்கி வைத்து ஆடினால் பொருளாதார சொக்கட்டான் ஆட்டத்தில் ஜெயிப்பது எப்படி? – இந்த இரண்டு கேள்விகளுக்கும் இந்தியாவும் சீனாவும் அவரவர் விருப்பப்படியான பதில்களைத் தேர்ந்தெடுத்துள்ளன என்றுதான் நாம் முடிவுக்கு வரவேண்டி இருக்கிறது.

சீனா செய்தது சாதாரண சாதனை அல்ல. தோற்றுப்போன விவசாய தேசம் இன்று உலகப்பொருளாதாரப் புலியாக ஆகியிருப்பது என்பது தேர்ந்தெடுத்த பொருளாதார ஆட்டக்காரர்களின் விந்தை. உலகமே வியக்கும் ஒரு சீன மாந்திரீகம் அது. திறமை அடக்குமுறை சித்தாந்தத்திற்கும் நிதர்சனத்திற்குமான சமநிலை மேம்பாடுகள் மனித உரிமை மீறல், நசுக்கல், பிழிதல் தொடர்ச்சியான மாறுதல்கள் என்று இன்னும் எத்தணையோ அரும்புகள் தொடுத்த மாலை சீனாவின் இன்றைய வளர்ச்சி.

சீனா செய்தது எல்லாம் இந்தியாவில் செய்ய இயலுமா என்பதே நினைத்துப் பார்க்க முடியாமல் இருக்கிறது. நமது பொருளாதார வழி என்பது அவர்களை விட மாறுபட்டது. இது எல்லாம் பொருளாதாரப் புலிகள் விளக்கவேண்டிய விசியங்கள். வெற்றி பெற அவர்கள் பயன்படுத்திய மாந்திரீகம் நம்ப ஊரில் வேலை செய்யுமா? அல்லது ரத்தம் கக்கச் செய்திடுமா?

வேலை செய்யாது என்று ஒரே அடியாக மறுக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அந்த வேகத்தில் வேலை செய்யாது என்று சொன்னால் சரியாக இருக்கலாம். நம்மூர் சமூக அரசியல் வலைப்பின்னல் அதுமாதிரி.

உதாரணத்திற்கு சில விசியங்களை எடுத்துக்கொள்ளலாம்

சிங்கூர் பிரச்சினை (நில ஆர்ஜிதம்)

கவுரவமான மேற்கு வங்கம் இடது சாரிகளின் ஆட்சிக்கு சாவு மணி அடித்துவிட்டது. ஆனால் அந்த சாம்ராஜ்ஜியம் முடிவுக்கு வர எத்தணித்தபோது அந்த மாநிலத்தின் பொருளாதார நிலையில் என்பது ஒட்டு மொத்த அழுகிய வாடை அடித்தது. அந்த சமயத்தில் முதலாளித்துவ வேடம் பூண்ட புத்ததேவ் கம்யூனிச மாநில அரசு டாட்டா நேனோவை நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலாவாகக் கருதியது. அதில் தவறேதும் இல்லை என்று நான் நினைக்கிறேன். 1000 கோடிக்கான முதலீடு ஏறத்தாழ 70 தொழில் முணையும் தொழிலகங்கள் என்றால் அந்த நிலையில் உள்ள மாநிலத்தின் எந்த முதல்வரும் சிவப்புக்கம்பளம் தந்து வரவேற்கத் தயாராகவே இருப்பார். அதுதான் நடந்தது.

singur_police_20080428(கா) அவுட்லுக்

நில ஆர்ஜிதத்தில் பிரச்சினை விவசாய நிலங்கள் இருந்தது வேதனை வெறும் வாய்க்கு அவல் தேடிக்கொண்டிருந்த மமதா அதை பாதுசாவாக நினைத்துக் கையாண்ட சோதனை இஷ்டத்துக்குப் பரவிய வதந்தி, போராட்டம் அதனைக் கட்டுப்படுத்த துப்பாக்கி தூக்கிய சாதனை. துப்பாக்கி ஏந்திய அரசாங்கத்தையும் மேதா பத்கர் அருந்ததி ராய் போன்றோரையும் பார்த்தவுடனேயே ஒரு லட்சம் கார் கனவு காற்றுப்பிடுங்கப்பட்ட பலூனாய் ஆனது. நான் போறேன் என்றார் ரத்தன் டாடா. சுஸ்வாதகம் என்று குறுஞ்செய்தி அனுப்பினார் மோடி. (மோடி வாயால் இதைக் கேட்க இந்தப் பதிவைப் பார்க்கவும்)

பாபர் மசூதி இடிப்பு (மத இனவாதப் பிரச்சினைகள்)

இந்த ஒரு நிகழ்வு ஒட்டு மொத்தமாக இந்திய அரசியலுக்குப் பயன்படுகிறது (இரு தரப்பிலும்). பல சமயங்களில் குண்டு வெடிக்கிறது உயிர்போகிறது. சமயத்தில் காவி தீவிரவாதம் இருந்தா இஸ்லாமிய தீவிரவாதம் இருக்கும் என்கிற தர்க்கவாதத்திற்கும் பயன்படுகிறது. வெகுஜன சமநிலையைப் பாதிக்கும் இந்த ஒரு பிரச்சினையை அரசியல் இலாபங்களுக்காக மத உணர்வு என்கிற ரீதியில் நியாயப்படுத்தப் படுகிறது

எங்கே சுணக்கம்?

மேலும் ஸ்ரீபெரும்புதூர் புதிய சென்னை ஏர்போர்ட் முனையம் கைவிடல் கெயில் நிறுவனம் கேரளத்திற்கான ஆயில் குழாயை தமிழகத்தில் பதித்தல் நோக்கியா தொழிற்சாலைக்கு இடம் ஒதுக்கியதில் போராட்டங்கள் என்று மிகப்பெரிய முதலீட்டுக்கான அச்சாரம் போட்டாலே கூடவே சர்ச்சைகள் எழுவது நம்மூரில் அதிசயம்.

Nokia-India-Chennai
(கா) http://wmpoweruser.com

சீனாவைப்போல வெற்றிபெறவில்லை என்று குறைப்பட்டுக் கொள்வதும் நம்மூர்தான். கிழக்கிந்தியாவில் வளங்கள் சுரண்டப்படுவதைத் தடுக்கிறேன் பேர்வழி என்று நக்ஸலைட்டுகளை நியாயப்படுத்துவதும் நம்மூர்தான்.

ஆக நம்மூர் சமூக அவியலும் சீன அவியலுக்கு எந்த வகையிலும் குறைந்ததில்லை. ஆனால் மேலே சொன்ன எடுத்துக்காட்டுகள் எந்த வகையிலும் இந்தியா மாற்றங்களைப் பொறுக்காது என்று சொல்வதற்கல்ல. மாற்றங்களை ஏற்பதில் சற்று கால தாமதம் இருக்கும் என்பதே. பெரிய சக்தியாக வெடிப்பது யார் என்கிற கேள்விக்குள் நாம் செல்லவேண்டாம். ஆரோக்கியமான சக்தியாக இருக்கவேண்டும் என்பதே ஆரோக்கியமான கேள்வியாக இருக்கவேண்டும்.

இந்திய செண்டிமெண்டுகள்

மக்களை ஓரிடத்திலிருந்து விரட்டுவது என்பது நம்மூரில் அவ்வளவாக நடக்காத கதை (“unofficial குடிசை மாற்று வாரியம்இதில் கணக்கு வராது!). தவிற கல்லிலே கூட செண்டிமெண்ட் உண்டு நமக்கு. நாஸ்திகராக இருக்கிற இந்தியர் எவரும் மகாபலிபுரத்தையோ காஞ்சிபுரத்தையோ சமூக மன மயக்கமாகப் பார்ப்பதில்லை. ஒரு சாலை விரிவாக்கத்திற்கென நில ஆர்ஜிதத்துக்கே பலமுறை யோசிக்கிறது இந்திய அரசு. ஆளைத்துரத்துவது நியாயமில்லை என்கின்றன மீடியாக்கள். எதுவும் பெரும்பான்மை மக்களை ஒத்துக்கொள்ள வைத்த பின்னரே நடைமுறைப் படுத்தப்படுகின்றன.

வருமையின் நிறம் சிகப்புபடம் வந்த போதும் (அதாவது வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியபோதும்) சரி தற்கால நாகரீகத்தை வெளிப்படுத்தும் ஜீவா படங்கள் பெருகிய போதும் காஞ்சிபுரத்தை காஞ்சிபுரமாகவே பார்த்தார்கள். இந்த மண்ணாங்கட்டிக் கோயிலை இடித்துவிட்டு மாடமாளிகை கட்டுவது என்பது இங்கே மனதிற்கு ஒவ்வாத ஒன்று. டிராபிக்கில் பிதுங்குகிறது சென்னை. ஊருக்கு நடுவுல கபாலி கோயிலும் பார்த்தசாரதி கோயிலும் அவசியமா. இதுல தெப்பக்குளமும் தேர் நிறுத்த லாயமும் அவசியமா. தரைமட்டமாக்கி்ட்டு ஒரு தேசீய நெடுஞ்சாலையைப்போடுவோம் என்று இதுவரை யாரும் சொல்லவில்லை.

One thought on “சீனா – விலகும் திரை – III

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s