விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி


ஆங்கிலப் புத்தாண்டு சிறப்புப் பதிவு

சமீபத்தில் நான் ஊருக்குக் கிளம்பிக்கொண்டிருந்தபோது சோப்புகளை அங்கேயே வாங்குவதாக ஏற்பாடு. அப்போது அண்ணன் காதியில் விற்கப்படும் சோப்புகளைப் பற்றிச் சொல்லி அவர் வைத்திருந்த ஒரு சோப்பையும் காட்டினார்.

பல சோலிகளால் அங்கே வாங்க முடியாமல் போயிற்று. இருந்தாலும் கிளம்பும் முன்னர் சென்னை தி.நகரில் உள்ள காதி வஸ்திராலயம் சென்று வாங்கி வந்தேன். ஐயப்ப சீசன் என்பதால் கதர் கலர் வேட்டி துண்டுகள் விற்பனை சக்கை போடு போட்டுக்கொண்டிருந்தது. அரைடசன் சோப்புகளை அள்ளி வந்தேன்.

IMAG0415

2014ல் இதைத்தான் வாங்கவேண்டும் என்று சொல்ல முடியாது. ஆனால் ஒரு முறை வாங்கிப் பார்ப்பதில் தவறில்லை.

gandhimadhi

என்னப்பெத்த ராசா! எங்க அப்பூ… நானே சிகப்பாயிட்டேனே!

6 thoughts on “விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி

  1. காதியில் விற்கப்படும் சோப்புகள் , ஷாம்பூகள் ,ஊதுபத்திகள் , பனை வெல்லம் போன்றவை தீங்குவிளைவிக்காதவை என்பதாலும் , நம் நாட்டின் முதுகெலும்பான கிராமங்களுக்கு பலன் கிடைக்கும் என்பதாலும் எப்போதும் வாங்குவதுண்டு..!

    • உண்மை உண்மை.
      தாங்கள் காதி பொருட்களைப் பயன்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சி. என்னென்ன பொருட்கள் அவ்விடம் பயனுள்ளவை என்று ஒரு பதிவிடுங்களேன், நேரமிருக்கும்போது.

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Leave a reply to ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் Cancel reply