அவரது உள்ளம் அங்கில்லை என்பதை உணர்ந்த ஏவலன் “நீர் எடுத்து வைத்திருக்கிறேன்” என்றான். “ஆம்” என்றபடி அவர் எழுந்தார். “விஸ்வசேனனிடம் எனக்கான புதிய மரவுரியை எடுத்து வைக்கச் சொல்” என்றபடி நீர்க்கொப்பரையை நோக்கி சென்றார். ஏவலன் மறுமொழி சொல்லாமையை உணர்ந்து திரும்பி நோக்கிய கணம் அவருக்கு நிகழ்ந்தவை புரிந்து இரு கைகளும் தொடை நோக்கி விழ, தாடை தொய்ந்து வாய் திறக்க அசைவிழந்து நின்றார். ஏவலன் தலைகுனிந்தான். “ஆம்” என்று சொன்னபடி அவர் திரும்பி குடுவையிலிருந்த நீரை நோக்கி சென்றார்.
பீஷ்மரின் முதன்மை மாணவர், பாரப்போரில் பீஷ்மருக்குத் தேரைச் செலுத்திய விஸ்வசேனர் குருக்ஷேத்ர சமர் வெளியில் களம் பட்டார். சத்யவதி காலத்திலிருந்தே பீஷ்மரின் உடன் இருந்தவர். அஸ்தினபுரி தலைவலிகள் பீஷ்மரைச் சந்திக்க வரும்போதெல்லாம், அவர்களுக்கம் பீஷ்மருக்கும் தகவல் தொடர்புப் பாலமாக இருந்தவர். பீஷ்மரின் நம்பிக்கைக்கு உரியவர். பீஷ்மரிடமிருந்து உடல் மொழிகளைப் பெற்று அவரை போலவே ஆனவர்.
அஷ்தினபுரியின் கொடிவழிகளுக்கும் தன் கனிவிற்கும் எந்த தொடர்புமில்லை என்று உதறிப் பேசுபவர் இந்த வெண்முரசின் வீரக் கிழவர் பீஷ்மர். அவரைத் தடுமாறச் செய்தது விஸ்வசேனரின் மரணம். போர்களத்தில் அந்தக் கலக்கமே பீமனை அவரது தாக்குதலிலிருந்து தப்பவிட்டுருக்கிறது. தன்னைப் பற்றிய ஒரு புது அறிதல் என துரியோதனனிடம் சொல்கிறார் பீஷ்மர். உடன் இருந்தீர். பீஷ்மருக்குள் இருந்த பிதாமகர் துரியோதனனுக்கோ, யுதிஷ்டிரனுக்கோ குருதி வழியில் உறவானர். உமக்கே உளம் கணிந்து பிதாவானவர். தங்கள் வரவால் கிழவர் வாடுகிறார். உங்கள் சேவையின் நிறைவெனக் கொள்க விஸ்வசேனரே. விடை பெறுங்கள். அமைதி பெறுங்கள்.
😥
🏹😢