உத்தரன் – அஞ்சலி குறிப்பு


குருக்‌ஷேத்திரப் போரின் முதல் நாளில் விராட இளவரசர் உத்தரர் வீர மரணம் அடைந்தார்.

மத்ஸ்ய விராட இளவரசனான இவர் கீசகனால் கைப்பாவை என வளர்க்கப்பட்டார். வீரம் குன்றி பிறராலும் ஏளனமாகப் பார்க்கப்பட்டார். அஞ்ஞாத வாசத்தில் கீசக வதத்திற்குப் பிறகு இவரது வாழ்வு அர்த்தமுள்ளதாகியது. விராட புரிக்கு ‘செயல் மன்னரா’க (நன்றி திமுக) திறம்பட செயல்பட்டு வந்தார்.

அர்ஜூனனே தேரோட்ட கர்ண துரியோதனர்களை விராடபுரிக் களத்தில் வென்று விழுப்புண் பெற்றவர். தன் படை ஆதரவை பாண்டவர்களுக்கு அளித்து முதல் நாள் படை முகம் நின்ற பெருமைக்குரியவர். விராட புதல்வர்களான உத்தரர், ஸ்வேதன், சங்கன் ஆகியோரால் துக்கப்பட்டது இந்தப் போர்.

கொலை தெய்வமாகத்திகழ்ந்த பீஷ்மரை எதிர்த்து நின்றவர். வேல் கம்புகளால் மாவீரர் சல்யரை மிரட்டியவர் இறுதியில் சல்யரின் வாள் வீச்சில் பலியானார். இளவயதில் பட்டறிவுக்கு மீறிய போர் செயல் புரிந்த உத்தரரை நினைவு கூர்கிறது கடைசி பெஞ்ச்.

பாண்டவர்களுக்கெதிரான போரில் இளவரசன் உத்தரனுக்கு தேரோட்டியாக பிருஹன்னளை.
பாண்டவர்களுக்கெதிரான போரில் இளவரசன் உத்தரனுக்கு தேரோட்டியாக பிருஹன்னளை.

Leave a comment