விவேகானந்தர் | ரஞ்சனி நாராயணன்


பசித்தவனுக்கு மதம் தேவையில்லை; அவனது தேவை பசித்தபோது உணவு. அந்த உணவை பெற, அவர்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க, கல்வியைக் கொடுங்கள். அந்தக் கல்வி ஏட்டுச்சுரைக்காயாய் இல்லாமல் மதத்திலிருந்து அவனை விலகாமல், அவனை உருவாக்கும் கல்வியாக இருக்கட்டும்

விவேகானந்தர் – இந்திய மறுமலர்ச்சி நாயகன்
ஆசிரியர் – ரஞ்சனி நாராயணன்
பதிப்பு – கிழக்கு பதிப்பகம்
அமேசான் – Vivekanandar: Indhiya Marumalarchi Nayagan (Tamil) Kindle Edition

விவேகானந்தரைப் பற்றி, எளிய தமிழில் அறிமுகப் படுத்தும் நூல் இது. விவேகானந்தரின் அமெரிக்க உரைகளின் தொகுப்பை தமிழாக்கிக் கொடுத்துள்ள விதம் இந்நூலைச் சுவையுள்ளதாக்குகிறது.

சிறுவன் நரேனின் விளையாட்டுக் காலத்தில் தொடங்கும் நூல், கடவுளைத் தேடல், குருவிடம் சேர்தல், ஆன்மீக எழுச்சி, மேற்கு திசைப் பயணங்கள், அவரது அமெரிக்க உரை, ராமகிருஷ்ண மிஷன் உருவாக்கம் என்று பயணித்து, அவரது இறுதிக் காலத்தில் வந்து நிற்கும் 11 கட்டுரைகளைக் கொண்டுள்ளது.

மதம் என்பதைத் தாண்டி சமூகத்துக்காக நல்லவைகளை நினைத்து, அல்லவைகளை நீக்குவதை நிறைய இடங்களில் நினைவு கூர்கிறது இந்நூல். அது கல்வி, தத்துவம், இந்து மத சீரமைப்பு, பெண் முன்னெற்றம் என்று பல தளங்களில் நிகழ்கிறது.

விவேகானந்தர் மீதான பக்தி அல்லது சிஷ்ய நடையில் எழுதப்பட்டுள்ளது. இந்த நூல் யாருக்கானது? சிராருக்கானதா? உரைகளை விரிவாகத் தருவதால் பெரியவர்களுக்கானதா? எளிய தமிழில் அனைவரையும் சென்று சேரும் வகையில் உள்ள வாழ்க்கை வரலாற்று நூல்.

இதைப் படித்துவிட்டு, விவேகானந்தரை ஒரு இந்து துறவியாக மட்டும் நிலை நிறுத்த முயலும் கபட முயற்சிகளை புறம் தள்ளவேண்டும்.

அதே சமயத்தில் சமூக உய்வுக்கான விவேகானந்தரின் கருத்துக்களை நிறைவேற்றும் வகையில் அச் சமய அமைப்புக்களுக்கும், சமூகத்தினருக்கும் ஒரு பின்புலம் ஏற்படவில்லை. அவை கடுமையான நிதி நெருக்கடியில் கைவிடப்படுகின்றன, தாங்களாகவோ அல்லது பிறராலோ இடப் பெயர்ச்சிக்கு ஆளாகிவிட்டனர், சில மவுடீகத்தில் மூழ்கி இருக்கின்றன. பசியைப் போக்கி கல்விச் சேவையைத் தரும் சில அமைப்புக்களிடமிருந்து, விவேகானந்தரின் விருப்பங்கள் மீள்துவக்கப்படவேண்டும். அதற்கு சமூக ஆதரவு கிடைக்கவேண்டும்.

இன்னுமொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே!

பார்க்க –

வந்தார் விவேகானந்தர் – ரஞ்சனி நாராயணன்

Rajamelaiyur – புத்தக மதிப்புரை

குகன் – புத்தக மதிப்புரை

2 thoughts on “விவேகானந்தர் | ரஞ்சனி நாராயணன்

  1. மதிப்புரைக்கு நன்றி பாண்டியன். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இரண்டு மதிப்புரைகளையும் இன்று தான் படித்துப் பார்த்தேன். அதற்கும் நன்றி.

Leave a comment