இதயராணிகளும் இஸ்பேடு ராஜாக்களும் – ஜெயகாந்தன்


இது வரை எதிர்மறையாக எனது வாசிப்பனுபவங்களை நான் ஏதும் எழுதியதில்லை. எவ்வளவு முயன்றும் ஒரு நல்ல அனுபவத்தை இந்த நூலுக்கு என்னால் அளிக்க முடியாமல் போனதில் எனக்கு வருத்தமே.

இதயராணிகளும் இஸ்பேடு ராஜாக்களும்
ஆசிரியர்: ஜெயகாந்தன்
பிரிவு: புனைவு
பதிப்பு: மீனாட்சி புத்தக நிலையம், மதுரை – ஐந்தாம் பதிப்பு 2012
கன்னிமாரா: http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=309797
NLB: http://catalogue.nlb.gov.sg/cgi-bin/spydus.exe/ENQ/EXPNOS/BIBENQ/17711118?QRY=CTIBIB%3C%20IRN%2845248152%29&QRYTEXT=Itaya%20ra%CC%84n%CC%A3ikal%CC%A3um%20ispe%CC%84t%CC%A3u%20ra%CC%84ja%CC%84kkal%CC%A3um

wpid-imag0993_1.jpg

நண்பர்களே,

இரண்டு கதைகள், குறுநாவல்கள் என்று வைத்துக்கொள்ளலாம், இந்த நூலில் உள்ளன. முதலில் இதயராணிகளும் இஸ்பேடு ராஜாக்களும்.

இதயராணிகளும் இஸ்பேடு ராஜாக்களும்

வழுக்கி விழுந்த பெண்கள் மறுவாழ்விற்கான விடுதிக்கு, முன்னால் பாலியல் தொழிலாளியைப் பேட்டிகாணச் செல்கிறார் ஒரு ரேடியோ நிரூபர். அவரையே திருமணம் செய்து கொள்கிறார். அவளது முந்தைய வாழ்க்கை வரலாற்றை கண்ணீர் சொட்டக்கேட்கிறார்.

குடும்பத்துப் பெண் ஒருவர் பாலியல் வியாபாரத்துக்குப் போவதற்கு இவர் சொல்லும் காரணம்..

அதில் அவர் விரும்பி தொடர்வதற்குரிய காரணம்..

ஒரு ஆல் இந்திய ரேடியோ நிரூபர் இந்தப் பெண்ணைத் திருமணம் செய்யப் பிடித்திருக்கக் கூடிய காரணம்…

எதுவுமே வலுவற்றவை. தவிற பாலியல் தொழிலாளியும், ஒரு சக மனிதனும் தூய தமிழில் (அதைத் தூய தமிழ் என்று சொல்லக்கூடாது. மொழி பெயர்ப்புத் தமிழ் என்று தான் சொல்லவேண்டும். பொதுவாக மொழிபெயர்ப்பு நூலில்தான் என் இதய ராணியே, என் ராஜாவே.. என்றெல்லாம் வரும்) உரையாடுவது செயற்கையோ செயற்கை. 100 சதம் ஒட்டவேயில்லை.

இந்த இடதுசாரிகள் (கதை எழுதிய நேரத்தில் ஆசிரியர் கம்யூனிச ஆதரவாளரா என்று தெரியாது) பொதுவாக பெண் சுதந்திரம் உள்ளிட்ட எந்த ஒரு புரட்சிக் கருத்துக்களையும் வண்டி வண்டியாகப் பேசக்கூடியவர்கள். ஆனால் mistresses town தனியே இவர்கள் நடத்துவர். இவர்கள் தலைவர்கள் என்று போற்றுவோர் சக பெண்ணை பாலியல் ரீதியாக சுரண்டுவர். கேட்டால் ‘உபதேசத்தை மட்டும் பார், தனி வாழ்க்கையை ஏன் பார்க்கிறாய்’ என்பார்கள். நமக்கெதுக்கு பொதுப்பிரச்சினை!

wpid-imag0994_1.jpg

ஒரு குடும்பத்தில் நடக்கிறது

இது ஒரு வகை என்றால், இரண்டாவதாக வரும் ‘ஒரு குடும்பத்தில் நடக்கிறது’ என்கிற அடுத்த குறுநாவலில் தியாகி அகிலாவைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். மோசடி செய்து திருமணம் செய்கிறான் ஒருவன். ‘தெரிந்தே’ செய்த தவறுக்கு வருந்துகிறான். முதலில் ‘சேர்த்துக்கொண்ட’ பெண் மற்றும் அவள் மூலம் வந்த 3 குழந்தைகளின் எதிர்காலத்திற்கு இரண்டாவதாக வந்த ‘தியாகி அகிலா’வின் சம்பளத்தைப் பயன்படுத்திக்கொள்கிறான். காதலில் அதையும் ஒப்புக்கொள்கிறாள் தியாகி அகிலா. பொதுவுடைமை!

இந்த நூலின் முதல்பதிப்பு 1983. பாரதிராஜா புதுமைப் பெண் படம் வெளியிட்டது 1984.

ஜெய் ஹிந்த்

2 thoughts on “இதயராணிகளும் இஸ்பேடு ராஜாக்களும் – ஜெயகாந்தன்

  1. #இந்த நூலின் முதல்பதிப்பு 1983. பாரதிராஜா புதுமைப் பெண் படம் வெளியிட்டது 1984.#
    இந்த நூலின் பாதிப்புதானா பாரதிராஜாவை அந்த படம் எடுக்க வைத்தது ?

    1. அப்படி ஏதும் இல்லைங்க. சமகாலத்தில் வந்த இரண்டிலும் காட்டப்பட்ட பெண்களில் பாரதி ராஜா காட்டிய பெண்ணே இப்ப வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறாள். அதைக்காட்டவே கடைசி அடியை எழுதினேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s