புவனமுழுதாளும் பெரும்பொற்புள்ளவளே, நான் தீண்டிய மலர்களே தெய்வங்களுக்கு. நான் தழுவிய பெண்களே மாமன்னர்களுக்கு. இதோ உன்னை அவனுக்காகக் கனியச்செய்கிறேன். ஊதி ஊதி பொன்னை உருக்கி நகையாக்குவதைப்போல. அவனுக்காக மலர்களை விரியவைத்து கனிகளைச் சிவக்கவைத்து நதிகளைச் சிலிர்க்கவைத்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன்.
நண்பர்களே,
அனைவராலும் பெருவிருப்போடு எதிர்பார்க்கப்படும் வெண்முரசின் அடுத்த நாவல் இன்று தொடங்கிவிட்டது. அதனை வரவேற்கவே இந்தப் பதிவு. உள்ளம் மயக்கும் கள்வனும், அவன் மனதைப் பித்தாக்கும் கள்ளியும் ஆடும் ஆடலைக் காண அனைவருமே காத்திருக்கின்றனர். கள்ளியின் மனம் மயக்கும் கள்வனின் லீலைகளையும், அக்கள்வனின் லீலைகளில் வெட்கி நாணும், வெருண்டு ஓடும், சோம்பி அமரும், ஏங்கி இளைக்கும் கன்னியின் அழகையும் காண விரும்பும் அனைவரின் ஆவலையும் இருபங்காக்கும் வகையில் முதல் பதிவு வந்துள்ளது. ராதையைத் தென்றல் துயிலெழுப்புவதாகத் தொடங்கியிருக்கும் ‘வெண்முரசு – நீலம்’ பெரு உள்ளங்களை அந்தரங்கமாய் பித்தாக்க ஒரு வாசகனாக வாழ்த்துகிறேன்.
அதென்ன பல்பு எரிந்தது.. மணி அடித்தது?
ஏதோ ஒரு தேதியில் நீலம் தொடங்கும் என்று எழுத்தாளர் ஜெயமோகன் சொன்னதாக நியாபகம். வரும்போது பார்த்துக்கலாம் என்று அவருடைய கன்னியாகுமரி நாவலை ஓரிரு நாட்களுக்கு முன்னர் தொடங்கினேன். இன்று காலை உணவு விடுதியில் அமர்ந்திருந்த பொழுது, ‘ஒருவேளை இன்று வந்திருக்குமோ’ என்று பார்த்தபோது.. ஆம்.. முதல் பதிவு வெளி வந்திருந்தது. ஆவலுடன் படிக்கத் தொடங்கினேன். மேலே ஒலி பெருக்கியில் ‘அலை பாயுதே… கண்ணா…’ இசைக்கத் தொடங்கியது. வேறென்ன வேண்டும் நண்பர்களே!
களித்திருக்க அழைக்கிறேன்!
This is an interesting post. I havent read it so far. I’ll try to read it.
வாருங்கள். தங்களுக்கும் நீலம் பிடிக்கலாம். முயன்று பாருங்கள். நன்றி.