அரவான் – அஞ்சலிக் குறிப்பு


குருக்‌ஷேத்திரப் போரின் முதல் நாளில் நாகர் குல இளவரசர் அரவான் வீர மரணம் அடைந்தார்.

அழகர், இளையவர், நாகர் குல உலூபிக்கு அர்ஜுனருக்குப் பிறந்தவர். தந்தையைத் துணைக்க தாயால் போர்முகம் காண அனுப்பப் பட்டவர்.

Arjuna_and_river_Nymph
Arjuna Ulupi – https://commons.wikimedia.org/wiki/File:Arjuna_and_river_Nymph.jpg

அர்ஜுனன் அனுமதி மறுத்தாலும் தாயின் சொற்படி களம் கண்டவர். தன் குல வழக்கப்படி ஆணிலி ரோகினியை மணந்தவர். பாண்டவர் வெற்றிக்கென தற்பலி அடைந்தவர்.

அவருடைய வேண்டுதலின் படி, அவரைடைய உடல் எரியூட்டப்படும். தலை குருக்‌ஷேத்ர களத்தில் வைக்கப்படும். பாண்டவர் வெற்றி காண தற்பலி அடைந்த வீரரின் நோக்கம் நிறைவேறியதும் (பாண்டவர் வெற்றி பெற்றதும்) அவரது சிரத்துக்கு அவரது குல வணக்கத்துடன் நிலம் படுக. பாண்டவர்கள் அளிக்கும் நீத்தார் கடனில் அவரும் இடம் பெறுக. திரௌபதி ஆலயங்களில் என்றும் அரவான் எங்களுக்கு அருள் தருக. உடன் மடிந்த ரோகிணியும் அமைதி பெறட்டும்.

கடைசி பெஞ்சின் வணக்கங்கள்

aravan mahabharata diety singapore
அரவான் – மாரியம்மன் கோயில், சிங்கப்பூர் (படம் உதவி http://samveditemplesojourn.blogspot.com/2014/04/aravan-mahabharatha-character.html)

2 thoughts on “அரவான் – அஞ்சலிக் குறிப்பு

  1. இது வரை அறியாத கதை.
    அரவான் தந்தைக்காக செய்த இந்த தியாகம், எவ்வாறு பரவலாக அறியாது போயிற்று?
    வியப்பாக உள்ளது.

    • அவசியம் இந்த வீடியோவைப் பாருங்கள். இதில் வரும் நிகழ்வுகள் அனைத்தும் குருக்‌ஷேத்திரப் போர் முனையில் நடப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். https://www.youtube.com/watch?v=ob5cJovUZic

      தமிழகத்தைப் பற்றி ஏதும் சொல்வதற்கில்லை. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

Leave a comment