மணிமேகலை – எளிமையான நாவல் வடிவில் | என் சொக்கன்


‘ஆனால், என் கணவர் ராகுலன் இப்போது எங்கே இருக்கிறார்? அதைச் சொல்லவில்லையே?’

‘இன்னுமா அது உனக்குப் புரியவில்லை’ மணிமேகலாத் தெய்வம் மெல்லச் சிரித்தது

மணிமேகலை – எளிமையான நாவல் வடிவில்
ஆசிரியர்: சீத்தலைச் சாத்தனார்
நாவல் வடிவம்: என் சொக்கன்
கிண்டில்: மணிமேகலை (எளிமையான நாவல் வடிவில்): Manimekalai (Retold in Novel Format) (Tamil Edition) Kindle Edition

இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான ‘மணிமேகலை’யை எளிமையான நாவல் வடிவில், 66 அத்தியாயங்களில் தந்துள்ளார் ஆசிரியர். பதின்ம வயதுக் குழந்தைகளுக்கான நாவல் மொழியில் அமைந்துள்ளது.

தப்பு செய்யும்போது பயம் வருவதில்லை. அது வெளியே தெரிந்து விடுமோ என்று நினைக்கும் போதுதான் அச்சம் நம்மைப் பிடித்து ஆட்டுகிறது

பெருங்காப்பியத்தை இதற்குள் சுருக்கியதாலோ என்னவோ, விரைவில் ஓடுவது போன்ற நடை அமைந்திருக்கிறது. எனவே வாசிக்கத் தொடங்கினால் கடகடவென முடிந்துவிடுகிறது.

வறுமையில் இருப்பவர்களுக்கு அவர்கள் கேட்பதைக் கொடுப்பவர்கள்தான் நல்லவர்கள், அவர்களுடைய பசியைப் போக்குகிறவர்களுக்குதான் சொர்க்கத்தில் கதவுகள் திறக்கும்

புகாரில் தொடங்குகிறது கதை. மணிமேகலை அழகில் மயங்கிய உதயகுமாரன் அவளைத் தொந்தரவு செய்வது. பௌத்த துறவியான மணிமேகலை தன் அறத்தைப் பின்தொடரவெண்டி ஒதுங்க, காயசண்டியையின் உருவில் மாறுவது, அதில் தொடரும் ஆபத்துக்கள், மணி பல்லவத்தீவை மையமாக வைத்து சொல்லப்படும் அமுதசுரபி என்று இறுதியில் காஞ்சி நகரில் முடிகிறது.

மணிபல்லவத்தீவில் ஆபுத்திரன் ஒதுங்குவது, காயசண்டிகை உருவில் உள்ள மணிமேகலையிடம் குறும்பு செய்து, ஆபத்தைத் தேடி வரவழைத்துக் கொண்ட உதயகுமாரன் அத்தியாயங்கள் வாசிப்பவர் நினைவில் நிற்கும்.

புகாரைக் கடல் கொள்வது, காஞ்சி நகரின் வருமை என்று புனைவிற்காக வாய்ப்புகள் இக்கதையில் அதிகம். நேரமும், வாசிப்பவரின் வயதும் கருதி ஆசிரியர் சுருக்கி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

பசி என்பது ஈவு இரக்கம் இல்லாத ஒரு நோய்

இனியொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே.

வாழ்க பாரதம்!

Leave a comment