ராஜிவ் கொலை வழக்கு

ராஜீவ் கொலை வழக்கு – மர்மம் விலகும் நேரம்


ராஜீவ் கொலை வழக்கு – மர்மம் விலகும் நேரம்
ஆசிரியர் – கே. ரகோத்தமன்
பதிப்பு – கிழக்கு பதிப்பகம், 2009
பிரிவு – அரசியல்

ராஜிவ் கொலை வழக்கு
ராஜிவ் கொலை வழக்கு

ராஜிவ் கொலை வழக்கு
ராஜிவ் கொலை வழக்கு
கே. ரகோத்தமன்
கே. ரகோத்தமன்

இந்திய அரசியலை புரட்டிப்போட்ட ஒரு கொலை. உலகத்தின் கவனத்தை ஈர்த்த கொலை. தமிழகம் அமைதிப்பூங்காவா என்று கேள்வி எழுப்பிய கொலை. அந்த ராஜீவ் கொலை வழக்கைப் பற்றி புலனாய்வு அதிகாரி ரகோத்தமன் ஆதாரங்களுடன் வெளியிட்ட புத்தகம் இது. இந்தப் புத்தகத்தின் பின்புலத்தை இங்கே காணலாம் http://www.badriseshadri.in/2009/12/blog-post_10.html

rajiv_gandhi_assasination_20050829

இந்திய வரலாறுக்குக் கொலை புதிதில்லை. ஆனால் கொலை நடுங்க வைத்த கொலைகளில் காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி கொலைக்கு மிக முக்கிய இடம் உண்டு. ஆனால் சமகால நிகழ்வு என்பதால் இந்தப் புத்தகத்தின் மீதான ஈர்ப்பு அனைவரிடமும் இருக்கிறது. பல்லவன் ரயிலில் திருச்சி முதல் சென்னை வரை ஒருவர் விடாமல் விவாதித்துக்கொண்டு வந்தார்.

சரியோ தவறோ ராஜீவ் கொலை LTTE இயக்கத்தின் தலையெழுத்தை மாற்றியது. “ராகொமு – ராகொபி” – LTTEஐ ராஜீவ் கொலைக்கு முன்; ராஜீவ் கொலைக்குப் பின் என்று பிரிக்கலாம் என்று எனது சகோதரர் வேடிக்கையாகச் சொன்னார். உண்மைதான். LTTEஐ இந்தியாவின் நிரந்தர எதிரி ஆக்கியது. அந்தக் கொலைக்குப் பயன்படுத்திய வெடி குண்டு கருகல் வா. டை முல்லிவாய்க்கால் வரை அடிக்கிறது – இன்றைய மாணவர் போராட்டத்திலும் அடிக்கிறது. சிங்கள அரசை ராஜாங்க ரீதியாக இந்திய அரசுடன் நெருங்கிவரச் செய்தது.

Sriperumpudur Rajiv Assassination

யார் செய்தார்கள் – ஏன் செய்தார்கள் – எப்படிச் செய்தார்கள் என்கிற விபரம் தெரியாமல், பெரிதாக ஏதும் ஆதாரம் இல்லாமல் ஒட்டுமொத்த சுணக்கமாகத் தொடங்கிய விசாரணை எப்படி படிப்படியாக உருமாற்றம் பெற்றது என்று விரிவாக, ஆதாரத்துடன் பக்கம் பக்கமாக விளக்குகிறார் ஆசிரியர்.

தனு இருந்த புகைப்படம் SITக்கே தெரியாமல் இந்துப் பத்திரிகைக்குச் சென்றது எப்படி? அவர்கள் எப்படி இவர்தான் கொலையாளி என்று ஊகித்தார்கள்? பல தமிழ் அரசியல்வாதிகள் (காங்கிரசார் உட்பட) விசாரணையில் மென்மை காட்டப்பட்டது ஏன்? இவ்வாறு பல கேள்விகளை ஆங்காங்கே எழுப்புகிறார் ஆசிரியர்.

Dhanu

முக்கியமாக இந்தக் கொலையில் ஊனமுற்ற RAW அமைப்பைப் பளிச்சென்று காட்டுகிறது இந்தப் புத்தகம். உலகலாவிய அளவில் ராஜீவ் கொல்லப்படுவார் என்று பேசப்பட்டபோது காக்க முடியவில்லை. குறைந்த பட்சம் கொல்லப்பட்டபின் இவர்கள்தான் கொன்றார்கள் என்று சொல்லக்கூட RAW வைத்துள்ள தரவுகள் உதவவில்லை என்பது மரண சோகம்! தவிற கிட்டுவை RAW முகவராக வைத்திருந்த கேளிக்கூத்துகளைப் படிக்கையில் ஏற்படும் பாதுகாப்பற்ற உணர்வை என்னவென்று சொல்வது?

LTTEக்கு ராஜீவ் மீது வன்மம் இருந்தது உண்மை. கொலை செய்யும் அளவிற்கு அந்த வன்மம் கொடிதா? தானே செய்தார்களா? வேறு யாரேனும் சொல்லி இதைச் செய்தார்களா? அவரவர் கூற்றுக்கே விட்டுவிடலாம். ஆனால் கொலையாளிகளை நேர்த்தியாகப் பிடித்தவிதம், அவர்களை உயிருடன் பிடிக்க விடாமல் தாமதம் செய்த கையாலாகத்தனம் அனைத்தும் தெரிகிறது.

பல செயதிகள் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகின்றன. தமிழ்நாட்டு புலித் தொடர்புகள் – கொலைக்கான ஒத்திகை – புலிகளின் தகவல் தொடர்புகள் – அவற்றை டீகோட் செய்ய இந்தியாவின் முயற்சிகள் – இந்தியாவின் கண்ணில் மிளகாய்பொடி தூவிவிட்டு தங்கள் தகவல் தொடர்பைத் தொடர்ந்த விதம் – அதிகார மட்டததில் கிடைதத கசப்பனுபவங்கள் – அனைத்தும் எந்த ஒரு ஹாலிவுட் பட விருவிருப்பிற்கும் குறையாதவை.

நளினி மீதான குற்றத்தில் கருணை காட்டப்படவேண்டும் என்கிறார் ஆசிரியர். அவர் இல்லாவிட்டால் விசாரணை தாமதப்பட்டிருக்கும் என்கிறார்.

இதுவரை இருமுறை வாசித்திருக்கிறேன். மீண்டும் வாசிக்கவேண்டும். இன்னும் கார்த்திகேயன் எழுதிய புத்தகம் வாங்கவில்லை. எதிர்காலத்தில் வாங்குவேன் என்று நினைக்கிறேன்.

2 thoughts on “ராஜீவ் கொலை வழக்கு – மர்மம் விலகும் நேரம்

  1. இந்தக் கட்டுரை படித்தவுடன் அந்த நாள் ஞாபகம் வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்ந்த மர்மம். கடைசியில் சிவராசன் பெங்களூரில் கோனானகுண்டேயில் கொல்லப்பட்டது உட்பட.

    கட்டாயம் வாங்கிப் படிக்க வேண்டிய பத்தகம்.
    அறிமுகத்திற்கு நன்றி

    • இந்திய சரித்திரத்தை மட்டுமல்ல, இலங்கை சரித்திரத்தையும் மாற்றி அமைத்தது ராஜிவ் படுகொலை. அதைத் திறம்பட புலனறிந்தது (உளவு, காவல், பாதுகாப்பு என்று எல்லாவற்றிலும் கோட்டை விட்டிருந்த நிலையில்) பாராட்டுதலுக்கு உரியது. ஆனால் அதிலும் நிறைய ஓட்டைகள் காட்டுகிறார் ஆசிரியர். அவையும் களையப்பட்டிருந்தால் அரசாங்க எந்திரத்தின் மீது பெருமை கொண்டிருந்திருக்கலாம்

      இன்று தங்களுடைய மூன்றாவது கருத்துரை இது. மிக நன்றி.

Leave a comment