ஸ்ரீரங்கத்து தேவதைகள் – சுஜாதா


எளிய வாசிப்பிற்கான ஒரு உண்மை கலந்த சிறுகதைப் புனைவுகள். இதில் வரும் குண்டு ரமணி, சின்ன ரா, எதிர் வீடு, காதல் கடிதம் போன்ற கதைகள் புன்னகையை வரவழைக்கும். பல நபர்களைப் பற்றிச் சொல்லும்போது அந்தப் பாட்டி பாத்திரம் நச்சென்று அமைந்து விடுகிறது. கடவுளுக்குக் கடிதம், ஏறக்குறைய ஜீனியஸ், மறு போன்ற சிறுகதைகள் கனமானவை.

ஸ்ரீரங்கத்து தேவதைகள்

ஆசிரியர்: சுஜாதா
பிரிவு: சிறுகதை
பதிப்பு: கிழக்கு பதிப்பகம், முதல் பதிப்பு செப் 2011
நூலக முன்பதிவு:
NLB: http://www.nlb.gov.sg/newarrivals/itemdetail.aspx?bid=14288321
கன்னிமாரா: http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=8005151

IMG_0618.JPG

1. கடவுளுக்குக் கடிதம்

ஸ்ரீரங்கத்துப் பின்புலம் கொண்ட கதை. மனநலம் பாதிக்கப்பட்ட கோவிந்துவைச் சுற்றிய சிறுகதை. மகனின் கல்யாணத்தை நிறுத்தும் கோவிந்துவின் அம்மாதான் தேவதை.

கோவிந்து ரொம்பநேரம் மவுனமாக உட்கார்ந்திருந்து விட்டு, போஸ்ட் ஆபீஸ் திறந்ததும் ஒரு கார்டு வாங்கி வந்து, ரங்கு கடையில் உட்கார்ந்து, தொடைமேல் வைத்துக்கொண்டு தினம் கடவுளுக்குக் கடிதம் எழுதுவான். அதுவும் இங்கிலீஷில். அட்ரஸ்-
‘காட்
கேர் ஆஃப் வைகுண்டா
ஹெவன்’
என்று எழுதி ‘டியர் காட்’ என்று ஆரம்பித்து மூன்று நான்கு ஆணித்தரமான கேள்விகள் கேட்டிருப்பான்.

2. ராவிரா

பாவப்பட்ட கேஸ்..

‘டேய் நீ அன்னைக்கி எங்காத்துக்குப் போயிருந்தபோது கோபால் தாஸ் என்ன பண்ணிண்டிருந்தான்?’ என்று கேட்டார்

‘பேசிண்டிருந்தான் மாமா’

ராவிராவின் ஆம்படையாள் தான் (அ)தேவதை

3. குண்டு ரமணி

அடுத்த மனநிலை பிரண்ட ரமணியின் கேஸ்.

ரமணி பார்த்து, சட்டி மூஞ்சி நிறையச் சிரித்து, ‘வாரும் கிருஷ்ணா! மத்தெடுத்துண்டு வரேள்! வாரும்!’ என்றவள், நாணு சற்றும் எதிர்பாராத விதத்தில் மத்தைப் பிடுங்கி உடைத்துப் போட்டு, அவரை அலாக்காகத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டாள். அப்புறம் எங்கிருந்தோ வந்த வெறியில் அப்படியே அவரைப் பந்தாடுவது போலக் கீழே எறிந்துவிட்டுப் புடைவை மண்ணைத் தட்டிக்கொண்டு புறப்பட்டுச் சென்றாள்.

நாணு வெலவெலத்துப் போய்,இதற்கப்புறம் இரண்டுநாள் ஜுரமாய் படுத்திருந்தாள். குஞ்சம்மாள் அவருக்கு ராத்திரியெல்லாம் ‘தூக்கித் தூக்கி’ப் போடுவதாக அருணாச்சல டாக்டரைக் கூப்பிட்டச் சொன்னாள்.

4. வி.ஜி.ஆர்

கண் பார்வை சற்று மந்தம். காது ரொம்ப டப்பாஸு. ஏதாவது நிழலாடிற்று என்றால் ‘யார்றாது?’ என்பார்.
‘வேம்பு மாமா’
‘யாரு’
‘வேம்பு மாமா’ இது உரக்க.
‘எச்சுமி புள்ளையா’
‘ஆமாம் மாமா’
‘உங்கப்பா சவுக்கியமா இருக்கானா’
‘அப்பா போன கார்த்திகை மாசம் பரம்பதிச்சுட்டார் மாமா’
‘ஏதோ சௌக்யமா இருந்தா சரி. ரெயில்வேல, பொன்மலைலதானே எட் கிளார்க்கா இருக்கான்?’
‘அப்பா போயிட்டார் மாமா போன கார்த்திக்கு, வருஷாப்திகம்கூட வரப் போறது’
‘ஏதோ நல்லபடியா இருந்தா சரி. விசாரிச்சேன்னு சொல்லு’
‘செவிட்டு எழவே. நீயே போய் விசாரிச்சுக்கோயேன்’ என்று வேம்பு முனுமுனுத்துக்கொண்டே விலகுவான்.

5. திண்ணா

அய்யங்கார்களில் இரண்டு பிரிவு உண்டு. வடகலை, தென்கலை. அடைய வளைஞ்சான் பெரியார் கட்சிக்காரர்கள் ‘எச்சக்கலை’ என்று மூன்றாவதையும் சேர்த்துக்கொள்வார்கள். அய்யங்கார் என்பதே ஒரு வகையில் சிறுபான்மைதான். ……. என்னுடைய சொந்த ஆராய்ச்சியின்படி தென்கலைப் பையன்கள் ஒன்று அமெரிக்காவில் இருக்கிறார்கள். அல்லது சமையற்காரர்களாக இருக்கிறார்கள்.

6. சின்ன ‘ரா’

ஜேவி பாலாமணியை ..க்கிறான்
‘..க்கிறானி’ல் சின்ன ‘ரா’.

டுவிஷ்டு உள்ள திரைக்கதை

7. பெண் வேஷம்

எனக்குப் பனியனையோ பந்தையோ கழற்றச் சமயமில்லாமல் பாவாடையுடன் ஓடினேன். குறுக்கே சில்க் ஆசாமி வந்து என்னைத் தடுத்து ‘வா கண்ணு’ என்றார். ‘ஸார். நான் பையன் ஸார். பையன் ஸார்’ என்று சொல்லிக்கொண்டே மாடிப்படியில் சரிந்து இறங்கி ஓடி, கொள்ளிடம் ரோடு வழியாக வேஷத்தைத் துறந்து, இருட்டில் வீட்டுக்கு வந்து சேர்ந்த போது மணி பதினொன்று. ‘இதோ நாளைக்கே உங்கப்பாவுக்கு லெட்டர் போடுகிறேன்’ என்று கொதித்தாள்.

8. ஏறக்குறைய ஜீனியஸ்

உள்ளூர் விஞ்ஞானிகளின் வாழ்க்கை போராட்டம் நிறைந்தது. ஆர்வத்தின் வேகம், பிழைத்திருப்பதன் பரிதாபம். அப்படி ஒருவரின் கதைதான் இது.

…..வேலை கிடைத்து விட்டது.

‘அப்படியா? என்ன சம்பளம் தரான்?’
‘இருநூத்து எழுபத்தஞ்சு ஸார், முதல்ல அலகாபாத்ல ட்ரெயினிங்’
‘வேலையே வேண்டாம்னு எழுதிப் போட்டுரு.’
‘ஸார்! அது வந்து கவர்மெண்ட் உத்தியோகம்’
‘எதுக்கு வடக்கே போகனும்? நான் உனக்கு சீரங்கத்திலயே நானூறு ரூபா போட்டுத் தரேன். இன்னிலிருந்து உனக்கு அஸிஸ்டண்ட் ஒர்க்ஸ் மானேஜரா புரொமோஷன்’
‘என்ன ஸார். செஞ்ச வேலைக்கு இன்னும் நீங்க சம்பளம் தரவே இல்லை’ என்று சொல்லிவிட்டேன். அவர் காயம் பட்ட பார்வையுடன், ‘கம்பெனி ஆரம்பத்தில் இப்படித்தாம்பா இருக்கும்…’

9. பேப்பரில் பேர்

அரைகுறை கிரிக்கெட் அணி. மன தைரியம் இல்லாத அங்கத்தினர்கள். தெனாவெட்டான கேப்டன். செம மசாலா!

அதோ தூரம் பிரியாணி போல் அந்த ராம்கி என்கிறவர் தடதடவென்று சூட்டில் இருக்கும் காட்டெருமை போல் ஓடி வருகிறார். கைர்ர்ரென்று சுழல ஒரு கரு ரத்தக்கட்ட போல் பந்து என்னை நோக்கி வந்து டமால் என்று என் காலில் படுகிறது. ‘ஹௌ ஸாட்’ என்று மைதானம் முழுவதுமே அலறுகிறது. ஆனால், எங்கள் கட்சி அம்பயர் பையாக்குட்டி ஞானம் பெற்ற புத்தர் போல அசங்கவில்லையே! ராம்கி அவனை அற்பப்புழு போலப் பார்த்தார்.

10. பாம்பு

தங்கையை சைட் அடிக்கும் நண்பன், அவனை கிளீன் போல்டு ஆக்கும் தங்கை.

‘சிவராமனா! பாம்பா! ஏண்டா நீ எப்பவாவது மரவட்டையையாவது அடிச்சருக்கியா?’
‘காட்டு? அடிக்கிறேன்’ என்று சட்டென்று குச்சியைச் சாக்கடையிலிருந்து உருவி சிவராமன் முன்னிலையில் ‘த்ருட்’ என்று அசைத்தான். ஒரு நிமிஷம் அவன் பயந்து போய் பின்வாங்க, கேவி அட்டகாசமாய் சிரித்தான். ‘இவன்தான் பாம்பை அடிக்கிறவனாக்கும்’

11. எதிர் வீடு

‘ஃபுல்லா எல்லாத்துக்கும் சேர்த்தாப்பலே கூட சாவி கொடுக்கலாம். ப்ளேட்டுக்கு பிளேட் கொடுக்க வேண்டாம்.’ என்றான்.
நான் சாவி கொடுத்தேன்.
‘போறுண்டா’ என்றேன்.
‘இன்னும் குடுடா’ என்றான்.
இன்னும் கொடுத்திட்டுப் ‘போறுண்டா’ என்றேன்.
பயப்படாதே டைட்டா குடு. சாவி ஜாஸ்தியானா, தானா ஆட்டோ மாட்டிக்கா கழண்டுக்கும்.’
நான் விண் என்று சாவி கொடுத்தேன். உள்ளே ஏதோ வெடிக்கும் சப்தம் கேட்டது.

12. கிருஷ்ண லீலா

ஆக்கிரமிக்கும் ஒரு நண்பன் பற்றிய ஒரு கதை.

எனக்கு பௌலிங் கொடுக்கமாட்டான். ஒன்பதாவதாகத்தான் ‘பாட்’ செய்யச் சொல்வான். தான் அவுட் ஆனதும் டிக்ளேர் செய்து விடுவான். பந்து சாக்கடையில் விழுந்தால் நான்தான் எடுத்து அலம்பிக்கொண்டு வரவேண்டும். சீதாப்பாட்டியின் வீட்டுக்குள் பந்து சென்று விட்டால் நான்தான் போய் முழங்காலில் மண்டியிட்டு கெஞ்சி அதை மீட்டுக் கொண்டு வர வேண்டும். தெருவில் எப்போது கிரிக்கெட் சீசன் முடிந்து பம்பர சீசன் ஆரம்பம் என்பதை கிரிஷ்ண மீர்த்தியே தீர்மானிப்பான்.

13. காதல் கடிதம்

பாட்டியிடம் பஞ்சாயத்து.

‘யாரை உனக்குப் புடிச்சிருக்கு?’
‘வந்தியத்தேவன்’
‘எனக்கு நந்தினியைத்தான் பிடிச்சிருக்கு’ என்றாள். அவள் ஒரு நிமிஷம் மணியன் கொண்டை வைத்துக்கொண்டு கறுப்பு நந்தினி போல இருந்தாள். எனக்குக் காலுக்குக் கீழ் குறுகுறுத்தது. இதுதான் ஒரு வேளை காதலோ என்று பார்த்ததில் கரப்பான் பூச்சி.

14. மறு

சிறு திருட்டு தரும் பெரும் குற்ற உணர்வு

‘நான் பார்க்கலையே செவளா! பார்த்திருந்தா எடுத்துக் கொடுத்திருப்பேனே. எத்தணை ரூபா?’
‘மூணு ரூபாடா ராசா. என் தலையெழுத்து.. ரேஷன் அரிசியும் புள்ளைக்கு கால்சராயும் எடுக்கலாமுன்னுட்டு.. இந்த முறையும் இல்லையா? என் விதி’ என்று அழத்தொடங்கியவளை என்னால் நேர் பார்க்க முடியவில்லை.

 

IMG_0619.JPG

2 thoughts on “ஸ்ரீரங்கத்து தேவதைகள் – சுஜாதா

  1. எனக்குப் பிடிக்காத எழுத்தாளர் இவர். இந்தக் கதைகளை வெளிவந்த போதே படித்திருக்கிறேன். நகைச்சுவை என்ற பெயரில் பெண்களை இழிவு படுத்தியிருப்பார். ஆனால் பெரும்பாலான பெண்களுக்கும், ஆண்களுக்கும் இந்தக் கதைகள் பிடிக்கும்!

    • முதல் பின்னூட்டத்தைப் படித்ததுமே நினைத்தேன். நல்ல காலம் இப்பவே சொன்னீர்கள். இன்னும் நான்கு பதிவுகள் செட்யூலில் உள்ளன!!

Leave a comment