கல்கத்தாவின் புத்த மதப் பொக்கிஷங்கள் சிங்கப்பூரில் – விரைக!


கோடானு கோடி வாசகப் பெருங்குடி மக்களே!!!

ஆசியாவின் பழமையான அருங்காட்சியகத்தின் பொக்கிஷங்கள்: கல்கத்தா அருங்காட்சியகத்திலிருந்து புத்தமத கலை அம்சங்கள் சிங்கப்பூருக்கு வந்துள்ளன. நண்பர் நேற்று மாலை அழைத்துச் சென்றார். குகைகளைத் தேடிய பழைய நினைவுகளை மீட்டெடுக்க உதவியது.

காந்தாரக் கலை மற்றும் பாலப் பேரரசின் எழில் மிகுந்த போதிசத்வர் மற்றும் புத்தர் சிற்பங்களைக் காணும் வாய்ப்பைத் தவற விட்டுவிடாதீர். ஜாதகக் கதைகளைச் சொல்லும் சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள், புத்தரின் வாழ்க்கை நிகழ்வுகள் மற்றும் புத்தமத சின்னங்கள் என்று இந்தியக் கலையின் வழியாக புத்த மதத்தின் வளர்ச்சியை இந்தக் கண்காட்சி காணத் தருகிறது.

சென்னையிலிருந்தும், நாகப்பட்டிணத்திலிருந்தும் இரண்டு காட்சிப் பொருட்கள் வந்துள்ளன

அனுமதி இலவசம் – 16 ஆகஸ்ட் வரை

Asian Civilization Museum, 1 Empress Place, Singapore

தொடர்புள்ள பிற பதிவுகள்

 

இந்தியா, இலங்கை, பர்மா, தாய்லாந்து. இந்தோனேசியா, மலேசியா, திபெத், சீனா….. புத்த மதக் குடையின் கீழ் அத்தனை கிழக்காசிய நாடுகளையும் கொண்டு வர முடிகிறது. ஆனால் புத்தமதம் என்னவென்று அறியாத சில சீனர்கள் எந்த ஒரு காரணமுமின்றி, மேற்கத்திய மோகத்தில் மதம் மாறுவதைக் காணும்போது வருத்தமாக இருக்கிறது. சீனர்கள் மாறுவது இருக்கட்டும், தமிழகத்தில் என்ன வாழ்கிறது?

 

 

இன்னுமொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே,

வளர்க பாரதம்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s