இருட்கனி | ஜெயமோகன்


அஸ்தினபுரியின் அரசியை நான் அன்னை எனச் சொன்னால் ராதேயன் அல்லாமல் ஆகிவிடுவேன் அல்லவா? நான் ராதையின் மைந்தன். வாழ்நாள் முழுமைக்கும் அவ்வாறே. மறைந்தபின் என் கொடிவழிக்கும் அவரே பேரன்னை. அவரை துறந்து நான் அடையும் அரசும் குடியும் உறவும் புகழும் ஏதுமில்லை. தெய்வங்களும் இல்லை

இருட்கனி – 8

இருட்கனி (வெண்முரசு)
ஆசிரியர் : ஜெயமோகன்
இணையத்தில் வாசிக்க: இருட்கனி – 1

வெண்முரசு நாவல் வரிசையின் 21ஆவது நாவல் இருட்கனி. குருக்‌ஷேத்திரப் போரைப் பற்றிய நாவல் என்றாலும், இதன் தலைவன் கர்ணன்! கர்ணனின் எழுச்சிக்கு வெய்யோன். அவனுடைய வீழ்ச்சிக்கு இருட்கனி. பின் வரும் நிகழ்வுகளைச் சூதர் பாடல்களின் வழியாகச் சொல்கிறது இந்த நாவல்.

  • துச்சாதனனின் படுகொலை
  • பாஞ்சாலி சபதம் முடிவு
  • கடைசிக்கும் முதலான கௌரவன் சுபாகுவின் வீழ்ச்சி
  • கர்ணனின் வில் விஜயத்தின் கதை
  • கர்ணனிடம் பிறர் இறுதி விடைகொள்ளுதல்
  • கர்ண-சல்லியர்களின் வாதவிவாதங்கள்
  • கர்ணனின் அடுத்தடுத்த பிழைகள் மற்றும் தளைகள்.
  • கர்ணனின் இறுதிச் சடங்கு

இது கௌரவர்களின் மிகப் பெரும் வீழ்ச்சி. கர்ணனால் தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்கிற நிலையில் தொடங்கியது 11ஆம் நாள் போர். கர்ணன் குந்திக்கு அளித்த வாக்கு, கர்ணன் இந்திரனுக்குக் கொடையாக அளித்த கவசங்கள் மற்றும் குண்டலங்கள், பாண்டவர்க்கு அளித்த உயிர் பிச்சைகள், பாண்டவ மைந்தர்களைக் கொள்ளாதொழிந்தாலும் தன் மைந்தர்களைப் பலி கொடுத்தது, சல்லியரின் அறிவுரைகளை மதிக்காதது என்று அடுக்கடுக்காக எத்தனை பிழைகள் ஒன்று சேர்ந்து ஒரு மாவீரனின் உயிரைப் பறித்துள்ளது என்று காட்டுகிறது இந்த நாவல்.

karna-vs-arjuna

நந்த கிராமத்தில் இந்திர விழவைத் தடுத்ததும், அதன் விளைவான இந்திரனின் கோபத்திலிருந்து அவர்களைக் காத்ததும் நாம் அறிவோம். அந்தக் கதையைத் தூக்கி வந்து இருட்கனியுடன் பொருத்திப் பார்ப்பது தேவையாகிறது. கர்ணனின் கவசங்களையும் குண்டலங்களையும் மாற்றுருவில் போய் தானமாகப் பெற்று வர இந்திரனின் உதவியை நாடுகிறார் இளைய யாதவர். இரு திசையில் போய்கொண்டிருக்கும் இரு பெரும் சக்திகள் ஒன்று சேர்ந்து இன்னொரு சக்தியை வஞ்சக வலையில் சிக்கவைப்பதை அழகுற காட்டுகிறது இருட்கனி.

உன் கவசமும் குண்டலங்களும் உன் தந்தையான சூரியனுக்கே அளிக்கப்பட்டன. வேள்வியில் அளிக்கப்பட்டவற்றை தேவர்கள் மறுக்கவியலாது என்பதனால் அவன் அதை கொண்டான். கதிர்மைந்தனே, ஈன்று எழுந்த அன்னைப்பசு அதுவரை தன்னுள் அமைந்து அக்கன்றைக் காத்த கருப்பையையும் நச்சுக்கொடியையும் உண்பதுபோல இது இயல்பானது. நீ அளித்தவற்றை உரிய தேவனுக்கே அளித்து நான் மேலும் வேதப்பயன் கொண்டவன் ஆனேன். அதன்பொருட்டு மீண்டும் உன்னை வாழ்த்துகிறேன். என்றுமிருப்பாய்! ஒளி வளர பாரதவர்ஷம்மேல் நின்றிருப்பாய்! ஆம், அவ்வாறே ஆகுக!”
இருட்கனி – 43

யாரையும் கொல்லவில்லை கர்ணன். மறு பக்கத்தில் ஆயுதம் ஏந்ததாதவர்களைப் படுகொலை செய்கிறான் பீமன். அறம் தவறியே அனைத்து வெற்றிகளையும் பெறுகிறான் அர்ஜுனன். சமநிலை இல்லாத இந்தப் போர்களம் விவாதத்திற்குரியதாகிறது.

சுபாகு “இன்னும் அவர்களில் எவரும் கொல்லப்படவில்லை” என்றான். “உண்மை. அவர்கள் எவரையும் கொல்லும் எண்ணம் அங்கருக்கு இல்லை என்று நேற்று தெரிந்துகொண்டேன். எண்ணியிருந்தால் அவர் நேற்று யுதிஷ்டிரனையும் பீமனையும் கொன்றிருக்க முடியும். அர்ஜுனனையன்றி எவரையும் அவர் கொல்ல முயலவும் இல்லை என்பது தெளிவு” என்றான் அஸ்வத்தாமன். “ஏன்?” என்று சுபாகு கேட்டான்.

இருட்கனி – 41

தன் சிந்தனைக்கும், தன் கொடைக்கும் கட்டுப் பட்டு, துரியோதனனைத் தோல்வியை நோக்கித் தள்ளுகிறான் கர்ணன். இதுவே தன் முடிவு என்று துரியோதனன் ஏற்றுக்கொண்டு அடுத்தடுத்த நான் கொலைகளை சகித்துக் கொள்பவனாக மாறியிருக்கிறான்.

arjuna-kills-karna

பாண்டவ இளவரசர்களைக் கூடத் தொடவில்லை கர்ணன். வகையாகச் சிக்கிய பீமனைக்கூட சிறுமைப் படுத்தி விலகிச் செல்கிறான். அதன் மறுபக்கத்தில், கர்ணனின் மைந்தர்களைக் கொண்டு போய் அர்ஜுனன் முன் நிறுத்தி உயிரை மாய்க்கச் செய்கிறான். இதைத் தலையில் அடித்துக்கொண்டு முன்னரே சொல்கிறார் சல்லியர்.

சாவு என்னும் பிலத்தை நோக்கி களிமயக்கில் செல்லும் நிலையில் இருக்கிறான் கர்ணன். இதுவே தன் முடிவென்று. போகும்போது கௌரவர்களையும் சேர்ந்து அதில் தள்ளிவிட்டுப் போகிறான். வண்டு துளைத்த குருதி கசியும் தொடையுடனே சிதையேறுகிறான். சூதனென்று அவமதித்த உலகிற்கு நான் தூய சத்திரியன் என்று சொல்லியவாறே.

அடுத்த பதிவில் சந்திப்போம் நண்பர்களே.

வளர்க பாரதம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s