Doctor Strange in the Multiverse of Madness [திரைப்படம்]


அமெரிக்கா சாவேஸ் மற்றும் ஸ்டீபன் ஸ்ட்ரேஞ்ச் விஷாந்தி புத்தகத்தைத் தேடுகின்றனர். அப்போது பிரபஞ்சங்களுக்கு இடையில் உள்ள வான்வெளியில் அவர்கள் ஒரு அரக்கனால் துரத்தப்படுகின்றனர்.

ஸ்டீபன் ஸ்ட்ரேஞ்ச்
அமெரிக்கா சாவேஸ்

தற்செயலாக ஸ்ட்ரேஞ்ச் கொல்லப்பட்டுவிட, சாவேஸ் தன்னையும் ஸ்ட்ரேஞ்சின் சடலத்தையும் எர்த்-616க்குக் கொண்டு வந்துவிடுகிறாள். அங்கு அந்த பூமியில் ஸ்ட்ரேஞ்ச் பிறவி, சீனர் வோங்கின் உதவியுடன் சாவேஸை ஆக்டோபஸ் அரக்கனிடமிருந்து காப்பாற்றுகிறார்.

வோங்

அவளுக்கு பிரபஞ்சங்களுக்கு இடையில் பயணிக்கும் சக்தி இருப்பதால் பேய்கள் அவளை வேட்டையாடுகின்றன என்று சாவேஸ் விளக்குகிறார்.

அந்த ஆக்டோபஸ் அரக்கனிடம் மாந்திரீக வேலைகளை உணரும் ஸ்ட்ரேஞ்ச் உதவிக்காக வாண்டா மாக்சிமோஃப் இடம் ஆலோசிக்கிறார்.

வாண்டா மாக்சிமோஃப்

ஆனால் பூதம்தான் கிணறைத் தோண்டுகிறது. தாக்குதல்களுக்கு அவர் தான் காரணம் என்பதை ஸ்ட்ரேஞ்ச் உணர்கிறார்.

வெஸ்ட் வியூ – மேல்பார்வை நகரம் image (c) marvelcinematicuniverse.fandom.com

வெஸ்ட்வியூ நகரத்தில் மாக்சிமோஃப்ற்கு பில்லி, டாமி இரு குழந்தைகள் இருக்கின்றன.

வெஸ்ட் வியூ நகரத்தில் மாக்சிமோஃப் – image (c) marvelcinematicuniverse.fandom.com

அவர்களுடன் மீண்டும் ஒன்றுசேர முயல்கிறார். டார்க்ஹோல்ட் என்கிற மாந்திரீக நூலைக் கரைத்துக்குடித்து கருஞ்சிவப்பு சூனியக்காரி ஆகிறார் (ஸ்கார்லெட் விட்ச்). அதன் பிறகு அமெரிக்கா சாவேஸின் பிரபஞ்சப் பயணத் திறன்களை பயன்படுத்திக்கொண்டு, வெஸ்ட்வியூவில் இருந்த காலத்தில் அவர் உருவாக்கிய குழந்தைகளான பில்லி மற்றும் டாமியுடன் மீண்டும் இணையலாம் என்று மாக்சிமோஃப் நம்புகிறார்.

Kamar-taj

சாவேஸை ஒப்படைக்க மறுக்கிறார் ஸ்ட்ரேஞ்ச். அவரை கமார்-தாஜ் புத்த மடாலயத்தினுள் ஒளித்து வைக்கிறார். சூனியக்காரி மாக்சிமோஃப்புக்கும் வோங் தலைமையிலான மடாலய மாந்திரீகர்களுக்கும் போர் நடக்கிறது. ஆனால் சாமர்த்தியமாக பல மந்திரவாதிகளைக் கொள்கிறாள் மாசிமோஃப். சாவேஸ் தன்னையும் ஸ்ட்ரேஞ்சையும் எர்த்-838 க்குக் கொண்டு செல்கிறார்,

அந்த எர்த்-838ல் உள்ள ஒரு புறநகரில்தான் மாக்சிமோஃபின் பிறவி தனது குழந்தைகள் பில்லி மற்றும் டாமியுடன் வாழ்ந்து வருகிறார். சாவேஸ் தப்பிச்செல்லும் அதே சமயத்தில் மாக்சிமோஃப் ‘டார்க்ஹோல்ட்’ மாந்திரீகத்தைப் பயன்படுத்தி கனவு நிலையில் அதே எர்த்-838ல் வாழும் தனது பிறவியைக் கட்டுப்படுத்துகிறார். கமார்தாஜ் தாக்குதலில் உயிர் பிழைத்து எஞ்சியிருக்கும் புத்த மாந்திரீகப் பெண், சாரா, தன் உயிரைத் தியாகம் செய்து, சூனியக்காரியின் ‘டார்க்ஹோல்ட்’ மந்திர நடவடிக்கையை அழித்து, அவள் கனவு நடையை உடைக்கிறாள்.

சாரா

கோபமடைந்த மாக்சிமோஃப், வோங்கை, தடைசெய்யப்பட்ட புராதனக் கோவிலான வுண்டகோர் மலைக்கு அழைத்துச் செல்ல கட்டாயப்படுத்துகிறார். அங்கே மீண்டும் கனவு நடையைத் தொடர்கிறார். தனது பிரதிநிதிப் பிறவியின் மூலம் அழிவுகளை ஏற்படுத்துகிறார்.

image (c) marvelcinematicuniverse.fandom.com

இதற்கிடையில் ​​ஸ்ட்ரேஞ்ச் மற்றும் சாவேஸ் ஆகியோர் உதவி தேடிக்கொண்டிருக்கின்றனர். அப்போது எர்த்-838 இன் தலைமை மாந்திரீக வீரர் சுப்ரீம் கார்ல் மோர்டோவால் கைது செய்யப்பட்டு, மொர்டோ, பெக்கி கார்ட்டர், பிளாக்ககர் போல்டகன், மரியா ராம்பியூ, ரீட் ரிச்சர்ட்ஸ் மற்றும் சார்லஸ் சேவியர் ஆகியோரைக் கொண்ட குழுவான ‘இல்லுமினாட்டி’யின் முன் கொண்டுவரப்படுகின்றனர்.

கார்ல் மோர்டோ

விட்டகுறை தொட்டகுறையாக ஸ்ட்ரேஞ்ச் அங்கே மாட்டிக்கொள்கிறார். முன்பு தானோஸைத் தோற்கடிக்கும் முயற்சியில் இல்லுமினாட்டிகள் தங்கள் பிரபஞ்சத்தின் டார்க்ஹோல்ட்டை பொறுப்பற்ற முறையில் பயன்படுத்தினர். அதனால் எர்த்-838 இன் ஸ்ட்ரேஞ்ச் பிறவிதான் அந்தப் பிரபஞ்சத்தை அழிக்கும் “ஊடுருவியை” தூண்டியது என்று அவர்கள் விளக்குகிறார்கள்.

தானோஸ்

தானோஸை தோற்கடித்த பிறகு, இல்லுமினாட்டிகள் அதிக தீங்கு விளைவிப்பதைத் தடுக்க அவர்களின் ஸ்ட்ரேஞ்ச் பிறவியைக் கொன்றுவிடுகின்றனர். எர்த்-616 இன் ஸ்ட்ரேஞ்ச் (தற்போது உதவி கேட்டுக்கொண்டு இருப்பவர்) இதேபோல் ஆபத்தானவர் என்று மோர்டோ நம்புகிறார்.

இல்லுமினாட்டிகள் ஸ்ட்ரேஞ்ச் மீதான தீர்ப்பை வழங்குவதற்கு முன்னர், மாக்சிமோஃப் வுண்டகோர் குன்றின் தடைசெய்யப்பட்ட ஆலயத்தில் கனவு-நடையை மீண்டும் நிறுவி தனது எர்த்-838 பிறவியின் உடலை வந்தடைகிறார். மோர்டோவைத் தவிர மற்ற இல்லுமினாட்டி உறுப்பினர்கள் அனைவரையும் அவள் கொடூரமாகக் கொள்கிறாள், சாவேஸுடன் தப்பிச் செல்வதற்கு முன்பு ஸ்ட்ரேஞ்ச் அடிபணிகிறார். இலுமினாட்டியில் பணிபுரியும் விஞ்ஞானியான எர்த்-838ன் ஸ்ட்ரேஞ்சின் முன்னாள்-நிச்சயித்த பெண் கிறிஸ்டின் பால்மரின் உதவியோடு இருவரும் தப்பிக்கிறார்கள்.

இல்லுமினாட்டி விசாரணை

ஸ்ட்ரேஞ்ச், சாவேஸ் மற்றும் கிறிஸ்டின் ஆகியோர் பிரபஞ்சங்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் நுழைந்து, ‘டார்க்ஹோல்டி’ற்கு எதிரான விஷாந்தி புத்தகத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். அந்தோ பரிதாபம். மாக்சிமோஃப் தோன்றி அதை அழிக்கிறாள். அவள் பின்னர் சாவேஸின் மனதை எடுத்துக்கொள்கிறாள். அதன் திறனைப் பயன்படுத்தி மற்றவர்களை ஊடுருவி அழிக்கப்பட்ட பிரபஞ்சத்திற்கு அனுப்ப முயற்கிறாள்.

இதற்கிடையில் எர்த்-616 இல், மாக்சிமோஃப் சாவேஸின் அதிகாரங்களைப் பெறுவதற்கான அடுத்த கட்ட முயற்சியைத் தொடங்குகிறாள்.

இதனிடையே ஊடுருவி அழிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் ஸ்ட்ரேஞ்ச் பிறவியை, மாக்சிமோஃப்பால் அனுப்பப்பட்ட ஸ்ட்ரேஞ்ச் தோற்கடிக்கிறார். அந்த ஸ்ட்ரேஞ்சின் பிறவியை அந்த பிரபஞ்சத்தின் டார்க்ஹோல்ட் கெடுத்து வைத்துள்ளது. வில்லனாக இருக்கிறார். கெட்டவனாகிய ஸ்ட்ரேஞ்சை கீழே தள்ளி கொன்றபின், ஸ்ட்ரேஞ்ச் எர்த்-616ல் சாவேஸ் உடன் இருந்த மாற்று ஸ்ட்ரேஞ்சின் சடலத்தை கனவு-நடை மூலம் ஊடுருவி பயன்படுத்துகிறார். பிணம் எழுந்து வந்து மாக்சிமோஃப்பிற்கு எதிராக செயல்படுகிறது. ஸ்ட்ரேஞ்சால் அவளை வெல்ல முடிந்ததா? சாவேஸைக் காப்பாற்ற முடிந்ததா என்பதே கதை.

எர்த்-616 – சாவேசும் ஸ்ட்ரேஞ்சும் தப்பி ஒளிந்துள்ள இடம்.

எர்த்-838 – கமார் தாஸ் மடாலய தோல்விக்குப் பிறகு சாவேசும் ஸ்ட்ரேஞ்சும் தப்பிச் செல்லும் பிரபஞ்சம். இங்குதான் மாக்சிமோஃபின் குழந்தைகள் வாழ்கின்றனர்.

Leave a comment