சுதந்திர தின வாழ்த்துக்கள்


உங்கள் பிள்ளைகளின் பள்ளிகள், அருகில் உள்ள அரசு அலுவலகங்களின் கொடியேற்று விழாவில் கலந்து கொள்ளுங்கள்.

பொதுவாகவே இந்தியர்கள் நாம் நம்மை என்றுமே தாழ்வாக மதிப்பிடுபவர்கள். அதிலிருந்து மீள முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள். அரசு நம் எதிர்பார்ப்பை நிஜமாக்குவதில் தாமதமாக்கலாம். அதற்காக நாம் அப்போது அமைந்திருக்கும் அரசுகளைக் குறை கூறலாம். உண்மையை உணர்பவர்கள், இந்திய சுதந்திரம் தினசரி சச்சரவுகளிலிருந்து வேறுபட்டது என்பதை அறிவார்கள். நீங்கள் ஒப்புக்கொண்டாலும் இல்லாவிட்டாலும், உலகில் இன்னமும் தன்னை காலத்திற்கேற்ப மாற்றிக்கொண்டிருக்கும்போதிலும் மக்களாட்சியை மக்களாட்சியாகவே நடத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மக்களாட்சி என்று சொல்லிக்கொண்டு அப்பட்டமான ஒரு கட்சி ஆட்சியை நடத்தும் நாடுகளை, அவற்றின் பண பலத்திற்காகவே சிலாகிக்கும் வெகுஜனங்களுக்கு நடுவில், இந்தியாவின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் உங்களைப் போன்ற நண்பர்கள்……..

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

India
இந்திய சுதந்திர தினத்தின் மகிழ்ச்சியை உங்களுடன் கடைசி பெஞ்ச் பகிர்ந்து கொள்கிறது.

சிங்கையில் இருந்து சுதந்திர தினவிழாவில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளோர் கீழ் கண்ட தளத்தினைப் பயன்படுத்திக்கொள்ளவும்.

https://www.hcisingapore.gov.in/pages.php?id=338

எனவே நான் அலுவலகத்திற்கு 2 மணிநேர பர்மிசன் வாங்கியாச்சு! காலை மணி 8:50 முதல் 9:10 வரை நான் அங்கு அருள் பாலிப்பேன்.

சிங்கப்பூர் இந்தியத் தூதரகத்தின் செல்ஃபி :-)
சிங்கப்பூர் இந்தியத் தூதரகத்தின் செல்ஃபி 🙂

சென்னையிலிருந்தால் பையனுடன் பள்ளிக்குச் செல்லலாம். கடலை மிட்டாய் கிடைக்கும். ம்ம்ம்ம்!

ஜெய் ஹிந்த்

8 thoughts on “சுதந்திர தின வாழ்த்துக்கள்

 1. சமீபத்தில் நான் செய்தித்தாளில் ஒரு கட்டுரை படித்தேன். இந்திய சுதந்திரப்போராட்டம், சுதந்திர இந்தியாவின் மீதான அதன் தாக்கம் ஆகியவற்றை மிகச்சிறப்பாக எழுதியிருந்தார் கட்டுரையின் ஆசிரியர். சுதந்திரம் கிடைத்த பின் எத்தனை சவால்களை இந்தியா எதிர்கொண்டது, தலைவர்களின் நிலைப்பாடுகள் என்று பலவற்றையும் மிகுந்த அக்கறையுடன் அலசி இருந்தார்.
  இந்திய சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிய வித்தியாசமான கண்ணோட்டமாக அந்தக் கட்டுரை அமைந்திருந்தது. படித்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன்.

  நம் சுதந்திரத்தை கொண்டாடுவதில் நாம் சுணக்கம் காட்டவே கூடாது.

  உங்களுக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

  1. அம்மா,
   வாருங்கள்.
   தாங்கள் ஆசிரியையாக இருப்பதால் ஒன்று சொல்ல விரும்புகிறேன். முக்கியமாக நம் பிள்ளைகள் இளம் வயதில் கற்கவேண்டிய முக்கியமான வரலாறு என்பது 1940லிருந்து 1971 (பங்களாதேஷ் பிறப்பு) வரை என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால் இந்தியா மற்றும் இந்தியாவின் முதல் தலைமுறை ஆளுமைகளைப் பற்றிச் சொல்லும் இந்த வரலாறு அரசியல் காரணங்களுக்காக வெளிப்படையாகப் பள்ளிப் பாடத்தில் வருவதில்லை. பிரச்சினை என்ன என்றால் ஒருத்தர் காங்கிரஸ் சார்பாக எழுதுவார். இன்னொருவர் இந்துத்துவா சார்பாக எழுதுவார். இரண்டையும் மறுத்து முஸ்லீம் லீக் சார்பாக எழுதுவார் என்று சந்தேகப்பட்டே, முக்கியமான வரலாற்றை நாம் நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்க மறந்துவிட்டோம்.

   தாங்கள் சொன்ன கட்டுரை மீண்டும் கையில் கிடைத்தால் தட்டிவிடுங்கள்.

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   1. உங்கள் கருத்தை அப்படியே ஏற்றுக்
    கொள்ளுகிறேன். நமது வரலாறே தெரியாமல்தான் இளைய தலைமுறைகள் இருக்கின்றனர். வருத்தமான விஷயம்.

    நானே அந்தக் கட்டுரையை மொழியாக்கம் செய்திருக்கிறேன். ஒரு இணைய இதழுக்கு அனுப்பியிருக்கிறேன். வெளியிடவில்லை என்றால் எனது வலைத்தளத்திலேயே போட்டு விடுகிறேன்.
    இந்தக் கட்டுரையை எழுதியவர் திரு சலில் மிஸ்ரா. தில்லி அம்பேத்கர் பல்கலைக்கழகப் பேராசிரியர். அசல் கட்டுரை கிடைக்கிறதா என்று பார்க்கிறேன். மிக நீண்ட கட்டுரை அது. மிகவும் முக்கியமான பகுதிகளை மட்டும் மொழியாக்கம் செய்திருக்கிறேன்.

   2. நீங்கள் மொழி பெயர்த்துவிட்ட பிறகு மூலக்கட்டுரை எதற்கு. உங்கள் கட்டுரை வெளியீட்டுக்குக் காத்திருக்கிறேன். மிக்க நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s