புதிய மாருதி SX4 – அதிகரிக்கும் சொகுசு கார் போட்டி


நேனோவிற்கும் சரி,  BMW, ஸ்கோடாவிற்கும் சரி இந்தியர்கள் ஆதரவு தந்திருக்கிறார்கள். தற்சமயம் மாருதி வெளியிட்டுள்ள SX4 சந்தையைச் சூடு ஏற்றியிருக்கிறது. தானியங்கி கியருடன் வரும் இந்த மாடலை Hondaவின் Seden மாடலுக்குப் போட்டியாக சந்தை ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

maruti sx4
maruti sx4

ஹோண்டாவிற்கு எதிராக போட்டியில் ஸுஸுகியால் வெற்றி பெறாமல் போனாலும், வெற்றி என்னவோ இந்திய கார் ஆர்வலர்களுக்குத்தான். பலேனோ, SX4 போன்ற மாடல்கள் ஹோண்டாவிற்கு இணையாக விற்பனை ஆகவில்லை என்றாலும்  சாதாரண கார்களில் கிடைக்காத தானியங்கி டிரான்ஸ்மிஷன் குறைந்த விலைக்குக் கிடைத்துள்ளது. அது நல்லவிஷயம்தானே.

Variable Valve Timing (VVT)உடன் கூடிய புதிய சக்தி வாய்ந்த எஞ்சின் இத்துடன் வருகிறது. இதன் மூலம் மாருதி நிறுவனம் இந்தியர்களுக்குத் தருவது என்ன என்றால், ஹோண்டா கார்களுக்கு இணையான திறன், சொகுசு மற்றும் டிசைன்! ஒரு வித்தியாசம்! ஹோண்டா காரில் 5 கியர் டிரான்ஸ்மிஷன் உள்ளது. மாருதியில் 4!

எகனாமிக்ஸ் டைம்ஸ் மக்கள் இந்த காரை சோதனை செய்து பார்த்திருக்கிறார்கள்.  120 கிமீ வேகம் வரை சென்றுள்ளது. என்ன, கொசுறாக கூடவே ஒரு ஹார்லி டேவிட்ஸனை ஓட்டியிருக்கிறார்கள். ஹார்லி 120ஐத் தாண்டி பிரச்சினை இல்லாமல் முன்னே பறந்துவிட்டதாம் !!

Leave a comment